சனி, 24 ஏப்ரல், 2021

உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் . 3,45,147 பாதிப்புடன் தொடர்ந்து புதிய உச்சம்!

  Rayar A - /tamil.oneindia.com/ :  வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,45,147 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,621பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 65,971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,866 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா அதிகரிப்பு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,098,835 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 124,320,293 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது.


அங்கு 65,483 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மேலும் 746 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து அதிக உயிழப்பு வருகிறது. அங்கு ஒரே நாளில் 65,971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் +2,866 பேர் கொரோனாவால்;இறந்துள்ளனர்

இந்தியா தொடர்ந்து நம்பர் 1 இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,621 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,550,788 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 16,602,456 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 40 பேர் பலியாகியுள்ளனர்

துருக்கி நிலையும் மோசம் பிரான்சில் 32,340 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 332 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 14,761 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 342 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,840 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 398 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 11,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலையும் மோசமாகி வருகிறது. அங்கு மேலும் 49,438 பேர் தொற்றால் பாதிக்க

கருத்துகள் இல்லை: