தமிழ்க்கவி : கோவை ஈஷா நிறுவனம் அராஜகம். தலைவர்கள், தோழர்கள் மீது தாக்குதல்!
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் சென்ற உண்மை அறியும் குழுவினர் மீது ஈஷா மைய அடியாட்கள் தாக்குதல்.
தமிழ்நாடு அரசே உடனடியாக நடவடிக்கை எடு!
கோவை பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அமெரிக்க கவுண்டர் பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44.3 ஏக்கர் நிலத்தை ஜக்கி வாசுதேவின் ஈசா பவுன்டேசன் நிறுவனம் ஆக்கிரமித்து பயன்படுத்தியது
இது தொடர்பாக கடந்த 2016 டிசம்பரில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் இணைந்து பெரும் போராட்டம் நடத்தியதில்,
கோவை தெற்கு வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு,
44.3 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும்,
நிலத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பேரூர் வட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஈசா பவுன்டேசன் மின்மயானம் ஒன்றைக் கட்டி 44.3 ஏக்கர் நிலத்தில் குளம் ஒன்றை வெட்டி மின்மாயன கழிவுகளைக் கொட்டி பழங்குடி மக்கள் அந்த நிலம் கிடைத்தாலும் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த ஈசா பவுன்டேசன் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய முற்போக்கு அமைப்புகள் சார்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் உண்மை அறியும் குழு மூலமாக கள ஆய்வு செய்ய சென்ற போது ஈசா யோக மைய அடி ஆட்கள் (குண்டர்கள்) குழுவினர் சென்ற வேனைத் தடுத்து நிறுத்தி டிரைவரை தாக்கி சாவியை பிடுங்க முயற்சி செய்து முன்பக்க கண்ணாடியை உடைத்து
தோழர்களை தாக்கினார்கள்.
இந்த தாக்குதல் ஈஷா
தலைமை செயல் அதிகாரி
தினேஷ் ராஜா தலைமையில்
வெங்கட்ராஜா , நந்தகோபால், முள்ளங்காடு சசிகலா உட்பட 50 க்கும் மேற்பட்டோர் காவல்துறை முன்னிலையிலே ஆபாச வார்த்தைகளால் திட்டி ரவுடிகள் போல் கொலைவெறியோடு தாக்குதல் நடத்தினர்.
குழுவினர் சென்ற வாகனத்தை எடுக்க முடியாமல் டிராக்டரைக் கொண்டு மறித்தனர்.
மேலும் குழுவினர் தொடர்ந்து அந்த தோட்டத்திற்கு செல்ல முடியாமல் தடுத்ததுடன் காவல்துறையினுடைய பாதுகாப்பு மீறி கோவை ராமகிருஷ்ணன் அவர்களை குழுவினரின் தாக்கம் முற்பட்டனர். இதனால் உடனடியாக வேனில் ஏற முடியாமல் உதவி ஆய்வாளர் ஒருவருடைய பாதுகாப்பில் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று பின்னர் வேன் மூலம் ஆலந்துறை காவல் நிலையம் சென்று புகார் அளிக்கப்பட்டது.
அன்பே சிவம் என்கிற பெயரில் அரியாட்களை வைத்து அராஜகம் நடத்தும் ஈசா நிறுவனம் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுக்க குரல் கொடுங்கள் தோழர்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக