மாலை மலர் : இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்தது. தற்போது அதில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறது. அதிபராக இருக்கும் விக்ரமசிங்கே மறுசீரமைப்பு செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அதிபர் தேர்தல் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது சட்ட அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது.
தேர்தல் ஆணையமும் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரைக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது.
புதன், 12 ஜூன், 2024
அதிபர் விக்ரமசிங்கே : இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது!
சன் டிவியும் திமுகவும்- திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி!
Kandasamy Mariyappan : சன் டிவியும் திமுகவும்......
சன் குழுமத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
பல பொது மக்களிடம் உரையாடும் பொழுது, 1990 முதல் மத்தியில் அதிகாரத்தில் இருந்து கொண்டு, சன் டிவி தவிர வேறு யாரையும் தொலைக்காட்சி ஆரம்பிக்க விடாமல் செய்து,
பல லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்த திமுக, கொரோனா நிவாரண நிதியாக ஒரு 100 கோடி கொடுத்தா என்ன என்று கேட்கின்றனர்.
இதைத்தான் திமுகவிற்கு எதிரான, காலம் காலமாக நடக்கும் சதி என்று கூறுகிறேன்.
முதலில் தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல நிறுவனங்களைப் போன்று... சன் குழுமமும் பணம் கொடுப்பது... அவர்களது விருப்பம்.
அதேபோன்று... பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் நிவாரண பணம் கொடுப்பது போன்று திமுக பணம் கொடுப்பது அவர்கள் விருப்பம்.
அடுத்து,
1. சன் டிவி ஆரம்பித்த வருடம் ஏப்ரல், 1993.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : இந்தியப் பங்குச்சந்தை கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் முதல், கடந்த வார வெள்ளிக்கிழமை வரை அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ் ஓரே நாளில் டபுள் மடங்கு உயர்ந்தது முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சென்செக்ஸ் 6100 புள்ளிகள் சரிவது வரையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் திக்குமுக்காட வைத்தது.
இந்த நிலையில் உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல் இந்தியாவில் நடித்துள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாமல் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையின் தலைவர் ஆவார்.
9 மாடுகளைக் கொன்ற சாயப்பட்டறை? குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்த விவசாயி!
![]() |
minnambalam.com - Kavi : கரூரில் அடுத்தடுத்து 9 மாடுகளை இழந்த விவசாய தம்பதியினர், தங்களது மாடுகள் இறப்புக்கு அருகில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் நச்சுக்கழிவுதான் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கரூர் திருமாநிலையூரில் வசித்து வருபவர் வேலுசாமி. இவரது மனைவி ஜாஸ்மின். விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மாடுகள் வளர்த்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
எத்தியோப்பிய ஏதிலிகயுடன் சென்ற படகு கவிழ்ந்து 38 பேர் பலி!
thesamnet : யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் என தெரியவந்துள்ளது. விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 78 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய், 11 ஜூன், 2024
கர்நாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? தமிழ்நாட்டில் எதிர்ப்பு
![]() |
காங்கிரஸ் கட்சி அவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மூன்றாவது அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றது. அந்த அமைச்சரவையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் ஒருவராக கர்நாடக மாநில பா.ஜ.கவின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான வீ. சோமன்னா நீர்வளத் துறை இணை (ஜல்சக்தி) அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நீர்வளத் துறை அமைச்சராக சி.ஆர். பாடீல் நியமிக்கப்பட்டிருந்தாலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்தத் துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!
![]() |
மின்னம்பலம் -Aara : திமுக நாடாளுமன்ற கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜூன் 10ஆம் தேதி அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதன்படி திமுகவின் மக்களவை- மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
திமுக மக்களவை குழு தலைவராக ஏற்கனவே பதவி வகித்த டி. ஆர். பாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை குழு கொறடாவாக ஆ ராசாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வயாக்ரா மாத்திரை ஞாபக மறதிக்கும் மருந்தாகுமாம்! ஆய்வு முடிவு!
மாலை மலர் : ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான வாயாகரா குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது.
வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் ! முன்பகுதி பலத்த சேதம் !
வீரகேசரி : ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது.
அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது.
இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகக் கனிமொழி எம்.பி. நியமனம்!
நக்கீரன் : ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,
இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது.
புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
திங்கள், 10 ஜூன், 2024
என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பாராளுமன்ற சபாநாயகர் ஆகிறார் ( சந்திரபாபு நாயுடுவின் மைத்துனி)
maalaimalar.: திருப்பதி: தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.
சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
கச்சத்தீவு' நாடகம் அம்பலம்- மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி - காங்கிரஸ்
மாலை மலர் : காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்ததாக தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது..
கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜகவின் கட்சத்தீவு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NDA Cabinet Ministers தெற்கில் இருந்து 13 பேர்.. 7 பெண்கள்..
மாலை மலர் : மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில்
கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால் புதிய அமைச்சரவை குறித்த எதிர்பார்ப்புகள் ஆரமபம் முதலே உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக 78 முதல் 82 அமைச்சர்கள் வரை ஒரு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று இருக்கும் சூழலில் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில் 72 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
தமிழர்களால் மறக்கப்பட்ட தமிழர்கள்! அரசியல் வாதிகளினால் கண்டுகொள்ளப்படாதவர்கள்!
தேசம் நெட் :நம்மில் ஒருத்தராக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை
நமது சமூகத்தில் ஏதோ வலுவிழந்தவர்களாகவே பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
அவர்களுக்கான அங்கீகாரமும் இல்லை.
அது போல அடிப்படையில் அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழ்தேசியம் பேசி தம் வாக்கு வங்கியை நிறைத்துக்கொள்ளும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளில் கூட மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச தயாரில்லை.
இந்த நிலையில் நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் தேசம் ஜெயபாலன் மேற்கொண்ட உரையாடல்.
சனி, 8 ஜூன், 2024
உத்தேச அமைச்சர்கள் பட்டியல் லீக் .. புதிய என் டி ஏ கூட்டணி அரசின்
மாலை மலர் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இன்று நடைபெறவுள்ள என்.டி.ஏ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன.
இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.
130 தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை! நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!
தமிழ்க்கவி : INDIA கூட்டணியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்;
பாஜக (BJP)500 லிருந்து1000 வாக்குகளுக்கும் கீழே குறைவாகப் பெற்று ,
வெற்றி பெற்ற 130 தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!
நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்,
பிஜேபி-500 வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் வென்றது 30 தொகுதிகள்.
1000 வாக்குகளுக்கு கீழ் வென்றது 100 தொகுதிகள். மொத்தம் 130 தொகுதிகள்.
தற்போதுள்ள கணக்குப்படி பிஜேபி வென்றது -243 தொகுதிகள்.
243 தொகுதிகளில் 130 தொகுதிகளை கழித்தால் 113 தொகுதிகளில்தான் வென்று இருக்க வேண்டும்.
மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் என்று முடிவு வரவும்....
தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில்
மந்த நிலையை ஏற்படுத்தி, எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை
கண்டிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
வெள்ளி, 7 ஜூன், 2024
பாஜகவுக்கு முட்டு கொடுத்த நவீன் பட்நாயக் மாயாவதி ஜெகன் மோகன் வரிசையில் நாயுடு நிதிஷ்!
Maha Laxmi : நிதிஷ் குமார்களுக்கும் சந்திரபாபு நாயுடுகளுக்கு ஒரு எச்சரிக்கை...
நிதீஷ் குமார் , சந்திரபாபு நாயுடு போன்றோர் கொஞ்சம் வரலாற்றை நோக்கவேண்டும்
இன்று மோடிக்கு இவர்கள் கொடுக்கும் ஆதரவு எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்காலத்தில் இவர்களின் கட்சிகளுக்கு கொடும் என்பதை சற்று பார்ப்போமா?
இவர்களின் கட்சி எம்பிக்கள் ஏறக்குறைய அனைவருமே பாஜகவினால் மிரட்டியோ விலைகொடுத்தோ பாஜகவில் இணையும் சாத்தியம் இருக்கிறது!
சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் இந்த விதியை நொந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டுக்கணக்காக பாஜகவின் ஒரு பீ டீம் போலவே செயல் பட்ட நவீன் பட்நாயக் இன்று தனது மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்து விட்டார்!
சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுப்பு.. சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு
tamil.oneindia.co - Velmurugan P : திருச்சி:பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் பதிவான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார்.
மேலும் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்..
திருச்சி வழக்கில் தான் சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்பட எல்லா வழக்கில் இருந்து மீண்டால் தான் சவுக்கு சங்கர் வெளியே வரமுடியும
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பஞ்சாப் பெண் பளார் .. சண்டிகர் விமான நிலையத்தில்
nakkheeran.in :; பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்தை அந்தப் பெண் கான்ஸ்டபிள் சரமாரியாக கண்ணத்தில் தாக்கினார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்த மூத்த சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் பேசியிருந்ததால், பெண் காவலர் அவரை அறைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
BJP in UP winning margin because of AIMIM - Asaduddin Owais
ஆலஞ்சி மு மன்சூர் : BJP in UP winning margin because of AIMIM
*● Bijnor:*
*BJP - 97165*
*SP+RLD - 95720*
*AIMIM - 2290*
*● Nakur:*
*BJP - 1,03,771*
*SP - 1,03,616*
*AIMIM - 3591*
*● Kursi:*
*BJP - 1,18,614*
*SP - 1,18,094*
*AIMIM - 8533*
*● SULTANPUR:*
*BJP - 92245*
*SP - 90857*
*AIMIM - 5240*
நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.
![]() |
Karthikeyan Fastura : நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் முடிந்த அளவிற்கு அனைத்துவித தேர்தல் ஊழல்களையும் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ்குமாரை நியமிக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று மார்ச் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிக்கிறார்.
அவருக்கு பதிலாக சுக்பீர்சிங் சாந்து நியமிக்கப்படுகிறார்.
வியாழன், 6 ஜூன், 2024
தமிழில் ஆங்கில வார்த்தைகளை கலக்க வேண்டிய தேவை உண்டா? ஏன் ?
![]() |
Radhika Murugesan : ஒரு நண்பர் “ஏன் நீங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார். உண்மையில் தமிழை விட எனக்கு ஆங்கிலம் தான் சரளமாக பேசவும் எழுதவும் வரும்!.
என் தாய் வழி முன்னோர் இலங்கையிலிருந்து புரசைவாக்கம் பகுதியில் வந்து குடிபெயர்ந்தனர்.
பின்பு அடுத்த தலைமுறை இங்கே ஆங்கிலம் வழி கல்வி கற்றனர்.
அதனால் தாய் வழியில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மட்டுமே பேசுவர்.
அப்பா மதுரையில் பிறந்து 18 வயதில் மெட்ராஸில் கிண்டியில் பொறியியல் படிக்க வந்து சேர்ந்தார்.
அவர் படித்தது தமிழ் வழியில். ஆங்கிலம் அற்புதமாக எழுதுவார்.
ஆனால் சரளமாக பேச வராது.
நான் படித்தது மெட்ராஸில் ஆங்கில பள்ளியில்.
அங்கே ஒரே பாடம் மட்டுமே தமிழ் மொழி .
வெளியே தமிழ் பேசினால் தண்டனை கட்டணம் 5 பைசா உண்டு.
நிதி, உள்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்கும் நிதிஷ் நாயுடு கட்சிகள்
ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜஸ்டின் ட்ரூடோ :இந்தியாவும் சீனாவும் கனடா ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்!
![]() |
மாலை மலர் : ஒட்டாவா கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.justin-trudeau-canada-india-second-biggest-foreign-threat-democracy
சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
nakkheeran.in : இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியாக் கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார்.







