வியாழன், 21 ஏப்ரல், 2016

பாகிஸ்தான் ஒப்படைத்த கிர்பால் சிங் உடலில் இதயம் இல்லை

Pakistan has handed over the body of prisoner Kirpal Singh to India, but his vital organs, including the heart, stomach and liver, have been removed for forensic tests. The tests are being carried out at Lahore's Jinnah Hospital. அமிர்தசரஸ் 'இந்தியாவிடம், பாகிஸ்தான் ஒப்படைத்த, கிர்பால் சிங் உடலில், இதயம் மற்றும் இரைப்பை பகுதிகளை காணவில்லை' என, தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர் கிர்பால் சிங், 50. இவர், 1992ல், தவறுதலாக, வாகா எல்லையை கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் சென்றார். மர்மமான முறையில்.. அவரை, பாகிஸ்தான் அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. பாகிஸ்தானில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில், அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் லாகூர் கோர்ட், அவருக்கு மரண தண்டனை விதித்தது.இந்தியாவின் நெருக்கடியால், அவருக்கு மரண தண்டனையை, பாகிஸ்தானால் நிறைவேற்ற முடியவில்லை. 24 ஆண்டுகளாக, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிர்பால், சமீபத்தில், சிறையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 'அவர் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகம் ஏற்பட்டது.


'கிர்பால் சிங், மாரடைப்பு காரணமாகதான் இறந்தார்' என, பாகிஸ்தான் தெரிவித்தது. கிர்பால் சிங் உடல். லாகூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல், அமிர்தசரசுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மருத்துவ கல்லுாரியில், அவரது உடலை டாக்டர்கள், பிரேத பரிசோதனை செய்தனர்; அதில் அவரது உடலில் இதயம், இரைப்பை, வயிறு பகுதிகள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.

வயிற்றுப்பகுதி:
இது குறித்து, அமிர்தசரஸ் மருத்துவக் கல்லுாரி முதல்வர், பி.எஸ்.பால் கூறியதாவது: பிரேத பரிசோதனையில், கிர்பாலின் இதயம் மற்றும் வயிற்று பகுதியை காணவில்லை என்பது தெரிந்தது; அவரது உடலில், உள் மற்றும் வெளிக்காயங்கள் இல்லை. அவரது மரணம் குறித்து மேலும் உண்மைகளை கண்டறிய, அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளை, சோதனைக்காக, பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: