வியாழன், 13 ஜூன், 2024

அதானி குழுமம் 10,422 கோடி ரூபாய்க்கு பென்னா சிமெண்ட்-ஐ வாங்குகிறது

 மாலை மலர் :  அதானி குழுமம் பெரும்பாலான தொழில்களை நடத்தி வருகிறது. கட்டுமான தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. அம்புஜா சிமெண்ட் நிறுவனம் அதானி குழுமத்தை சேர்ந்ததாகும்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு விளங்கும் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை 10,422 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது. பென்னா சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்டது.


இதனுடன் இணைந்து இனிமேல் அம்புஜா சிமெண்ட் வருடத்திற்கு 89 மில்லியன் டன் தயாரிக்கும் திறன் கொண்டதாக அதிகரிக்கும். அதானி குழுமம் வருடத்திற்கு 140 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தென்இந்தியாவில் சிமெண்ட் விற்பனையில் மிகப்பெரிய அளவில் கால் பதிக்க விரும்புகிறது.

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் பென்னா சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 10 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்கிறது. கிருஷ்ணாபட்டணம் மற்றும் ஜோத்பூரில் தலா 2 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கும் கட்டுமான வேலைகள் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிவடைய இருக்கிறது.

பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான வேலைகள் அனைத்தும் 3 அல்லது 4 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: