வெள்ளி, 14 ஜூன், 2024

மதன் மோகன் - பல மதன மோகன ட்யூன்களின் சொந்தக்காரர் - Madan Mohan

 Janarthanan KB :   சில நண்பர்களுடன் சேர்ந்து மிக மிகச் சிரமப்பட்டு தான் தயாரித்த,
தானே இசையமைத்த படத்தை தன் தந்தைக்கு போட்டுக் காட்டுகிறார் அந்த இளைஞர்.
(தந்தையோ Filmistan பட நிறுவனத்தில் பார்ட்னர். இருந்தாலும் நடிக்கவும் இசையமைக்கவும் ஆசைப்பட்ட தன் மகனுக்கு எந்த ஆதரவும் தராமல் ஒதுக்கியிருந்தார்.)
படம் முடிந்ததும் ஏதும் சொல்லாமல் எழுந்து காருக்கு போய்விட்டார் தந்தை.  
மகன் சென்று பார்த்தால் அழுது கொண்டிருக்கிறார்:
‘உன் திறமையை நான் மதிக்காமல் போய் விட்டேனே!’ அந்த மகன்...
சமீபத்தில் நடந்த ஒரு தேர்ந்தெடுப்பில் இதுவரை வந்த காதல் பாடல்களில் மிகச் சிறந்தது என்று முடிவானது ‘Woh Kaun Thi?’ படத்தில் வரும் “Lag Jaa Gale” அந்த இசையமைப்பாளர்...


Madan Mohan…  பல மதன மோகன ட்யூன்களின் சொந்தக்காரர். இன்று பிறந்த நாள்!
தாளத்தைக் கேட்டாலே O.P.நய்யார் பாடல் என்று சொல்லிவிட முடிவதுபோல, ராகத்தைகேட்டாலே மதன்மோகன் என்று சொல்லிவிடலாம். அப்படி ஒரு மெலடியாக இருக்கும். தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே flowவில் செல்லும்.

சின்ன வயதில் பக்கத்து நர்கிஸ் வீட்டுக்கு சென்று நர்கீஸ் அம்மா ஜதன்பாய் பாடுவதையே பார்த்துக்கொண்டே இருப்பாராம். நடிக்க ஆசைப்பட்டு வந்த இவரை இவரது சில டியூன்களை கேட்ட எஸ். டி. பர்மன், நீ பேசாமல் இசையமைப்பாளர் ஆகிவிடலாமே என்றார். அவரிடமே அசிஸ்டெண்ட் ஆனார்.
அந்தக் காலத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரசித்த பாட்டு “Yeh Dil Mujhe Bata De..” (தமிழில், "என் எண்ணம் இனிப்பதேனோ?...")
படம் வெளியான வருடம் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடல்கள்! மறக்க முடியுமா? ‘Woh Kaun Thi?’ (தமிழில் ‘யார் நீ’) "Shok Nazar Ki Bijiliyaan..." ("பார்வை ஒன்றே போதுமே...") பாடல் ஒன்றே போதுமே...  
‘Mere Saaya’ பாடல்களை அப்படி கொண்டாடினார்கள் இசையன்பர்கள். (“Nainon Mein Badra...” “Mera Saaya..”)

அப்புறம் ‘Mausam’ படத்தின் “Dil Dhundta Hai...”
அவர் இசை வீச்சை இயம்ப ஓர் இனிய மெலடி: "Betaab Dil Ki Tamanna.." (Link கீழே)
லதா மங்கேஷ்கர் - மதன்மோகன் கலெக் ஷன்  நிறைய உண்டு. விரும்பிக் கேட்போம்.  ஆனால் ஒரே ஒரு பாட்டு தான் கேட்பீர்கள். ஆம், மிருதுவான மெலடி ஒன்று நிற்காமல் சென்று கொண்டே இருக்கும், உணர்வுகளைப் பிழிந்தெடுத்தபடி.  அத்தனை இசைவாக அத்தனை பாடலும்…
தலத் மெஹமூதுக்கு ஒரு “Phir Wohi Sham...” (‘Jahan Ara’ -  பாடலும் இவரே!) என்றால் மன்னாடேக்கு ஒரு “Kaun Aaya Mere Man..” (‘Kalpana’)  

தன் பாடல்களைப் போலவே தன்னையும் அமரிக்கையாக அணிவித்துக் கொள்வார் அழகாக. கஜல் சாம்ராட் என்றிவரைச் சொல்லுவார்கள். சிதார் இவர் பேவரிட் வாத்தியம். நிறைய பாடல்கள்… “Madosh” படத்தில் வரும் “Meri Yaad Mein...” அதில் முத்து.
பைரவி ராகம் இவருக்கு மட்டும் இன்னும் இன்னும் என்று குழைவைக் கொட்டும்!  உதா: “Tu Pyar Kare Ya Thukaraye...”(‘Dekh Kabira Roye’)
இவர் இசை அமைத்த ‘Anpadh’ படத்தின் அந்த இரண்டு பாடல்களுக்கு தன் எல்லா பாடல்களையும் தந்துவிடுவதாக இவரிடம் சொன்னாராம் பிரபல இசையமைப்பாளர் நௌஷத். (“Aap Ki Nazaron Mein Samjha...” & “Hai Isi Mein...”)எத்தகைய பாராட்டு!

‘Dastak’ படத்துக்கு நேஷனல் அவார்ட் கிடைத்தது. அந்த க்ளைமாக்ஸ் பாடல்! “Hum Hai...” தவிர “Bhaiya Na Daro..”
இவர் mass -க்கானவர் அல்ல class -க்கானவர் என்று பிரபல இசை விமர்சகர் ராஜூ பரதன் சொல்வார்.
என்ன ஒரு வருத்தமான ஆச்சரியம்! மணி மணியான பாடல்களை அணி அணியாகத் தந்த இவருக்கு கடைசி வரையில் Filmfare அவார்ட் கிடைக்கவில்லை. பினாகா கீத்மாலாவிலும் முதலிடம் வராமலிருந்தது, ஆனால் இவர் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘லைலா மஜ்னு'வின் பாடல், “Husna Hasir Hai” பினாகாவில் 18 வாரம் முதலிடத்தில்.
வெளிவராத இவரது ட்யூன்களை,  2004 -இல் வந்த ஷாருக்கான் படம் ‘Veer Zaara’ இல் யாஷ் சோப்ரா  உபயோகித்தார்.
பாடல் இன்னும் எத்தனையோ இருக்கு மதன் புகழ் பாட...

கருத்துகள் இல்லை: