![]() |
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்?
சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர்?
![]() |
minnambalam : ஸ்டாலின் கொடைக்கானல் விசிட் முடிந்ததில் இருந்து, சில முக்கியமான தகவல்கள் திமுகவின் டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அடுத்த இவர் யார், அடுத்த அவர் யார் என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கியப் பொருள்.
திமுகவின் சீனியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு பதவியை நினைத்தோ, குறிவைத்தோ தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கையில், சில பேருக்குதான் தானாகவே பதவி தேடி வரும் நிலையும் உள்ளது. திமுகவின் இப்போதைய துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் ஒருவர். அதுவும் பெண் சீனியர்களில் முதன்மையானவர். அடிப்படையில் ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்டவர்.
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதார அமைப்பு
![]() |
மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு
dhinamalar : புதுடில்லி: மருந்து நிறுவனங்களிடம் வாங்கும், இரண்டு கொரோனா
தடுப்பூசிகளும், மாநிலங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு இலவசமாக வழங்கும் என
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில்
கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அதன் விலையை
சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, , மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில
அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும்
நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேரள
முதல்வர் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம்
ரமேஷ் கட்டுரை ஒன்றில், கோவிஷீல்டு மருந்து விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
விலை உயர்வு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சவுதி வங்கதேசம்,
தென் ஆப்ரிக்கா நாடுகள் கொடுத்த விலையை விட அதிகம். இந்தியாவிலேயே
தயாரித்த மருந்து, ஆனால், இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா .
கொரோனா தடுப்பூசியை விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்டும் திறமையாக கையாள்வது எப்படி? இந்தியா டுடேயின் நேரடி கள ஆய்வு காணொளி
Anbe Selva : வட இந்தியா ஏன் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது?? //மிக முக்கியமான பார்வை.. கட்டாயம் படிக்கவும்...
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த உயிர்கள்,
உத்தரபிரதேசத்தில் திறந்தவெளியில் எரியும் உடல்கள்,
மத்தியபிரதேச ஆம்புலன்ஸ், குஜராத்தில் உருகும் மின்மயானம்,
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சமீப நாட்களில் மண்டையை குடைவது இதுதான்.
பிரிட்டிஷ் வெளியேறிய பிறகு வட இந்திய சமூகம் முழுமையாக தேங்கிப் போய் இருக்கிறது,
கெட்டி தட்டிப் போன சனாதன தர்மத்திற்குள் தளர்வை ஏற்படுத்தும் எந்த விதமான சிந்தனைப் போக்கும் அங்கே வளரவில்லை.
அப்படியே தென்னிந்திய வந்தால் இன்றைய ஆந்திர கர்நாடக கேரளாவை உள்ளடக்கிய அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கியது,
நாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பேச்சாளர்களுக்கு கொளத்தூர் மணி எச்சரிக்கை
![]() |
அந்த கட்சியின் சில பொறுப்பாளர்களும், திராவிடர் இயக்கம் குறித்தும், என்னைக் குறித்தும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும்,
ஒருமையில் பேசுவதும், நிதானமின்றி சினமூட்டும் சொற்களை பயன்படுத்துவதும், நம்மை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் கீழ்த்தரமான இயல்பை வெளிப்படுத்தி எழுதுவதும், பேசுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இந்துத்துவவாதிகளின் இப்பாணியை அவர்களின் நேச சக்தியான இவர்களும் கடைபிடிப்பதில் நமக்கு வியப்பு ஏதும் இல்லை.
இவற்றைப் பார்த்து கோபமுற்ற, சமூக வலைதளங்களில் இயங்கும் நம்முடைய தோழர்களில் சிலர் அவர்களைப் போலவே கடும் சொற்களைப் பயன்படுத்தி விடையளிப்பது என்ற போக்கு தற்போது தொடங்கியிருக்கிறது.
பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலைத் தாக்கு என்ற முறைகேடான விதிகளின் படி நடந்து கொள்ளுகிற அவர்களுக்கு, அவர்களைப் போலவே கீழிறங்கி பதில் உரைப்பது என்பது நம்முடைய தரத்தைக் குறைத்துக் கொள்வதாகவே நான் கருதுகிறேன்.
சனி, 24 ஏப்ரல், 2021
தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியின் வரலாறு . கல்லூரிகளின் பட்டியல்
தமிழ்நாட்டு வளர்ச்சியை வடநாடுகள் நெருங்க இன்னும் பல ஆண்டுகள் தேவை .. குஜராத் உத்தரபிரதேசம்... ...
![]() |
நம்மை நோக்கி வரிசையாக கேள்வி கேட்டவர்கள் கூடவே குஜராத்தில் நாங்கள் இதை செய்திருக்கிறோம், மத்தியபிரதேசத்தில் நாங்கள் அதை செய்திருக்கிறோம் என்று கலர் கலராக கயிறு திரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே பொய்...
நீங்க வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் தான்...
வளர்ச்சியில் எங்களை நெருங்க இன்னும் 100 வருசமானாலும் முடியாது,
திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?
![]() |
minnampalam : சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் திருணமூல் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிக்க தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்துக்கு என நூற்றுக்கணக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், அண்மையில் தேர்தல் ஆணையம் மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கு வங்காளத்துக்கு என்று நியமித்தது.
பிகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் துபே, ம்ன்ரல் காந்தி தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள். மாநிலம் முழுதும் எங்கே எந்த நேரத்திலும் போலீஸ், துணை ராணுவப் படைகளை அனுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
NEP மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மீண்டும் வேலையைக் காட்டிய மோடி அரசு!
![]() |
kalaignarseithigal.com - Vignesh Selvaraj : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு இன்னொரு சாட்சியாக, தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனது ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்!” - நடிகை ஜெனிபர் பரபரப்பு புகார்!
![]() |
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் 23ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:"நான், எனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரனுடன் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து 25.08.2019 அன்று திருமணம் செய்து கொண்டேன். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் துணை இயக்குநர் நவீன்குமார் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, நான் எனது முதல் திருமணம் பற்றியும், விவாகரத்துப் பற்றியும் கூறினேன்.
கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு .. தமிழகத்தை மிரட்டும் கொரோனா..
![]() |
குஜராத்தில் பா.ஜ.கவின் 25 வருட ஆட்சியில் ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை” இதுதான் குஜராத் மாடல்’
கலைஞர் செய்திகளை :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன்.
இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.
பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.
உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் . 3,45,147 பாதிப்புடன் தொடர்ந்து புதிய உச்சம்!
Rayar A - /tamil.oneindia.com/ : வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,45,147 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,621பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 65,971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,866 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா அதிகரிப்பு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,098,835 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 124,320,293 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி
![]() |
Vivekanadan T : சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட ஆக்சிஜன் சிறிய அளவில் தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது....
திராவிட இயக்க தலைவர்கள் எங்களுக்காக செய்த சாதனை அது ....
ஆனால் மருத்துவ உள்கட்டமைப்பு என்பதையே அறியாத மத்திய பாசிச ஆட்சியாளர்களால் ,
அரசு மருத்துவ நிறுவனங்களை செயல்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதை மறுத்து,
தனியார் முதலாளிகளிடம் எல்லா ஒப்பந்தத்தை கொடுத்திவிட்டு,
பின்பு மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும்,
மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது ..?
உத்தர பிரதேசம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி
![]() |
tamil.news18.com :உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கடந்த 10 தினங்களில் வென்ட்டிலேட்டர் கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.l
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உ.பி.யில் ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை இங்கிலாந்தில் வாங்கிய முகேஷ் அம்பானி..
![]() |
tamil.goodreturns.i - Pugazharasi S : இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது.
இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.
இது சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டும் அல்ல, சிறந்த விளையாட்டு துறை வசதிகளையும் கொண்டுள்ளதாம். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 590 கோடி ரூபாய்க்கு மேல். இத்தனை கோடிகள் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த ஹோட்டலில் என்ன சிறப்பம்சம், வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
இங்கிலாந்தில் உள்ள இந்த ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் suite அறைகள் உள்ளன.
இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்
malaiamalar : துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.
![]() |
இஸ்லாமிய நூல்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் ! இலங்கை அரசு அறிவிப்பு
விடிவெள்ளி : (ஏ.ஆர்.ஏ.பரீல்) : வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு புதிய விதிகளை விதித்துள்ளது.
புதிய விதிகளுக்கமைய இறக்குமதி செய்வதற்கு முன்பு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். முன் அ-னுமதியின்றி இஸ்லாமிய நூல்கள் இறக்குமதி செய்ய முடியாது.
நிறுவனங்களோ, அமைப்புகளோ,தனிநபர்களோ இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதென்றால் அதன் பிரதியொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
அத்தோடு நூலின் பெயர், நூலின் உள்ளடக்கம், ஆசிரியரின் பெயர், அவரது பின்னணி, நூலில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளனவா-? அந்நூல் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதா? எந்த நாட்டிலிருந்து நூல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எனும் விபரங்கள் இறக்குமதியாளர்களால் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேலும் புத்தகம் விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றதா? அல்லது நன்கொடையாகக் கிடைக்கப்பெறுகிறதா? நன்கொடையென்றால் நன்கொடையாக வழங்குபவரின் விபரங்கள் என்பனவும் தெரிவிக்கப்படவேண்டும்.
வெள்ளி, 23 ஏப்ரல், 2021
ஜெயலலிதாவின் அண்ணா நூலக பயங்கரவாதமும் ஜெயவர்த்தனாவின் யாழ் நூலக பயங்கரவாதமும்
![]() |

அதேபோல், கலைஞர் கட்டிய 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை' பாழடையச் செய்தார் ஜெயலலிதா. குழந்தைகள் நல மருத்துவமனையாக இதை மாற்றப் போகிறேன் எனத் திமிராய்ப் பேசிய ஜெயாவை அடக்கிய நீதிமன்றம், நூலகம் தொடர வேண்டும் என்றது.
178 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்தியாவின் பெரிய நூலகமான, தெற்காசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான, ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் கொண்ட மாபெரும் நூலகத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி திருமண நிகழ்விற்கு வாடகைக்கு விட்டார் பார்ப்பனத் திமிர் நிரம்பிய ஜெயலலிதா.
ஏராளமான போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான விலையுயர்ந்த நூல்கள் செல்லரித்துப் போயின.
50000 க்கும் மேற்பட்ட நூல்கள் திருடு போயிருக்கின்றன. நூலகப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயையும் தன் போயஸ் தோட்டத்திற்குள் பதுக்கிக் கொண்டார் ஜெயா.
எங்கு திரும்பினும் ஓலம்... பிணங்களின் குவியல்; எரிந்து கொண்டேயிருக்கும் சுடுகாடுகள்!
![]() |
tamil.samayam.com :கொரோனாவின் 2ஆவது அலையின்கீழ் இந்தியா தள்ளாடிக் கொண்டுள்ளது. பல
மாநிலங்கள் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல்
போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான
உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது.
அம்மாநிலத்தில் கொரோனா
தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வரும்
போதிலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுதான் நிதர்சனமாக
உள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கொரோனா தவிர வேறு
சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை
என்பதுதான் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம்.கான்பூரை சேர்ந்த நிரஞ்சன் பால் சிங்கின் 51 வயதான தந்தை கடந்த வாரம் இதே
நாள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே
உயிரிழந்தார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 4 மருத்துவமனைகளில்
அவருக்கு அனுமதி கிடைக்காமல் கடைசியாக ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.
ட்ராபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் . எப்படி இருக்கிறார்? - அரசு மருத்துவமனையில்
![]() |
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியின் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.
சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம்.
ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.
ஆக்சிஜனுக்காக ஸ்டேர்லைட்டை கைப்பற்றி ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
![]() |
கலைஞர்செய்திகள் -Janani : கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதும் அதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிவது கடந்த நாட்களாக இந்தியாவின் குரல்களாக உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கடுத்த படியாக மத்திய அரசும் ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க உத்தரவிடலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.
அர்விந் கெஜ்ரிவால் : டெல்லி ஆக்சிஜன் லாரிகளை.. உ.பி.யும் ஹரியானாவும் பிடித்து வைத்துக் கொள்கின்றன..
Vigneshkumar - /tamil.oneindia.com : டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக் கொள்வதாக மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியுள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டிராத் ராம் ஷா மருத்துவமனை, இங்கிலாந்து நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாண்டம் மருத்துவமனை,
ஹொலி ஃபேமலி மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.
அண்டை மாநிலங்கள் இந்நிலையில், டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் லாரிகளை அண்டை மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
















