புதன், 20 ஏப்ரல், 2016

தமிழிசை:ப.சிதம்பரம் தேசத் துரோகி......இவர் அப்பா குமரி அனந்தன் காங்கிரஸ்....சித்தப்பா வசந்தகுமார் காங்கிரஸ் வேட்பாளர்...பிழைக்க தெரிஞ்சவுங்க

நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் தங்களுடைய சித்தாந்தத்தை எதிர்க்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் என அனைவரையும் ‘தேசத்துரோகி’ முத்திரை குத்தி வந்தனர். இந்நிலை தமிழக அரசியல் சூழலில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செவ்வாய்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் காங்கிரஸின் தேசவிரோத கூட்டணிக்கு தேச பக்தர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது.  சிதம்பரம் தேசதுரோகி என்றால் அவர் கட்சியின் தூண்களான உங்கள் அப்பா குமரி அனந்தன் ,சித்தப்பா  வசந்தகுமார்( காங்கிரஸ் வேட்பாளர்) எல்லாரும் துரோகிகள் தானே ? துரோகி என்ற வார்த்தையை நம்பியே காலத்தை ஒட்டி விடலாம் என்று சங்பரிவார் கனவு காண்கிறது....டாக்டரம்மா  இது பெரியார் பூமி வீண் கனவு வேண்டாம் .....உங்க மருத்துவ தொழில்தான் உங்களுக்கு நிரந்தரம். உங்க அரசியல்  தொழில் கிராஷ் லாண்டாகி ரொம்ப நாளைகி விட்டது .உங்க அப்பா ரொம்ப நல்லவர் அவரு பேரை ஏன் டாமேஜ் பண்றீங்க? 

இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான் என டேவிட் ஹேட்லியும் ஒப்புக் கொண்ட நிலையில், இவ்வழக்கின் முதல் பிரமாண வாக்குமூலத்தில் அவர் தீவிரவாதிதான் என்று கையெழுத்து இட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுமென்றே அரசியல் லாபம் கருதி, மோடியை சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அரசியல் லாபம் கருதி, இஷ்ரத் ஜகான் தீவிரவாதியல்ல என்ற திருத்தியுள்ளார்.
எனவே தேசத் துரோகம் செய்த காங்கிரசுக்கும், அதன் கூட்டணிக்கும் தமிழக வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்பதை தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கருணாநிதி யோசிக்க வேண்டும். தமிழ்நாடு இவர்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளார் தமிழிசை.

கருத்துகள் இல்லை: