திங்கள், 10 ஜூன், 2024

தமிழர்களால் மறக்கப்பட்ட தமிழர்கள்! அரசியல் வாதிகளினால் கண்டுகொள்ளப்படாதவர்கள்!

 தேசம் நெட்  :நம்மில் ஒருத்தராக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை
நமது சமூகத்தில் ஏதோ வலுவிழந்தவர்களாகவே பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
அவர்களுக்கான அங்கீகாரமும் இல்லை.
அது போல அடிப்படையில் அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழ்தேசியம் பேசி தம் வாக்கு வங்கியை நிறைத்துக்கொள்ளும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளில் கூட மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச தயாரில்லை.
இந்த நிலையில் நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் தேசம் ஜெயபாலன் மேற்கொண்ட உரையாடல்.


இவ்வுரையாடலில் இரண்டு வயதில் நிகழ்ந்த விபத்தில் உடல் ஊனமுற்ற மகனை மூன்று தசாப்தங்களாக வளர்த்து வருகின்ற அனெஸ்லி ராஜரத்தினம்,  
இவரால் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு
தற்போது 35 உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிக்கும் ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவரும் மாற்றுத்திறனாளியான இராசலிங்கம் அம்பிகைபாலன்இ மற்றும் சமூக செயற்பாட்டாளரும் மாற்றுத் திறனாளியான குமாரவேலு அகிலன் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்.
இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

கருத்துகள் இல்லை: