![]() |
BBC Tamil : மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர்.
கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர்.
கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ,
கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.






