வியாழன், 21 ஏப்ரல், 2016

பாலியல்...மறுத்த 250 பெண்களை ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொன்றனர்

ஈராக்கில் பாலியல் அடிமைகளாக மறுத்த 250 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்களை பாலியல் அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி விற்பனை செய்யும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களை அவர்கள் கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு ஈராக்கில் பாலியல் அடிமைகளாக ஆக மறுத்த சுமார் 250 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்தனர் என்று மீடியா செய்தி வெளியாகி உள்ளது.

வசந்தி தேவி ஒரு வரலாற்று வாய்ப்பு! ஆர்.கே.நகர் ஒரு ஜனநாயக புரட்சிக்கு தயாரா?

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர். கே. நகர் தொகுதியில் அவரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  களம் காண்கிறார் வசந்தி தேவி.  இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கே…
அ. மார்க்ஸ் (பேராசிரியர்)
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயாவை எதிர்த்து ம.ந.கூ சார்பாக டாக்டர் வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார்.
சக்கரைச் செட்டியார் அவர்களின் பேத்தி முன்னாள் துணை வேந்தர், முன்னாள் பெண்கள் ஆணையத் தலைவர், கல்லூரி ஆசிரியர் சங்கப் போராளி, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு அறிஞர் வசந்தி தேவியை ஊழல் பெருச்சாளி ஜெயாவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக அறிவிக்க திமுக முன் வர வேண்டும்.

ஸ்டாலின் :ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது!

ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திமுக
பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது குற்றம்சாட்டினார். தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச் சாரம் செய்தார். அப்போது விழுப் புரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அமீர் அப்பாஸை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, "திமுகவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். திமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற பல திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பெறச் செய்தோம். ஆனால் தற்போது ஊழல்வாதிகளால் அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது.

மோடி அரசுக்கு பெங்களூரில் கிடைத்த செருப்படி..பி.எப் நிதியில் கைவைக்க வந்த காபரெட்ட்டுகளின் கூலிப்படை...

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்வினவு.com இந்தியாவின் வளங்களையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகள் சூறையாடுவதற்கு தூக்கிக் கொடுத்தாயிற்று. இனி எஞ்சியிருக்கும் தொழிலாளர் வைப்பு நிதியையும் (PF-Provident Fund) ஒட்டச்சுரண்டி சந்தையில் அடகுவைக்கலாம் என நினைத்த மோடி அரசின் பகற்கொள்ளையை பெங்களூரு தொழிலாளிகள் போர்க்குணத்துடன் போராடி முறியடித்திருக்கின்றனர்.
மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்கடந்த இருநாட்களாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் பெங்களூரு, ஆடை ஏற்றுமதி தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டத்தால் சிவந்திருக்கிறது. 20,000-க்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதித் துறை தொழிலாளர்கள் பெங்களூரு மாநகரை முற்றுகையிட்டு மோடி அரசின் பி.எஃப் திருட்டுக்கு எதிராக போராடியிருக்கின்றனர்.

போர்க்களமாக மாறிய டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் !

tasmac-head-office-protest-1மிழ்சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக்கடையை மூடுவதற்கு தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் மக்கள் களத்தில் இறங்கினால் உடனே டாஸ்மாக்கை மூட முடியும். இந்தக் கருத்துடன் டாஸ்மாக்கிற்கெதிராக தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அதன் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட மாபெரும் டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் சென்னையில் 20.04.16 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ? இஸ்லாமிய அடிப்படைவாதிகளை நம்பி பாஜக?

மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
ராமன் தேசிய நாயகன் என்று ஒப்புக்கொள் கிறாயா, இல்லையா?” என்று இசுலாமிய மக்களை அச்சுறுத்தி, இந்து வெறியைத் தூண்டி அதிகார நாற்காலியில் அமர்ந்தது பாரதிய ஜனதா. இப்போது கேலிப் பொருளாகி வரும் மோடி அரசின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு பாரத மாதாவைத் துணைக்கு அழைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
bharat-matha-caption-1“பாரத் மாதா கி ஜெய்” சொல்வதற்கு இளைய சமுதாயத்தைப் பயிற்றுவிக்க வேண்டுமென்று மார்ச் 3-ஆம் தேதியன்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். மார்ச் 17-ஆம் தேதியன்று மகாராட்டிர சட்டமன்றத்தில், “பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்பத் தயாரா?” என்று இசுலாமிய அடிப்படைவாதக் கட்சியான மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதானுக்குச் சவால் விட்டார். பா.ஜ.க. உறுப்பினர் ராம் கதம்.
“ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் மகாராஷ்டிரா போன்ற முழக்கங்களை எழுப்ப நான் தயார். ஆனால், என் கழுத்தை அறுத்தாலும் நீங்கள் சொல்லும் அந்த முழக்கத்தை மட்டும் நான் எழுப்ப மாட்டேன்” என்று பதிலளித்தார் வாரிஸ் பதான்.  பாரத் மாதா , கர்நாடக மாதா, கேரளா மாதா ,ஹிந்தி மாதா ,சம்ஸ்கிருத மாதா எல்லாத்துக்கும் ஓவியம் வரைந்து ரவி வர்மா புகழ் பெற்றார்.. அவரு பாவம் எதோ பாண்டஸி கற்பனையில் பண்ணினாரு இவனுக என்னாடான்னா அதுவுல கையை வச்சு

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து..உயர் நீதிமன்றம் ! மோடி வித்தைக்கு குட்டு...Uttarakhand Verdict: Congress Says PM, Amit Shah Must Apologise

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் தொடர்ந்த மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட சட்டத்துக்கு மாறாக உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 29ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. dinamani.com மோடியும் அமித்ஷாவும் தங்கள் சதுரங்க வேட்டையை  இனியாவது நிறுத்த வேண்டும்

நாஞ்சில் சம்பத்து :அம்மா, மக்களை சந்திக்கவில்லை என்கிறார்கள்... மக்களுக்கு குறையிருந்தால் தானே சந்திப்பாக!

vikatan.com அம்மா, மக்களை சந்திக்கவில்லை என்கிறார்கள். மக்களுக்கு குறையிருந்தால்தானே சந்திப்பார்கள் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து, நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டு பேசும்போது, ''15வது பொதுத் தேர்தல் வருகிறது. வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியின் முதல்வர் கனவு நிறைவேறவில்லை.   ஆஹா இந்தாளு  யாருக்கோ  பீ டீமா வேலை பாக்குறாரு .....சகோதரி ஜாக்கிரத ...இவரு கவுத்துட போறாரு..... நிச்சயமா இவரு என்னவோ பண்றாரு 

இனி மக்களுக்காக நான், மக்களால் நான்' என்று தயவு செய்து சொல்லாதீர்கள் ஜெயலலிதா அவர்களே...

vikatan.com;உங்களுக்கு ஜோஸ் முஜிகாவை தெரியுமா...? நாம் வாழும் அதே புவியில், ஒரு வார்டு உறுப்பினரே சொகுசு கார் புடை சூழ பறக்கும் அதே கண்டத்தில் வாழும் எளிமையான அரசியல்வாதி. உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர். உருகுவே நம் சென்னையிலிருந்து பதினைந்தாயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் சின்ன நாடு.
நாம் வாக்களித்து நம் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு சரியாக ஒரு ஆண்டு முன்புதான் உருகுவே மக்கள் ஜோஸ் முஜிகாவை தம் அதிபராக தேர்ந்தெடுத்தார்கள். தாம் பெற்ற 12,000 டாலர் சம்பளத்தில், ஏறத்தாழ 90 விழுக்காடு பணத்தை வறியவர்களுக்கும், சிறு தொழிற் முனைவோருக்கும் கொடுத்த அற்புத அதிபர் அவர்.
அரசு தனக்களித்த வீட்டில் தங்காமல் இரண்டு அறைகள் கொண்ட சிறு வீட்டில் தங்கி, வார்த்தைகளில் மட்டும் மக்களுக்காக, மக்களோடு வாழாமல் உண்மையாக தம் சக குடிகளுடன் வாழ்ந்த எளிய மனிதர் அவர். தமக்கென எந்த சேவகர்களையும் வைத்துக் கொள்ளாமல், தம் வேலைகளை தாமே செய்த மக்கள் பணியாளர் அவர். 

ராமதாஸ் :ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பொதுக்கூட்ட சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது  பிரிவின்படி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைசேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின்  பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்திகளை அறிந்து பேரதிர்ச்சியும்,  வருத்தமும், தாங்க முடியாத வேதனையும் அடைந்தேன்.

இந்தப் பேச்சுக்கு என் மீது கொலைவெறியோடு இருக்கிறது இந்துத்துவ இலக்கியக் கும்பல்


மதிமாறன் :இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது’ என்கிற பாணியில் ஒரு குரூப் என்னைக் கண்டித்து எழுதி வருகிறது.
அன்று நான் பேசிய பிறகு பேசியவர்கள் யாரும் எனக்கு மறுப்பு சொல்லவிலை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும் இல்லை. லைட் எல்லாம் ஆப் பண்ணி, மனுஷ்யபுத்திரன் போகும் வரை அங்கே தான் இருந்தேன்.
ஆனால், அங்கு என்னிடம் பேசுவதற்குக் கூட முயற்சிக்காதவர்கள், facebook ல் கோடு கிழித்துச் சவடால் பேசுகிறார்கள் வடிவேல் பாணியில்.
அன்று நான் கொஞ்சம் அவசரமாகப் பேசியதால் என் இயல்பிலிருந்து கொஞ்சம் விலகிதான் பேசினேன். காரணம், தோழர் சண்முகசுந்தரம், ‘நிறங்களின் நிஜம்’ புத்தகத்தில், ராமாயணம், இந்து மதம், பார்ப்பனியம், ராஜராஜசோழன், சி.பி.எம்., கீழ்வெண்மணி என்று பல செய்திகளைச் சொல்லியிருந்தார்.

பழங்குடி மக்களை கொல்வதற்கு அரசுக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்? வேதாந்தா நிறுவனம்?


vikatan.com நீங்கள் அரசுடன் தொடர்ந்து முரண்படும்போது, உங்களை கைது செய்வதற்கு அதிக காரணம் தேவைப்படுவதில்லை. ஏன் காரணமே கூட தேவையில்லை. ஏதாவது ஒரு வழக்கு உங்கள் மீது புனையப்படும். அதுவும் நீங்கள் பொது சமூகத்திற்கு அதிகம் தெரியாத பழங்குடியாக இருந்தால், எந்த வழக்கும்  இல்லாமல் உங்களை சிறையில் வைக்க முடியும், ஏன் ஒரு நாள் காயம்பட்ட உங்கள் சவம் சாலையோரத்தில் கண்டு எடுக்கவும்படலாம். இது நாள் வரை பழங்குடிகளுக்கு எதிராக நீண்ட அரசுகளின் தாக்குதல், இப்போது அவர்களுக்காக பேசும், எழுதும் ஊடகவியலாளர்கள் மீதும் நீண்டிருக்கிறது. பழங்குடிகளுக்கு சார்பாக எழுதினால்,  மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யும் போக்கு மத்திய இந்தியாவில் குறிப்பாக சத்தீஸ்கரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை அம்னிஸ்டி இண்டர்நேஷனலின்  ( Amnesty International) விசாரணை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

தேமுதிகவுக்கு தேய்பிறை ....வைகோவுக்கு வளர்பிறை ? அதிர்ச்சி ஆரூடம்? நம்பலாமா?

விகடன்.com :‘மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்கும் விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் இந்தத் தேர்தலில் எதிர்பாராத ஆச்சரியங்கள் நிகழலாம்’ என கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக, ‘உளுந்தூர்பேட்டையில் கேப்டனின் முரசு கொட்டுவது சிரமம்’ என்கிறார்கள். ஆனால், ‘வைகோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ எனவும் கணிக்கின்றனர்.
தேர்தலுக்குத் தேர்தல் தொகுதியை மாற்றம் செய்யும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இந்தமுறை உளுந்தூர்பேட்டையில் களமிறங்குகிறார். 2006-ம் ஆண்டு பா.ம.கவின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால், ‘இந்தமுறை உளுந்தூர்பேட்டையில் அவர் கணக்குப் பலிப்பது சிரமம்’ என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை: மக்கள் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் கடுமையாக வேலை...

விஜயகாந்துக்கு பாடம்: ஸ்டாலின் உத்தரவு. மக்கள் தே.மு.தி.க., போட்டியிடும், மூன்று தொகுதி தி.மு.க.,வினருக்கு, ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் கூட்டணி முடிவுக்கு எதிராக, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் போர்க்கொடி உயர்த்தி, மக்கள் தே.மு.தி.க.,வை உருவாக்கினர்.
தி.மு.க., கூட்டணியில், மக்கள் தே.மு.தி.க.,வுக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவதில் தி.மு.க.,வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

R.K.நகர் தாய்க்குலத்தின் தேர்தல் களம்....அத்தனை கட்சிகளும் பெண்களையே

முதல்வர் ஜெயலலிதாவை தோற்கடிக்க, புதிய வியூகம் அமைத்துள்ள
எதிர்க்கட்சிகள் அனைத்தும், அவர்
போட்டியிடும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன. தி.மு.க., சார்பில் சிம்லா,
பா.ம.க., சார்பில் ஆக்னஸ், தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சார்பில், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முதல் முறையாக, இந்த தேர்தலில், 227 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.
அதனால், தன் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, அவர் போட்டியிடும், ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களமிறக்கும் முடிவை, முக்கிய எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.

பாகிஸ்தான் ஒப்படைத்த கிர்பால் சிங் உடலில் இதயம் இல்லை

Pakistan has handed over the body of prisoner Kirpal Singh to India, but his vital organs, including the heart, stomach and liver, have been removed for forensic tests. The tests are being carried out at Lahore's Jinnah Hospital. அமிர்தசரஸ் 'இந்தியாவிடம், பாகிஸ்தான் ஒப்படைத்த, கிர்பால் சிங் உடலில், இதயம் மற்றும் இரைப்பை பகுதிகளை காணவில்லை' என, தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர் கிர்பால் சிங், 50. இவர், 1992ல், தவறுதலாக, வாகா எல்லையை கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் சென்றார். மர்மமான முறையில்.. அவரை, பாகிஸ்தான் அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. பாகிஸ்தானில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில், அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் லாகூர் கோர்ட், அவருக்கு மரண தண்டனை விதித்தது.இந்தியாவின் நெருக்கடியால், அவருக்கு மரண தண்டனையை, பாகிஸ்தானால் நிறைவேற்ற முடியவில்லை. 24 ஆண்டுகளாக, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிர்பால், சமீபத்தில், சிறையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 'அவர் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகம் ஏற்பட்டது.

உதயசூரியன் சின்னத்தை தாலியில் அணிந்திருக்கும் மதுராப்பட்டி கிராமபெண்கள்...சுயமரியாதை திருமணம்

உதயசூரியன் சின்னத்தை தாலியில் அணிந்திருக்கும் ரவியின் மனைவி மைதிலி, மைதிலி அணிந்திருக்கும் தாலியில் உள்ள உதயசூரியன் சின்னம்
tamil.thehindu.com :உதயசூரியன் சின்னத்தை தாலியில் அணிந்திருக்கும் ரவியின் மனைவி மைதிலி, மைதிலி அணிந்திருக்கும் தாலியில் உள்ள உதயசூரியன் சின்னம்
பெண்கள் புனிதமாகக் கருதுவது தாலி. அந்தத் தாலியையும் கணவரின் கட்சிக்காக விட்டுக்கொடுத்து அந்த புனிதத்தில் கட்சியின் சின்னத்தை இடம்பெறச்செய்து அதையே தாலியாகக் கொண்டு வாழுகின்றனர் விருத்தாசலத்தை அடுத்த மதுரா பட்டி எனும் எம்.பட்டி கிராமப் பெண்கள்

புதன், 20 ஏப்ரல், 2016

தமிழிசை:ப.சிதம்பரம் தேசத் துரோகி......இவர் அப்பா குமரி அனந்தன் காங்கிரஸ்....சித்தப்பா வசந்தகுமார் காங்கிரஸ் வேட்பாளர்...பிழைக்க தெரிஞ்சவுங்க

நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் தங்களுடைய சித்தாந்தத்தை எதிர்க்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் என அனைவரையும் ‘தேசத்துரோகி’ முத்திரை குத்தி வந்தனர். இந்நிலை தமிழக அரசியல் சூழலில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செவ்வாய்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் காங்கிரஸின் தேசவிரோத கூட்டணிக்கு தேச பக்தர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது.  சிதம்பரம் தேசதுரோகி என்றால் அவர் கட்சியின் தூண்களான உங்கள் அப்பா குமரி அனந்தன் ,சித்தப்பா  வசந்தகுமார்( காங்கிரஸ் வேட்பாளர்) எல்லாரும் துரோகிகள் தானே ? துரோகி என்ற வார்த்தையை நம்பியே காலத்தை ஒட்டி விடலாம் என்று சங்பரிவார் கனவு காண்கிறது....டாக்டரம்மா  இது பெரியார் பூமி வீண் கனவு வேண்டாம் .....உங்க மருத்துவ தொழில்தான் உங்களுக்கு நிரந்தரம். உங்க அரசியல்  தொழில் கிராஷ் லாண்டாகி ரொம்ப நாளைகி விட்டது .உங்க அப்பா ரொம்ப நல்லவர் அவரு பேரை ஏன் டாமேஜ் பண்றீங்க? 

குஷ்பூ: ஜெயலலிதாவுக்கு மக்களின் உயிரின் மீது மரியாதையை இல்லை....இரங்கல் கூட தெரிவிக்காதவர்.

சென்னை: யாருடைய உயிர் மீதும் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.தி.மு.க தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று (20-ம் தேதி) குஷ்பு சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். ஜெயலலிதா பிரசாரத்தின்போது பலர் உயிரிழந்து வருகின்றனர். யாருடைய உயிர் மீதும் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை, இறந்தவர்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. ஹெலிகாப்டரிலேயே மக்களை சந்தித்து வந்தால் மக்களின் குறைகள் எப்படி தெரியும்?

வசந்தி தேவியை பொது வேட்பாளராக திமுக ஏற்று கொள்ளவேண்டும் ! சமுகநீதிக்கு எழுச்சி!

விகடன்.com : வசந்தி தேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை திரும்பப் பெறுமா திமுக? இப்போதே சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமென்றால், திமுக தன் வேட்பாளரை திரும்ப பெற்று இவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  முற்போக்காளர்கள் கருத்து தெரிவிக்க துவங்கிவிட்டனர். யார் இந்த வசந்தி தேவி ? சமூக செயற்பாட்டாளர்கள் அவருக்கு ஆதரவளிக்க என்ன காரணம் ? அவர் முன்னாள் துணை வேந்தர் என்பது மட்டும்தான் காரணமா? இல்லை அது மட்டும் காரணமில்லை.
மாணவர்களுக்கு துணை நின்றவர்:
அப்போது அவர் அரசுக் கல்லூரி முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம்,  ஒரு மாணவி மிகுந்த தயக்கத்துடன் வசந்தி தேவி வீட்டு கதவை தட்டுகிறார். 

போலீஸ் குதிரை சக்திமான் மரணம்....பாஜக எம் எல் ஏ கணேஷ் ஜோஷியின் கொடூரம்....


The 13-year-old was given a prosthetic leg and was confined to the police lines. It was a well trained horse and part of Uttarakhand Mounted Police for years. “The horse passed away at 5.30 PM. He was suffering from medical-related complications. The exact cause will be known only after post-mortem,” IG Garhwal Sanjay Gunjyal said.
டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாரதீய ஜனதா கட்சியின் பேரவை உறுப்பினரால் தாக்கப்பட்ட போலீஸ் குதிரை சக்திமான்
இன்று மரணமடைந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, காவல் துறையைச் சேர்ந்த சக்திமான் குதிரையை பாஜக பேரவை உறுப்பினர் கணேஷ் ஜோஷி தாக்கி காலை உடைத்ததாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோஷி பின்னர் பிணையில் விடுதலையானார். இந்த தாக்குதில் குதிரை சக்திமானின் இடது பின்னங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டது.   இந்த பாஜக அரசியலவாதி சதா குங்குமத்தோடு பக்தி பழம் போல் காட்சி அளிக்கிறான் இவனுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் ...

விசிக 2-வது பட்டியல்: திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் போட்டி

ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே 11 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார். இவர் பொது வேட்பாளராக களம் காண்கிறார்.

பிர­பா­க­ரனின் பாது­காப்பு படையணியை சேர்ந்த எழிலன் காலியில் துப்பாக்கியுடன் கைது!! பாதாள கூலிப்படையில்!

ilakkiyainfo.com: பலப்­பிட்­டிய நீதி­மன்றின் முன்­பாக இடம்­பெற்ற இரட்டைக் கொலை உள்­ளிட்ட பல கொலை­க­ளுடன் தொடர்­பு­டைய தென்­னி­லங்கை பாதாள உலகக் குழுவின் துப்­பாக்­கி­தாரி என நம்­பப்­படும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்­பினர் ஒருவர் கைத்­துப்­பாக்­கி­யுடன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
காலியில் வைத்து குறித்த சந்­தேக நபரை விசேட அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது.
விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை பாது­காக்கும் விசேட ஆயுத படை­ய­ணி­யான சார்ள்ஸ் அன்­டனி படை­ய­ணியின் முக்­கிய புள்­ளி­யாக திகழ்ந்த எழிலன் என புலி­களால் அறி­யப்­படும் நபரே இவ்­வாறு கைது செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
ஸ்டேன்லி கெனடி பெர்­ணான்டோ என்ற இயற் பெயரை உடைய இந்தச் சந்­தேக நபர் கிரிஷான் எனும் பெய­ரி­லேயே தெற்கு பாதாள உலகில் வலம் வந்­துள்­ள­தா­கவும் கொழும்பு கொட்­டாஞ்­சேனை, ஜம்­பட்டா வீதியைச் சேர்ந்த இவர் கொட்­டாஞ்ச்­சே­னையில் இடம்­பெற்ற பெண் ஒரு­வரின் கொலை­யு­டனும் தொடர்புபட்­டவர் என விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

மக்கள் அதிகாரம்:சாராயம் விற்று தாலி அறுப்பவர் தேசபக்தரா?


shutdown-tasmac-posterமூடு டாஸ்மாக்கை – எனப் பேசுபவர்கள் தேசத்துரோகிகளா? சாராயம் விற்று தாலி அறுப்பவர் தேசபக்தரா? 1. இன்று ஏப்.20, 2016 தமிழகம் முழுவதிலுமுள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகங்களை மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. இதன்படி விழுப்புரத்தில் நடக்கும் முற்றுகை போராட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, ரயில் நிலையத்தில் வைத்து போலிசால் கைது செய்யப்பட்டார்.
2. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் தாளமுத்து நடராசன் மாளிகையில்தான் டாஸ்மாக்கின் தலைமை அலுவலகம் உள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ !“ஓபன் தி டாஸ்மாக்”


மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மா, மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டிருக்கும் அம்மா, இப்போது “படிப்படியாக மதுவிலக்கு” என்று பல்டியடிக்கிறார். அம்மாவின் இந்த போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன்.
Kovan lampoons Jayalalitha’s promise of “step by step prohibition” as “peg by peg de-addiction”! Seduce the gullible voters with false promise. File sedition cases against those who fight. This is her game. The game of a cheat. In Chennai slang, “Bongu” means, a Cheat! She is the AMMA of all cheats!

பாடல் வரிகள்:
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க
கடைய பாதியா வடய பாதியா