புதன், 12 ஜூன், 2024

உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

 tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  :   இந்தியப் பங்குச்சந்தை கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் முதல், கடந்த வார வெள்ளிக்கிழமை வரை அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ் ஓரே நாளில் டபுள் மடங்கு உயர்ந்தது முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சென்செக்ஸ் 6100 புள்ளிகள் சரிவது வரையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் திக்குமுக்காட வைத்தது.
இந்த நிலையில் உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல் இந்தியாவில் நடித்துள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாமல் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையின் தலைவர் ஆவார்.

உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

பிரவீன் சக்ரவர்த்தி-யின் கட்டுரை இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது மட்டும் அல்லாமல், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சி பேட்டியில் பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை வழங்கியது குறித்து ராகுல் காந்தி-யின் விமர்சனத்திற்கு இக்கட்டுரை கூடுதல் வலு சேர்க்கிறது.

பிரவீன் சக்ரவர்த்தி எழுதிய கட்டுரையில், மே 31, 2024 அன்று இந்திய பங்குச்சந்தையில் திடீர் பரபரப்பு நிலவியது. தேசிய பங்குச்சந்தையில் (NSE) வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட பங்குகளின் மதிப்பு முந்தைய நாளைக் காட்டிலும் இரட்டிப்பாக உயர்ந்தது. இது மிகவும் அரிதான நிகழ்வு.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

உதாரணமாக, 2020 மார்ச் 12 அன்று, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய பெருந்தொற்று என அறிவித்தபோது, பங்குச்சந்தை வர்த்தகம் முந்தைய நாளைக் காட்டிலும் 22% உயர்ந்தன, ஆனால் அப்போதும் கூட இரட்டிப்பு வளர்ச்சி அடையவில்லை.

இதேபோல் கடந்த 2014 மே 16ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நரேந்திர மோடி, மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இதுவும் இந்திய வரலாற்றில் ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்தது. அப்போது பங்குச்சந்தை வர்த்தகம் முந்தைய நாள்-ஐ ஒப்பிடுகையில் இரட்டிப்பாக உயர்ந்தன.

ஆனால், மே 31, 2024 அன்று எந்த பெரிய செய்தியும் இல்லை, அன்றைய நாள் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் இறுதி கட்டத்திற்கு முந்தைய நாள் என்பது மட்டுமே தனி சிறப்பு. ஆனால் பங்குச்சந்தை வர்த்தகம் ஏன் இரட்டிப்பாக உயர்ந்தன என்பது ஒரு பெரிய கேள்வி.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

எந்த ஒரு சிறப்பு செய்தியோ, நிகழ்வோ இல்லாத நாளில் பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்தவர்கள் யார்? முதலீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமானவை என்றாலும், NSE பங்குச்சந்தை நடவடிக்கைகளை முதலீட்டாளர் வகைகளின் அடிப்படையில் சில தகவல்களை வெளியிடுகிறது.

அதாவது, சில்லறை முதலீட்டாளர்கள் (பொது மக்கள்), இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்ற வகையில் யார் அதிகமாக முதலீடு செய்கிறார்கள் என்ற தகவலை வெளியிடுகிறது.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

அப்படி NSE வெளியிட்ட தகவல்கள் படி மே 31 ஆம் தேதி நாளில் அதிக அளவில் பங்குகளை வாங்கியவர்கள் 58% வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஏனென்றால், அதற்கு முந்தைய வாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கு, மாறாக அதிகளவில் விற்பனை செய்பவர்களாகவே இருந்தனர், இந்த திடீர் மாற்றம் தான் ஆச்சரியமான விஷயம்.

மே 31ம் தேதி எந்த பெரிய செய்தியும் இல்லாதபோது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழு ஒன்று, திடீரென்று இந்திய பங்குச்சந்தை மீது நம்பிக்கை கொண்டு பங்குகளை அதிக அளவில் வாங்கியது மர்மமாக இருக்கிறது என்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி.
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

இந்த மர்மமான பங்கு முதலீட்டு நடவடிக்கை அடுத்த நாள் நடந்த நிகழ்வுகள் மூலம் எளிதாக விளக்க முடியும். அடுத்த நாள் அதாவது ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்து அன்று மாலை 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆச்சரியப்படும் வகையில், ஒவ்வொரு கணிப்பு முடிவிலும் பாஜக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டது. சிலர் 400 இடங்கள் வரை வெற்றி பெறும் என கூட கணித்தனர். இந்த எக்சிட் போல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு வரை, இந்த கருத்துக் கணிப்பு தகவல்கள், இந்த ஆய்வு செய்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊடக நிறுவனங்கள் மட்டுமே இந்த கணிப்பின் முடிவுகளை அறிந்திருந்திருக்க முடியும்.

இப்படியிருக்கும் போது கருத்துக் கணிப்புகள் மோடிக்கு வெற்றியை எக்சிட் போல் கணிப்பதற்குச் சரியாக ஒரு நாள் முன்னதாக பங்குச் சந்தை வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது போன்ற மிக அரிதான நிகழ்வு நிகழ்ந்தது என்பது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது!
உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!

மே 31ம் தேதி வார இறுதிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி பங்குச்சந்தை திறந்தபோது, நரேந்திர மோடி தலைமையிலான NDA கூட்டணி-க்கு மூன்றாவது ஆட்சிக் காலம் உறுதி என்று எக்சிட் போல் கணிப்பு முடிவுகள் கணித்ததால், பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை எட்டியது.

இதன் மூலம், மே 31ம் தேதி திடீரென்று அதிக அளவு பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழு, முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்வதை அடுத்த 2 நாட்களுக்குக் கண்டனர். ஆனால், ஜூன் 4ம் தேதி உண்மையான தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, அனைத்து எக்சிட் போல் கணிப்பு முடிவுகளும் தவறாக இருந்தது தெளிவாகியது.

இந்த தேர்தலில் மோடி-யின் பிஜேபிக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை, இதனால் பங்குச்சந்தை பீதியில் சரிந்தது. இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.30 லட்சம் கோடி இழந்தது. இது பங்குச்சந்தையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவு. இந்த நேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு பெரும் லாபம் ஈட்டியிருந்தனர். இந்த சம்பவத்தின் எளிமையான பக்கம் இது.

ஐடிசி பங்கு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமா பங்கு கிடைக்க போகுது..! ஐடிசி பங்கு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமா பங்கு கிடைக்க போகுது..!

இதற்கு மிகவும் சிக்கலான மற்றொரு பக்கம் உள்ளது, பங்கு சார்ந்த Derivatives மூலமாகப் பங்குச்சந்தையில் பெரும் லாபம் ஈட்டப்பட்டது. இந்த டெரவேட்டிவ் வர்த்தகத்தின் மூலம், பங்கு மதிப்பு உயர்வில் இருந்தாலும் சரி, சரிவில் இருந்தாலும் சரி லாபம் ஈட்ட முடியும்.

பங்குச்சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும்போது, இந்த டெரவேட்டிவ் வர்த்தக முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். இந்திய பங்குச்சந்தையில் எர்சிட் போல் கணிப்பு முடிவுகள் மற்றும் உண்மையான முடிவுகளுக்கு இடையே ஏற்பட்ட பெரும் ஏற்ற இறக்கத்தின்போது, டெரவேட்டிவ் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடந்திருப்பதைக் காட்டுகிறது பங்குச்சந்தை தரவுகள்.

எக்சிட் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என பொய்யாக கணித்திருக்காவிட்டால், ஜூன் 3ம் தேதி பங்குச்சந்தை இவ்வளவு உயர்ந்திருக்காது, அதன் விளைவாக ஜூன் 4ம் தேதி இவ்வளவு சரிந்திருக்காது. டெரவேட்டிவ் வர்த்தக முதலீட்டாளர்களுக்குத் தேவையான இந்த ஏற்ற இறக்கத்தை உருவாக்கியது எக்சிட் போல் கணிப்புகள் தான். இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள கேள்வி.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், எக்சிட் போல் கணிப்பு முடிவுகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் போது, பங்குச்சந்தையில் சந்தேகத்திற்குரிய மற்றும் மர்மமான நடவடிக்கைகள் நடந்தேறின என்பதைப் பங்குச்சந்தை தரவுகள் உறுதிப்படுத்திவிட்டன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தை அடைந்தனர், உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் அதிகப்படியான இழப்பை எதிர்கொண்டனர்.

எக்சிட் போல் கணிப்பு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக ஜூன்1 ஆம் தேதி மாலை வெளியிடப்படுவதற்கு முன்பே அவற்றை முன்கூட்டியே லீக் செய்து அதை அறிந்துகொண்ட சில முதலீட்டாளர்கள், இந்த "Inside (Mis)Information" மூலம் லாபம் ஈட்டியிருக்கலாம் என்ற கருத்து நிலவியுள்ளது. இது பங்குச்சந்தை சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும். பெரும்பாலான நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாக விசாரிக்கப்படும்.

தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகள்:

மே 31ம் தேதி இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார்?
லாபம் ஈட்ட எக்சிட் போல் கணிப்பு முடிவுகளின் முக்கியமான, பொதுமக்களுக்குத் தெரியாத தகவல்களை அவர்கள் பயன்படுத்தினார்களா?
எக்சிட் போல் கணிப்பு நடத்திய நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய ஊடக நிறுவனங்களுடனான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உறவு என்ன?
இந்த முதலீட்டாளர்கள் யாருடைய பணத்தை அல்லது யாருக்காக முதலீடு செய்தார்கள்?
இந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழு எவ்வளவு லாபம் ஈட்டினார்கள்?

BJP ஆட்சி மீண்டும் அமைத்தால் இந்திய பங்கு சந்தைகளின் நிலை இது தான் – நிபுணர்கள் கருத்துBJP ஆட்சி மீண்டும் அமைத்தால் இந்திய பங்கு சந்தைகளின் நிலை இது தான் – நிபுணர்கள் கருத்து

2021 அக்டோபர் 9ம் தேதி, ஆஸ்திரியாவின் அப்போதைய சான்சிலர் ஒரு தனித்துவமான ஊழல் வழக்கில் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தனக்குச் சாதகமாகக் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பொய்யாக உருவாக்கி, ஊடகங்களை அவற்றைக் வெளியிட கட்டாயப்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த சம்பவத்தை விட இந்தியக் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் மோசமான நிலையை அடைந்திருக்கக் கூடும்.

மே 30 முதல் நடந்த நிகழ்வுகளின் வரிசை மற்றும் பங்குச்சந்தை தரவுகளின் அடிப்படையில், எக்சிட் போல் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்தது மட்டுமல்லாமல், பங்குச்சந்தையைப் பயன்படுத்தி லாபம் ஈட்டவும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை எளிதில் ஊகிக்க முடியும். இதன் மூலம் உலகின் முதல் "எக்சிட் போல் பங்குச்சந்தை மோசடி"யை இந்தியா எதிர்கொண்டது!

இந்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் பற்றியும், எக்சிட் போல் முடிவுகளின் ஆதிக்கம் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். முதலீட்டுச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குச்சந்தையின் நேர்மையை உறுதிப்படுத்தவும் இது அவசியம் என்று பிரவீன் சக்ரவர்த்தி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை: