வியாழன், 9 நவம்பர், 2017

லக்ஷ்மி ! பெண்களின் பாலியல் சுதந்திரம் ... சமரசம் இன்றி துணிவுடன் ,,, குறும்படம்!


Lulu Deva Jamla :அந்த பெண் செய்தது தவறா சரியா, நியாயமா அநியாயமாங்கிற விவாதங்களே அபத்தமானவை. தன் உடல், உணர்வு, மன தேவைகளை தான் விரும்பும் வகையில் நிறைவேத்திக்கிறது அவளின் அடிப்படை உரிமை. அதில் தலையிட அவள் கணவனுக்கே உரிமையில்லை. சமூகம் குறிப்பாய் பெண்கள் அந்த பெண்ணின் மீது தவறிருப்பதாய் வைக்கும் விமர்சனங்கள் தங்களால் அப்படி ஒரு துணிச்சலான முடிவெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் விளைவாய் ஏற்படும் பொறாமை உணர்வேயன்றி வேறில்லை.
அப்புறம் அந்த பெண்ணை தவறானவளாய் எடுத்து கூறி தன்னை பத்தினியாய் (to maintain the good girl image) சமூகத்துக்கு காட்டிக்கொள்ள மெனக்கெடுவதும் தெளிவாய் தெரிகிறது பல பெண்களின் விமர்சனங்களிலும். ஆனால் இவர்கள் தங்கள் மனதில் அந்த பெண்ணின் செயலை பாராட்டுபவர்களே என்பதே நிதர்சனம்.
அந்த பெண் செய்தது சரியேன்னு வெளிப்படையா சொன்னா எங்க நம்ம புருசனுக்கு நம்ம மேல டவுட் வந்துரப்பிடாதேன்னு பயப்படுறா எல்லாவளும் 😂😂😂 அப்டியும் எவளாச்சும் சரின்னு அடிச்சு சொல்றான்னா அவ தன் புருசனையும் வீட்டுக்காரவுங்களையும் ப்ளாக் பண்ணியிருப்பா இல்லன்னா ஃபேக் ஐடி வச்சிட்டு இங்கு மூஞ்சி காட்டாம விலசுறவளா தான் இருப்பா!
200% வெரிஃபைட் ; நான் லுலு

இமாச்சல் சட்டசபை தேர்தல்: 74 சதவீதம் வாக்குப்பதிவு.. இதுவரை இல்லாத அளவு அதிக வாக்கு பதிவு

இமாச்சல் சட்டசபை தேர்தல்: 74 சதவீதம் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்மாலைமலர் : இமாச்சல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. வீரபத்ர சிங் (83) முதல் மந்திரி ஆனார். பாரதிய ஜனதா 26 தொகுதிகளை பிடித்தது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
 காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி வீரபத்ர சிங் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் பிரேம்குமார் துமால் முதல் மந்திரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களுக்கிடையே கடும் போட்டி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

டிரைவர் இல்லாமல் 13 கி.மீ ஓடிய ரயில்.. பைக்கில் விரட்டி தாவி ஏறிய டிரைவர்.. கர்நாடகாவில்

Shyamsundar - Oneindia Tamil  : பெங்களூர்: கர்நாடகாவில் வாதி என்ற ரயில் நிலையத்தில் இருந்த டீசல் ரயில் எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓட ஆரம்பித்து இருக்கிறது. 
முதலில் மெதுவாக சென்ற இந்த ரயில் எஞ்சின் போக போக வேகம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மேலும் இந்த ரயில் எஞ்சின் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பல ரயில் நிலையங்களை வேறு கடந்து சென்று இருக்கிறது. இந்த ரயில் எஞ்சினை வேகமாக பைக்கில் துரத்தி சென்ற ஓட்டுநர் பல கிமீ பயணித்த பின் ஒருவழியாக சாகசம் செய்து ரயில் எஞ்சினை நிறுத்தினார். தானாக சென்ற ரயில் தானாக சென்ற ரயில் கர்நாடகாவில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான குல்பர்கா மாவட்டத்திலுள்ள 'வாடி' என்ற ரயில் நிலையத்தில் இன்று ஒரு டீசல் ரயில் எஞ்சின் சுத்தம் செய்யப்பட்டு வந்தது. மும்பை செல்வதற்காக அந்த ரயில் தயார் செய்யப்பட்டு வந்தது. எஞ்சின் முழுக்க டீசல் நிரப்பி தயாராக இருந்த அந்த ரயில் எஞ்சின் தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக டிரைவர் இல்லாமலே ஓட ஆரம்பித்தது.

ஐ.டி. ரெய்டும் தலைவர்கள் கருத்தும்!

மின்னம்பலம் :சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று (நவ.9) வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம் உட்பட 190 இடங்களில் சோதனை நடைபெற்றன.
இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:
தமிழகத்தில், வருமான வரித்துறை ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்புநாதன், விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, ராம மோகனராவ் உள்ளிட்ட பலரின் வீடுகளில் இதற்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்படித் தொடர்ந்து நடந்துவரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பது குறித்துத் தெளிவு இல்லை. தினத்தந்தி ’கன்னித்தீவு’ தொடர் போலத்தான் வருமான வரித் துறை சோதனைகள். இதைப் பற்றிக் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஐடி ரெய்டா, சிடி ரெய்டா? அப்போலோ ஜெயா - சசி விடியோவை தேடி ரெய்ட் ?

ஐடி ரெய்டா, சிடி ரெய்டா? : அப்டேட் குமாருமின்னம்பலம் :1800 அதிகாரிகள், 190 இடங்கள்னு செய்தியை கேட்கும் போது விருது வாங்கப் போகும்போது அவங்களை பத்தி சின்ன முன்னுரை கொடுப்பாங்களே அது மாதிரி இருக்குல்ல. நாளுக்கு நாள் தினகரன் செல்வாக்கை இவங்களே ஏத்திக்கிட்டு இருக்காங்க. பாஜகவுக்கு அடங்கிப் போகலன்னு தான் ரெய்டுன்னு எல்லாரும் பேசுறாங்களே ஆனா இங்க ஒருத்தர் மோடி பக்கம் வர ரெடின்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக தான் தினகரன் மாட்டை கட்டி பூஜை பண்ணிட்டி இருக்காருன்னு கிளப்பி விடுறாருப்பா. அவரும் எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சமேனிக்கு தான் பேட்டி கொடுப்பேன்னு யாருக்கும் சத்தியம் பண்ணி கொடுத்துட்டாரா? தைரியமா இருக்குறதால சிரிக்குறாரா இல்லை காமெடி நடிகர் மதன் பாப் மாதிரி இதுவும் ஒரு பெர்ஃபாமன்ஸ்ஸான்னு தெரியல. அந்த அப்பல்லோ சிடியை எடுக்குறதுக்குதான்னு வேற சொல்றாங்க. சிடி இருக்கோ இல்லையோ அது யாரு கையிலயும் போகுறதை விட தமிழ் ராக்கர்ஸ் கையில கிடைச்சுட்டா தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாயிருவாங்கன்னு நெட்டிசன்ஸ் சாமி கும்பிட்டு இருக்காங்க.
கிரியேட்டிவ்
வருமான வரித்துறை சோதனை வழக்கமானதே, இதை அரசியலாக்குவது தவறு - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
- அமித்ஷா மகன் கோடி கணக்கில் ஊழல் செஞ்சாரே அங்கு ரெய்டு நடத்தப்படுமா

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம்!

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம்!
minnambalam :கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கான மாதவிடாய் கால அவசர உதவிக்காக ‘ஷி பேடு’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தானியங்கி நாப்கின் மிஷின்களைப் பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .மாணவிகள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.
முதல் கட்டமாக 300 பள்ளிகளில் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவிகள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தின்மூலம் பயன் பெறுவர். இத்திட்டத்திற்காக கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

திருமாவளவன் :தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை ....

தினகரன் :தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது: திருமாவளவன்  பேட்டி:
சென்னை: தமிழகத்தில் பாஜக காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை - டி.டி.வி.தினகரன் ஆவேசம்!

நக்கீரன்: மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே தனது மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டுகள்,  இந்த ரெய்டுகளுக்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் எனவும் எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்ச போவதில்லை எனவும் டிடிவி தினகரன் ஆவேசமாக கூறினார்.
இன்று காலை டிடிவி தினகரன் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன் கூறியது..>எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. சசிகலாவும், தினகரனும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பயம் என்பது கிடையாது. யார்யாரெல்லாம் நாங்கள் வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ, அவர்கள் எங்கள் மீது வழக்குகளை போடலாம், என் சித்தியை குற்றவாளியாக அறிவித்து கைது செய்யலாம். எங்களை தேர்தலில் நிற்கவிடாமல் செய்தாலும் இதனை நாங்கள் விடமாட்டோம்.

190 இடங்கள்;1800 அதிகாரிகள்: சசிகலா-தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் சோதனை

தினதந்தி: 190 இடங்கள்; 1800 அதிகாரிகள்: சசிகலா - தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தினர் இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை: சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

* சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு,
* ஈக்காடு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்,
* போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம்,

ஐ.பி.எஸ். படித்த டாப் டென் கொள்ளையன்!

மின்னம்பலம் : - அதிர வைக்கும் வாக்குமூலம்
ஐ.பி.எஸ்.  படித்த டாப் டென் கொள்ளையன்!தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டுகளில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள கொள்ளையனை கடலூர் போலீஸார் கைது செய்துள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அடிதடி வழக்குகள், கலவர வழக்குகள் குறைந்து தற்போது திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
சாலையில் நடந்து செல்லும் ஆண்கள், பெண்களிடம் செயினை அறுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். வீட்டு வாசலில், கடை வீதியில் நிற்கும் வாகனங்களைத் திருடிக்கொண்டு போகிறார்கள்.
திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபடச் சொல்லி காவலர்களுக்கு பிரஷர் கொடுக்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

தேர்வு பயத்தில் சிறுவனைக் கொன்ற மாணவன்!

தேர்வு பயத்தில் சிறுவனைக் கொன்ற மாணவன்!
மின்னம்பலம் :டெல்லியில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் கழிவறையில் கொல்லப்பட்ட வழக்கில் ப்ளஸ் ஒன் மாணவனை போலீஸார் நேற்று (நவம்பர் 8) கைது செய்தனர்.
ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்யாமன் தாகூர் (7) கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலை எட்டு மணியளவில் கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளான். சிறுவன் அருகில் ஒரு கத்தியும் இருந்துள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி ஆசிரியர்கள், முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என்று சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிற பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் நீரஜா பத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார்

அப்போலோவில் ஜெயலலிதா, சசிகலா பேசிய வீடியோவினால் யாருக்கு ஆபத்து? அதிரடி சோதனையின் பின்னணி?

சிறுதாவூர் பங்களா தவிர மற்ற 190 இடங்களில் சோதனை.... திருச்சி மன்னார்குடி முதற்கொண்டு....சசிகலா வக்கீல்...திவாகரன் உதவியாளர் வீடுகளையும் விட்டு வைக்கல.
இது ஒரு வீடியோவுக்காக நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் சசிகலாவுடன் பேசிய வீடியோ ஒன்று தங்களிடம் உள்ளதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார். இதற்காகத்தான் தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்டால் பலருடைய (மோடி குறுப்பு )சாயம் வெளுத்துவிடும் எனவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார்

ஜெயலலிதா, சசிகலா பேசிய சர்ச்சை வீடியோ: வருமான வரித்துறை சோதனையின் பகீர் பின்னணி? சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா தொடர்புடைய பலரது வீட்டிலும், நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு காரணம் ஒரு வீடியோ என தகவல்கள் வருகின்றன. 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை ஜெயா தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது.

வைகோ : நான் மதம் மாறவில்லை



tamil.thehindu.com மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும் இருமுறை பைபிள் வாசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.
அந்த வீடியோவில் லாசரஸ் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, வைகோ “நான் கிறித்துவனல்ல. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார்.

தினமலர் : தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடைகிறது.

தமிழகத்தில்,தி.மு.க., - காங்., கூட்டணி,உடைகிறது!
தமிழகத்தில்,தி.மு.க., - காங்., கூட்டணி,உடைகிறது! தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடைகிறது. இதுவரை, ஒன்றாக இருந்தவர்கள், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை, நேற்று தனித்தனியாக நடத்தினர். நாடு முழுவதும், காங்., கூட்டணி கட்சிகள், ஒன்றாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், பிரதமர் மோடியின் சாணக்கியத்தனத்தால், இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி, 2016 நவ., 8ல், 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி, நேற்று ஓராண்டு நிறைவு பெறுவதால், நாடு முழுவதும், கறுப்பு தினம் கடைபிடிக்க, காங்கிரஸ் முடிவு செய்தது. அதற்கு, அதன் கூட்டணியில் உள்ள, தி.மு.க., உள்ளிட்ட, 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்திலும், தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து, கறுப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசரும் உறுதி செய்திருந்தார்.

தமிழகமெங்கும் 190 இடங்களில் சோதனை இடங்களில் சோதனை..! தினகரன் அணியின் .....

Retweeted PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews): சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் உட்பட 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை; சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
Retweeted PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews): நாமக்கல்: சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டிலும் வருமான வரி சோதனை
நீலகிரி, சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. இதேபோன்று சசிகலாவின் உறவினர் திவாகரன், விவேக் ஆகிய வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. திருவாரூரில் மன்னார்குடியின் சுந்தரகோட்டையிலுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

கமல் ,,, கறுப்பு சட்டைக்குள் ஒரு வைணவ நடிகன் !

நடிகர் கமலை ஒரு முற்போக்காளனாகக் காட்டுகிற நண்பர்களின் பதிவுகள் எரிச்சலை தருகின்றன.
உண்மையில் திரைப்படங்கள் மூலமாக கமல் சொல்லவருகிற விடயங்கள் என்ன? ஒரு சிறந்த நடிகன் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஏதோ கருத்துருவாக்கியை போல முன்னுதாரண மாக்குகிறார்கள்.
கறுப்புச் சட்டைக்குள் ஒளிந்து கொண்டு வைணவ சமயத்தை பிரதிநிதித்துவம் செய்கிற தீவிர சைவசமய எதிர்ப்பாளனாகத்தான் கமலின் திரைப்படங்களை வைத்து கமலை கணித்திருக்கிறேன்.
அவர் இயக்கி அவர் நடித்த திரைப்படங்களில் அவரின் பாத்திரங்களின் பெயர்களைப் பாருங்கள்
1.மகாநதி திரைப்படத்தில் "கிருஷ்ணசாமி"யாக வருவார்
2.குருதிப்புனல் படத்தில் "ஆதிநாராயணன்'
3.சாச்சி 420 படத்தில் "லக்‌ஷ்மி கோட்லி"
4.காதலாகாதலா திரைப்படத்தில் "ராமலிங்கம்"
5.ஹேராம் படத்தில் "சக்கிற் ராம்"
6.ஆளவந்தான் திரைப்படத்தில் "நந்து(நந்தகோபன்)"

பல லட்சம் பேரின் பணத்தை ஸ்வாகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!

Chinniah Kasi ‘  :  பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ‘பண மதிப்பு நீக்கம்’ என்ற தாக்குதல், நாட்டு மக்களுக்கு மாறாத ரணமாக, ஆறாத வடுவாக இன்றும் அவர்களை துயரத்திலேயே வைத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி ஏற்படுத்திய துயரத்தின் ஓராண்டு, நாடு முழுவதும் புதன்கிழமையன்று கறுப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 18 எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.இந்நிலையில், பொதுமக்களும் தாங்கள் சுமக்கும் துயரத்தின் ஓராண்டை, ட்விட்டரில் #De‘MoDi’saster(மோடி எனும் பேரிடர்) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி,தங்களின் வடுக்களை தடவிப்பார்த்துக் கொண்டனர். இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே நாடு முழுவதும் டிரெண்டானது.

மதுராந்தகம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

Chinniah Kasi : மதுராந்தகம், நவ.8- கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் மதுராந்தகம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிவருகின்றது.காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டின் கீழ் 922 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் கடந்த பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமலும், நீர் வரத்துக் கால்வாய்கள் சீர்செய்யப்படாமலும் உள்ளன. கடந்த சில நாட்டகளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி நீர்வரத்து அதிகரித்தது.

எம் ஆர்,கே, பன்னீர்செல்வம் : தூர் வாரியதில் ஊழல்! கடலூர் ..200 கோடி ரூபாய் எங்கே?

விகடன் : கடலூர் மாவட்டத்துக்கு வெள்ளத் தடுப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார், தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள், சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்கள் தூர் வாரியதில் மெகா ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். தொகுதி அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியில் சென்று மழை பாதிப்புகளைப் பார்வையிடாமல், மக்களைச் சந்திக்காமல், கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

நமது எம்ஜியார், ஜெயாடிவி அலுவலகம், தினகரன்,திவாகரன், இளவரசி, புகழேந்தி வீடுகளிலும் ஆளுவலகங்களிலும் வருமானவரி சோதனை



விகடன் :கார்த்திக்.சி :  சென்னை
ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகியவை டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்தநிலையில், இன்று காலை ஆறு மணி முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்தை முறையாக காண்பிக்கவில்லை மற்றும் வருமான வரி சரியாக கட்டவில்லை என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர்களே எச்சரிக்கை! திருப்பூர் தெற்கு பகுதிகளில்.. சாயப்பட்டறைகள் ..

ஏர்முனை இளைஞர் அணி : உழவர்களே எச்சரிக்கை!
திருப்பூர் தெற்கு பகுதிகளில் பேராபத்து காத்திருக்கிறது! நொய்யல் கரையில் இருந்து மெல்ல நகர்ந்து பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சாயப்பட்டறைகள் சத்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டு இருந்தது.
அதன் சாயம் தற்போது மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்து விட்டது.ஆம் கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் சுற்று வட்டாரப் பகுதி உழவர்கள் தமது வேளாண் நிலத்தில் உள்ள கிணறுகள் , ஆழ்த்துழை கிணறுகளில் உள்ள தண்ணீர் வேளாண்மை செய்ய தகுதியற்றதாக மாறிவிட்டது என வேளாண் அதிகாரிகள் பரிசோதித்து சொல்லி விட்டதாகவும் இங்கு இயங்கும் 15க்கும் மேற்பட்ட சாய ஆலைகளில் உள்ள கிணறுகள்,ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட வேண்டும் என்று சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

7 லட்சம் வாங்கிய கடனுக்கு 76 லட்சம் கட்டியுள்ளேன்.. கந்துவட்டி தொடர்கதைகள் ...

7 லட்சம் வாங்கிய கடனுக்கு 76 லட்சம் கட்டியுள்ளேன்..! இது மற்றுமொரு கந்துவட்டிக் கொடுமையின் குரல்

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீக்கிரையானதையடுத்து, தமிழகம் முழுவதும் கந்துவட்டி தொடர்பான புகார்கள் குவிந்துவருகின்றன. இன்று ,கோவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட ஒரு கந்துவட்டிப் புகாரைப் பார்த்து போலீஸாருக்கே தலை கிறுகிறுத்துப்போனது. கோவையை அடுத்துள்ள சவுரிபாளையம் பகுதியில், சுப்பிரமணி என்பவர் கந்துவட்டித் தொழில் செய்துவருகிறார். இவரிடம் குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து, தொழில் தொடங்குவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தைவிட பல மடங்கு பணம் கொடுத்துவிட்டபோதும், சுப்பிரமணி விடாமல் பணம் கேட்டு துன்புறுத்துவதாக கோவை கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

கீழடி அகழாய்வு பொருள்களை கடத்த முயன்ற தொல்லியல் அதிகாரி... சிறைபிடித்த கிராம மக்கள்!

பாலமுருகன். தெ
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு மூன்று கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நான்காம் கட்ட ஆய்வுப் பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 7000 பொருள்களை இந்த ஊரில் உள்ள சமூதாயக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. திடீரென நேற்று மதியம் 3 மணியளவில் மதுரையில் இருந்து ராட்சதலாரி மூலம் அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் கடத்தியுள்ளார் தொல்லியல்துறையின் அதிகாரிகளில் ஒருவரான வீரராகவன்.

புதன், 8 நவம்பர், 2017

ரஷ்யா சிறுவன் சென்ற பிறவி ஞாபகம் ..செவ்வாய் கிரக அனுபவம் . திகைப்பில் ஆழ்த்தும் உமையாக்கள்


சமயம். :செவ்வாய் கிரகத்தில் பிறந்த அதிசய பிறவி.! ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக கூறியுள்ளது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யா, வோல்கோகிராடைச் சேர்ந்த 20 வயது இளைஞர், போரிஸ்கா. இவர்தான் இந்த வியத்தகு செய்தியை உலகுக்கு அளித்துள்ளார். போரிஸ்கா, பிறந்த சில மாதங்களிலேயே பேசத் தொடங்கி விட்டதாகவும், இரண்டு வயதிலேயே எழுதப் படிக்க பழகிக் கொண்டதாகவும், கடினமான விஷயங்களை விவாதிக்கும் திறனை சிறுவயதிலேயே பெற்றிருந்ததாகவும் இவருடைய பெற்றோர் கூறுகின்றனர். மேலும், போரிஸ்கா, வேற்று கிரக வாசிகள் குறித்தும் பல வியத்தகு விவரங்களை கூறி வருகிறார். விஞ்ஞானிகள் போரிஸ்காவை அணுகி அவருடன் வேற்று கிரக வாசிகளின் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு ரகுராம் ராஜன் பரிந்துரை?

AAP shortlisted Raghuram Rajan's names for Rajya Sabha post lakshmi-priya Oneindia Tamil: டெல்லி: ஆர்பிஐ முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மிக சிறந்த பொருளாதார மேதையான ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். பணமதிப்பிழப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவர் மீது பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் பொருளாதார மேதையான அவர் பதவிக் காலம் முடிவடைந்ததாலும் பதவி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேலை மத்திய அரசு நியமித்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு ரகுராமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் அவர் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.