புதன், 27 மே, 2020

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு

Kanal ArasuKanal Arasu  - நக்கீரன்:   பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி
குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் ஊர்மக்கள் அங்கு வந்து அவர்களை பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல் கனலை அரிவாளால் வெட்ட வரும்போது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் கனலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள் அங்கு வரும்போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக கனல், மனோஜ் ஆகிய இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியது ... தொடரும் ஜாதி ராஜ்ஜியம்

சுசிலா : பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், கடந்த இரு
நாட்களாக பேசியதில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடையங்கள் சிலவற்றை இங்கு தருகிறேன் ....
சில தினங்களுக்கு முன், செல்வி மாயாவதி அவர்கள், ' இந்த அளவிற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து வருவதற்கும், அவர்களின் இந்த ஏழ்மைக்கும் நீண்டகால காங்கிரஸ் ஆட்சியே காரணம், மேலும் பாஜகவும் ஒரு காரணம் ' என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
அது, காங்கிரஸ், ஆட்சியோ, பாஜக ஆட்சியோ மட்டுமல்ல, சமாஜ்வாடி ஆண்டது, பகுஜன் சமாஜ் ஆண்டது, இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனென்றால், வளர்ச்சி என்பது சமூக மாற்றத்திலிருந்து தான் வர வேண்டும். தென் மாநிலங்கள் வளர்ச்சிக்கு அது தான் பெரிதும் உதவியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், சமூக மாற்றம் தான். அதனை சில சமூக அமைப்புகள், சமூக இயங்கங்கள், கட்சிகள் என அனைத்தும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றன. அவைகள் முதலில் செய்த மிக முக்கிய மூன்று பணிகள், கல்வி, சுகாதாரம், நிலப்பிரபுவத்துவம். அதில் கல்வியை பரவலாக கொண்டு சென்றது. கிராமப்புறங்கள் முதற்கொண்டு எல்லோரும் படிக்கும் அளவிற்கு எளிதாக்கியது,

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச்சர்


BBC : இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 55. செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே காலமானதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்லேவை ஆறுமுகன் தொண்டமான் இன்று சந்தித்ததாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகன் தொண்டமான் யார்? 1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

செவ்வாய், 26 மே, 2020

கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்


தினமலர் :இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது

14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!


 மின்னம்பலம் : திருச்சி சி மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இருக்கும் மல்லிகைத் தோட்டத்தில், உடலில் பலத்த காயங்களுடன் 9 வயது சிறுமி அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிறு அன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
சிறுமியின் உறவினரும் பக்கத்து வீட்டுக்காரருமான அந்த சிறுவன் வலுக்கட்டாயமாகச் சிறுமியை அந்த மல்லிகை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியிடம் தவறுதலாக நடக்க முயன்றதால் அதற்குச் சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறுமியின் தலையில் கல்லால் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பித்து வந்துள்ளார். அதோடு, அக்கம்பக்கத்தினரிடம் சிறுமி இவ்வாறு ரத்த காயங்களுடன் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்-

விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்- மத்திய மந்திரி தகவல் மலைமலர் :60 நாட்களுக்குப்பின் உள்நாட்டு விமான சேவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை
இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. மேற்கு வங்காள மாநிலம் விமான சேவையை தொடங்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. விமானங்கள் கேன்சல், பயணிகள் அவதி போன்ற குழப்பங்கள் நிலவினாலும், முதல் நாளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக மத்திய விமானத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெரியாதவண்ணம் நடைபெறுகிறது


Karthikeyan Fastura : · மெய்ப்பொருள் youtube சானலில் இன்டெர்வியூ கொடுக்கும்போது இந்த பகுதியை தூக்கிடுவாங்கன்னு நினைத்தேன். தனியாக ஒரு விடியோவா போட்டிருக்காங்க. பொருளாதார துறையில் மிகப்பெரிய அளவில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெரியாதவண்ணம் நடைபெறுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். அதற்கு அடுத்த இடத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் வருகிறார்கள். பழங்குடியினர் இதில் இல்லவே இல்லைன்னு சொல்லலாம். பார்ப்பனர்கள், வட இந்திய பனியாக்கள் எப்படியெல்லாம் நிதி அதிகார மட்டத்தில் கோலோச்சுகிறார்கள். அவர்களை தவிர பிறருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் என்று இந்த வீடியோவில் பேசியிருப்பேன் இன்னமும் தெளிவாக பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் பிற்படுத்தப்பட்ட சமூகமோ, ஒடுக்கப்பட்ட சமூகமோ "இன்னொரு அம்பேத்கார் தோன்றிவிடக்கூடாது" என்பதில் நிதி அதிகாரமட்டத்தில் இருக்கும் பார்ப்பன பனியா கூட்டம் தெளிவாக வேலைபார்க்கிறது. இதை பேசுவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்பதே வருத்தம் கொள்ளவைக்கிறது.

உ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாநிலங்கள் .... உபி முதல்வர்

அனுமதியின்றி தொழிலாளர்களை அழைத்து செல்ல முடியாது: உ.பி முதல்வர்!மின்னம்பலம் : இதன்மூலம் மனிதத்தன்மையற்ற நிலைகளில் இதுவரை சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். “உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் எப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற சூழ்நிலைகளிலும், பாதுகாப்பற்ற தன்மையோடும் பணியாற்றி வந்தனர், குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பிற மாநிலங்களில் சிரமப்பட்டார்கள்
என்பதையும் பார்க்க முடிந்தது. தொழிலாளர்களுக்கு இனி அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், உறைவிடம் ஆகியவற்றை வழங்க விரும்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அஸ்வதி இதுகுறித்து கூறுகையில், “இந்த கமிஷன் குறைந்தபட்ச வேலைவாய்ப்பை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அமைப்பு இன்னும் முழுதாக உருவாக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள், ஊரக முன்னேற்றம் ஆகிய பிரிவுகளிலிருந்து உயரதிகாரிகள் இணைந்து இதை தொடர்வார்கள் என தெரிகிறது.

25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு

25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர் கட்டுப்பாடுமாலைமலர் : சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25 என்ற கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை: மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ
தன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25 மட்டுமே என்று கட்டுப்படுத்தப்படுகிறது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்குத் தடை!

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்குத் தடை!மின்னம்பலம் : கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாகத் தற்போது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) தற்காலிகத் தடை விதித்து மே 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.
இந்த மருத்தை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்ட ஓர் ஆய்வை அடுத்து, WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று (மே 25) நடந்த காணொலி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


தந்தி டிவி :சேலத்தில் இருந்து 800 வடமாநில தொழிலாளர்கள், ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர். சேலத்தில் இருந்த  761 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்த 36 பேர்,  மற்றும் திருப்பூரில் இருந்த 3  பேர் என மொத்தம் 800 பேர், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னையில் 25 விமானம் ரத்து


தினகரன் : புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி  வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து 2 மாதத்துக்கு பின் நேற்று இயங்கத்  தொடங்கிய நிலையில் 630க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.  கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு மற்றும்  சர்வதேச விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மே 25ம் தேதி  முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கப்படும் என கடந்த 21ம் தேதி மத்திய  அரசு அறிவித்தது. அதே நேரத்தில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படுவது  குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து  நாடு முழுவதும் நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து  தொடங்கியது.

கவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை நடிகர் ( May 25, 1939),

Karthikeyan Fastura : நகைச்சுவையில் முற்போக்கு கருத்துக்கள் என்றால்
கலைவாணர் காலத்தில் இருந்து ஆரம்பிக்கணும். எம்.ஆர்.ராதா இந்த விஷயத்தில் கிங். எல்லா பிம்பங்களையும் கேலிக்கு ஆளாக்கியவர். ஆனாலும் பகட்டான வேடம் கொண்டு இதெல்லாம் பேசுவார். பிச்சைக்காரராக இருந்தாலும் பகட்டை விடாத பிச்சைக்காரராக இருப்பார். ஒடுக்கப்பட்ட மக்களை சேர்ந்த ஏழையாக எந்த படத்திலும் நான் பார்த்த ஞாபகம் இல்லை
இந்த விஷயத்தில் தான் கவுண்டமணி எம்.ஆர்.ராதாவை சற்று முந்துகிறார். எல்லாவிதமான ஒடுக்கப்பட்ட இனத்தினரையும் தன் கதாபாத்திரத்தில் கொண்டுவந்திருக்கிறார். நாவிதராக, சலவை தொழிலாளியாக, வெட்டியானாக, பறை அடிப்பவராக, அருந்ததியராக என்று அவர் அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிபலித்தவர் தமிழ் சினிமாவில் இருவர் தான் வடிவேலு மற்றும் சார்லி. இதில் இவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கவுண்டமணி.
அந்த பாத்திரத்தில் நடிக்கும் போது சாதி திமிர் கொண்ட மேல்சாதியை இவர் டீல் பண்ணும் விதமே வேறு. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு காட்சிகள் ஞாபகம் வருகிறது.
அய்யர் ss.சந்திரன் : பிள்ளையை கூட்டிண்டு எங்க போற ?
கவுண்டமணி : பிள்ளையை பள்ளிக்கூடத்துல படிக்க வைக்க போறேன்
அய்யர்: உன் பிள்ளை படிக்க போய்ட்டா இங்க வெட்டியான் வேலை யாரு பார்க்கிறது ?

திங்கள், 25 மே, 2020

BBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’

101659247_2c1059ee-3b04-4993-868d-2d97789b90fa101662308_gettyimages-108425609BBC : அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை.
என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடி.
101662306_333620b2-46b6-4878-9a80-60fb35ef80a4
நீனா கோபால்
அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது இந்தியாவிலும் நடந்தேறியது. 1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானார்.
முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார்.
அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
அங்கிருந்து சுமார் பத்தடி தொலைவில் கல்ஃப் நியூஸின் செய்தியாளராக பணிபுரிந்தவரும் தற்போது டெக்கான் க்ரானிகலின் பெங்களூர் நிருபராகவும் பணிபுரியும் நீனா கோபால், ராஜீவ் காந்தியின் நண்பர் சுமன் துபே ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை வெளியிட்ட நியு யோர்க் டைம்ஸ்

Devi Somasundaram :; · ஒரு பத்திரிக்கை செய்தி எப்படி இருக்கனும் என்பதன் அடையாளம்....இறந்து போன ஒரு லட்சம் பேரின் பெயரை வெளியிட்டதோடு .தகவலை தகவலா மட்டும் சொல்லி இருப்பது தான் ஊடக அறம் ...ஒபாமா நிர்வாக கோளாறு அல்லது டிரம்ப் நிர்வாக கோளாறு ( உண்மை அதுவா
இருந்தாலும் ஒரு பத்திரிக்கை அதை எந்த சூழலில் பேச்னுமோ அப்ப தான் பேசனும் ) ..என்று எந்த அதீதமும் இல்லாமல் சொல்லி இருக்கு
Jemi Raja :  இங்கேயும் இருக்குதுங்களே..குழந்தைங்க கக்காவ துடைக்கிறதுக்கு கூட லாயக்கில்லாததுங்க..
ReKa Balamurugan : இங்கிருக்கும் டைம்ஸ் ஜெயாவுக்கு வாசித்தது...இன்று எடப்பாடியின் ஆளுமைக்கும் வாசிக்கின்றது.
Gopalsamy Kannan : நம்மூர் அச்சு ஊடகங்கள் தொழிலதிபர்னா செய்தி போடும், சாமானியன் எனின் செய்தியும் போடாது, பெயரும் போடாது...
Mari Muthu : ஜனநாயக நாடு ன்னு அப்படித்தான் ... இன்னும் ஒரு பத்து லட்சம் பேர் இறந்தாலும் யாராவது அமெரிக்கா போக விருப்பமில்லை னு சொல்வாங்களா ?..
 Mari Muthu : தீ வைத்து எரித்து கொலை செய்த தையே ..வீடு தீப்பிடித்து மாணவி உடல் கருகி சாவு ன்னு சொல்லும் அரசும் அதை அப்படியே போடும் ஊடகங்களும் இருக்கும் நாடு இது ...இங்கே போயி இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ?

“வடமாநிலங்கள் நிலை என்ன?” - ஜெ.ஜெயரஞ்சன்


மின்னம்பலம் : வடமாநிலங்களின் நிலை குறித்து தெளிவாக எடுத்துவைக்கிறார் ஜெயரஞ்சன்.
ஊரடங்கால் சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக நேரடியாக உரையாற்றி வருகிறார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் ஏன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று நேற்று எடுத்துக் கூறியவர், சமூக மாற்றத்தால் தமிழகம் பெற்ற வளர்ச்சியையும் எடுத்துவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (மே 25) பேசிய ஜெயரஞ்சன், "1990க்குப் பிறகு தென் மாநிலங்களில் வறுமை குறைந்த அளவுக்கு வட மாநிலங்களில் வறுமை குறையவில்லை. எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வறுமையின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. வறுமையிலும் பின் தங்கிய கடைசி நிலையில் இருக்கும் மாவட்டங்கள் பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளன. இவை bimur மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. கடைசி 100 வறுமை மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் 91 மாவட்டங்கள் இந்த மாநிலங்களில்தான் உள்ளன” என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவு!

தமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவு!மின்னம்பலம் : தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31ஆவது பட்டம் பெற்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி மறைந்தார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.
மூன்றரை வயதாக இருக்கும்போது ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி, சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தாராக அறியப்படுபவர். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வலம் வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. சரளமான ஆங்கிலம், துப்பாக்கி சுடுதல், ரக்பி, சிலம்பு, வாள் வீச்சு என பல துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் ஆன்மிக நாட்டம் காரணமாக எல்.ஐ.சி முகவராக மட்டும் தன் வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு அரண்மனையில் வாழ்ந்து வந்தார். காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஊர்மக்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார்.

சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிமாலைமலர் : சர்வதேச விமானங்களில் அடுத்த 10 நாட்களுக்கு நடு இருக்கையை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என விமானி தேவன் கனானி, மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், அரசு விதிமுறைகளின்படி நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது!.. வீடியோ


 நக்கீரன் :  60 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்து விமான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். விமான பணிப்பெண்களும் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் முழு கவச உடையை அணிந்திருந்தனர்.
சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் டெல்லி புறப்பட்டது. பயணிகள் வருகை குறைவால் 260 பேருக்குப் பதில் 111 பேருடன் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது. பயணிகள் குறைவால் முதல் நாளிலேயே சென்னையிலிருந்து செல்லும் 15 விமானங்களும், சென்னைக்கு வரும் 13 விமானங்களும் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதிர்காலம்:

சிறப்புக் கட்டுரை: உலகின் எதிர்காலம்: அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய் மின்னம்ல்பம் :  ராஜன் குறை : காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான வாக்குறுதியைக் கொடுத்தது. அது வறுமையில் இருப்பவர் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருமானமாக 6,000 ரூபாய் தருவதாகச் சொன்னது. இந்த வாக்குறுதி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்குக் குறைந்த நாட்களுக்கு முன்னர் இதை அறிவித்ததாலும், கட்சியினரால் மக்களிடையே இந்தப் புரட்சிகர திட்டத்தை விளக்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாததாலும் நியாயமான அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்முனையில் நரேந்திர மோடி அரசு வருடம் 6,000 ரூபாயை மூன்று தவணைகளாகத் தருவதாக அறிவித்து, முதல் தவணையை உடனே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பதிந்தவர்களுக்குக் கொடுத்தது. நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேலானது என்றும் மக்கள் கருதியிருக்கலாம்.

திருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

thathachariyar.blogspot.com/ :உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.
திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்.
மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.

நீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்கள் நடு நிலமையாளர்கள்?

Kannan Thiagarajan : இப்போ வாய்த்தவறி தாழ்த்தப்பட்டோரை நடத்துவது போல் எங்களை தலைமைச் செயலர் நடத்தினார்,என தயாநிதி சொன்னது சட்டப்படி குற்றம் எனச்சொல்லும் திருமா, 
அதே இனத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணனை பார்ப்பன நீதிபதிகள் அவமானப்படுத்திய போது , இந்த நபர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற ஐயம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் சொன்னபோது கர்ணனின் நிலைக்கு ஆதரவாக எத்தனை பட்டியலின மக்கள் கொதித்தெழுந்தினர். ?
திமுக காரன் நாங்கள் அந்த இனத்திற்கு எப்படிப்பட்ட நன்மைகளை யெல்லாம் செய்திருக்கிறோம் என பெருமைப்படுத்திய
பாரதி மீது வழக்கு போட்டதை ஆதரிக்கும்" சிந்தனையாளர்கள்"!!?? 

இப்போது பட்டியலின் மக்கள் களை என்னவென்று அழைப்பது? தலித்தென்றா? 
ஹரிஜன் என்றா? 

திருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால வெற்றிகள்

பேட்மின்டன்கலைஞர்
Nilavinian Manickam : திருவாரூரில் இருந்து சென்னைக்கு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு டிக்கெட் எடுக்காமல் (அதைத்தான் திருட்டு ரயில்னு சொல்றானுங்க) பயணம் செய்து வந்த
கருணாநிதி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் குவித்து இன்று தன்னுடைய வாரிசுகளுக்கு விட்டுச் சென்றுள்ளார் என்ற அவதூறுக்கு வயது எத்தனை எனத் தெரியவில்லை. கலைஞர் ரயில் கழிவறையில் ஒளிந்து கொண்டு பயணம் செய்வது போன்ற ஒரு படத்தை நேற்றுகூட ஒரு நண்பரின் பதிவில் கண்டேன். எவராலோ தொடங்கப்பட்ட இந்த அவதூறுக்கு ஆதாரம் உண்டு.
திருக்குவளையில் பிறந்து தொடக்கக் கல்வியை அங்கேயே கற்ற கலைஞர், உயர்நிலைக் கல்வியை திருவாரூரில் உள்ள வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். தன்னுடைய குடும்பச் சூழல், கல்வி பற்றி கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் இப்படிக் கூறுகிறார்...

பாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது? அவர் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்?

ராஜா ஜி : முன்னாள் பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி, இல.கணேசனால் நடத்தப்பட்ட வரலாறும்... அவர் திமுகவில் இணைந்த வரலாறும்...
கிருபாநிதி அவர்கள் 2000 ஆண்டு முதல் 2003 வரை பாஜக தலைவராக நீடித்தார்.
இல.கணேசன் தன்னை ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், அடித்ததாகவும் பாஜகவில் தீண்டாமை நிலவுவதாகவும் வெளிப்படையாக அறிவித்து அதிர வைத்தார்.
இந்தூரில் நடந்த பாஜகவின் தேசிய அளவிலான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது தனக்கு நடந்த கொடுமை குறித்து 2003 ஏப்ரலில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் முக்கியமானது.
“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல.கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.
அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார். நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலைமையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த Flash Back

T.பாலசுப்ரமணிய ஆதித்தன். :
சீமான் , நெல்லைக் கண்ணன்...
2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...
அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.
நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.
அது சீமானும், நெல்லை கண்ணனும். சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது. குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும்
தெரியாது.
அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.
நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.
சீமான் குளிக்கிறார். அமருங்கள் என்றனர். நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.
நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.