ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

 zeenews.india.com - RK Spark :  இரைப்பை சுவர்களில் இருந்து உருவாகும் புற்றுநோய் வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.  
செரிமான மண்டலத்தின் முக்கியமான பகுதியாக வயிறு உள்ளது,
இதில் புற்றுநோய் ஏற்படுவது பெரியளவில் நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.  
உலகளவில் அதிகளவில் இருக்கும் புற்றுநோய்களில் வயிற்று புற்றுநோயும் ஒன்று,
 இது உலகளவில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
 சமீப காலமாக வயிற்றுப் புற்றுநோய் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது,
இளைய தலைமுறையினருக்கு கூட வயிற்று புற்றுநோய் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஆக உயர்வு!’

BBC :  துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி. கே.சி.பழனிசாமியின் கடைகளுக்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி

 மாலை மலர் :  சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமிக்கு சொந்தமான கோவையில் உள்ள சேரன் டவரில், மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருந்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

திருப்பூரின் நிலைமை மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது

 hindutamil.in : திருப்பூரின் நிலைமை மோசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது - சமூக வலைதளங்களில் வைரலாகும் மளிகைக் கடை பதாகை
திருப்பூர்:  நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடையாது என்று திருப்பூரில் மளிகைக் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலாளர் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, தொழில்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் போதிய ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.

யாழ்ப்பாணம் - பிரபல வழக்கறிஞரும் அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்

யாழ்ப்பாணம் -  பிரபல மனித உரிமை வழக்கறிஞரும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்தவரும் பிரபல அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்  
இவர் ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் யாழ் மாநகர சபையின் பழம்பெரும்  முக்கிய அங்கத்தவராகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாற்று கட்சி உறுப்பினர் மாநகர சபை விவாதத்தின் போது இவரின் ஜாதியை இழிவு படுத்தும் முகமாக இவரை நோக்கி குலத்தளவே ஆகுமாம் குணம் என்று வசைபாடினார்
அப்போது திரு ரெமிடியாஸ் அவர்கள்  நான் அசல் திராவிடன் என்று முழங்கினார்!
இவர் ஒரு சிறந்த  வழக்கறிஞர் ..
போர்காலங்களில் பல பேரை சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டுள்ளார் ..
பலபேரிடம் பணம் கூட வாங்காது இலவசமாக கூட வாதாடி உள்ளார்
இன்று இவர் காலமான செய்தி அறிந்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது

விக்னேஸ்வரன் சிங்கள பெண்ணையே திருமணம் செய்துள்ளார் . பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருணம் செய்துள்ளனர்

Sarath Weerasekara is against devolution of power to Tamils: CV Vicky

 சமூகம் மீடியா  :   : விக்னேஸ்வரன் சிங்கள பெண்ணையே திருமணம் செய்துள்ளார் . பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருணம்  செய்துள்ளனர்   இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்துக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா பதிலடி.
“இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள்.

டாடா, பிர்லா, அம்பானி.. ஒரே நாளில் 1 லட்சம் கோடி முதலீடு-க்கு உத்தரவாதம்..!

டாடா குழுமம்

tamil.goodreturns.in - Prasanna Venkatesh : லக்னோ: இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இருக்கும் நிலையில்,
இந்தியாவின் 3 பெரிய வர்த்தகக் குழுமங்கள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா குழுமம், ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 3 முக்கிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் அடுத்த சில வருடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளனர்.

சனி, 11 பிப்ரவரி, 2023

சென்னை ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 மாலை மலர் :  சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
 அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- * ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அதிரடி கைது.. நிதி மோசடி குற்றச்சாட்டு காரணம்.

tamil.asianetnews.com  -  vinoth kumar  : சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் திடீரென தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பிரபல நிறுவனங்களில் ஒன்று ரத்னா ஸ்டோர்ஸ். திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடையாக திகழ்ந்து வந்தது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளது.

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை- மணப்பெண் கிடைக்காத 200 வாலிபர்கள் பாத யாத்திரை

 மாலைமலர் : கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவிப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் திருமண மாகாத அந்த இளைஞர்கள் அனைவரும் ராஜா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று மக்கள் கவனத்தை கவர்ந்தனர். திருமணமாகாத அந்த இளைஞர்கள் அனைவருக்கும் 30 வயதுக்கும் மேலாகிறது.
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் தான் அதிக அளவு திருமணமாகாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மணப்பெண் கிடைப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்திய உதவியுடன் நிறுவப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார நிலைய திறப்பு விழா நிகழ்ச்சிகள் காணொளி

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது.
பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார்........
முழு உரை :  மலையோரம் செய்திகள் :
‘கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்.’
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி - பங்க்குகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி

 மாலை மலர்  :  இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 24 ஆயிரம் ஆக உயர்வு

தினத்தந்தி  : அங்காரா துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

ஆங்கில மொழியை அரசு அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்! இலங்கை அமைச்சர் டயானா கமகே

 Virakesari.lk  :  (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.
அப்போது எவரும் முரண்பட்டுக் கொள்ளமாட்டார்கள். விக்கினேஷ்வரன் சண்டித்தனத்தையும், விமல் வீரவன்ச இனவாதத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது.

துருக்கி - சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

 தினத்தந்தி :இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.
நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கி சிரியா பூகம்பத்தால் 15 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி

veerakesari சக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை 7.8 ரிச்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பங்கள் அது அமைந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய பூகம்ப நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி இதுபற்றி தெரிவித்தபோது,
துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நகர்ந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

பசு அணைப்பு தின அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.

மாலை மலர் :  புதுடெல்லி உலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை கடும் விமர்சனங்களை பெற்றது. இணையதளத்தில் பலரும் மீம்ஸ் போட்டும், வீடியோக்களை பதிவிட்டும், கிண்டலான கருத்துக்களை வெளியிட்டும் கலாய்த்தனர்.
இந்நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததையடுத்து, பசு அணைப்பு தினம் தொடர்பான அறிக்கையை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.

கடத்தல் தங்கம்: 17.7 கிலோ பொட்டலங்களை கடலில் வீசிய நபர்கள் - முத்துக்குளித்து மீட்ட ஸ்கூபா டைவர்கள்

 BBC News தமிழ் : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தங்க கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திலிருந்து கஞ்சா, ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், ஏலக்காய், வலி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள்: போக்குவரத்துக் கழகம்!

 மின்னம்பலம் -Kavi : சென்னையில் உள்ள 186 வழித்தடங்களில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில்,
தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ராஜா (பொறுப்பு) மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கலைஞருக்கு அருகே இருந்த நல்ல அதிகாரிகளை போன்றவர்கள் இப்போது இல்லை?

 Kulitalai Mano  :  கோபாலபுரம் கலைஞர் முதல்வர் வீடு.
அங்கே எளிய மக்கள் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் சொல்ல வருவார்கள்.
கலைஞர் வெளியே வரும்பொழுது அத்தனை மனுக்களையும் பெற்று  உடனடி உத்தரவுகளை பிறப்பிப்பார்.
பிறகு இப்படியான மனுக்களை பெற தன் வீட்டு வாசலில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அமர்த்தினார்.
அந்த இளம் அதிகாரி காலை 7.30மணிக்கெல்லாம் கலைஞர் இல்லம் வந்துவிடுவார்.
அப்படி வர அவர் 5மணிக்கெல்லாம் அவர் வீட்டிலிருந்து புறப்படவேண்டும்.
10மணி வரை கலைஞர் கோட்டைக்கு புறப்படும் வரை   மககளிடம் மனுக்களை பெற்று அந்த இடத்திலேயே
அவர்களுக்கான நிவாரணம் கிடைக்க வழி செய்வார்.
சம்பந்தப்பட்டத் துறைகளை போனில் அழைத்து வழிகாட்டுவார்.
எளிய மக்கள் கலைஞரிடம் நேரடியாக சொன்னால் எப்படி நிவாரணம் கிடைக்குமோ

வியாழன், 9 பிப்ரவரி, 2023

இலங்கையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக அண்ணாமலை- வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 tamil.oneindia.com  - Mathivanan Maran  :  யாழ்ப்பாணம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் எல்.முருகன், அண்ணாமலையை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
இலங்கை சென்றுள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி வரை இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எல். முருகன் கலந்து கொள்ள உள்ளார்.
இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்படும் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார்.
இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.
மேலும் வடக்கு மாகாண மக்களின் கலாச்சார உட்கட்டமைப்பிற்கான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது.
இந்த மையம் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைய உள்ளது.

கொரியாவில் 6500 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

தேசம் நெட் - அருண்மொழி : கொரிய வேலைவாய்ப்பிற்கான மொழித் தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
சுமார் 6,500 தொழில் வாய்ப்புகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் கொரிய மொழி பரீட்சை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை- அமைச்சர் மனோ தங்கராஜ்

 மாலைமலர் : நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வெகுவிரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும்.

அதானி… அதானி… மோடி… மோடி…: ராகுலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

 minnambalam.com  -  Kavi  :  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 8) உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதன் பின் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கியது. ஆனால் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் இதற்கு அனுமதி மறுக்கவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவையும் தொடர்ந்து முடங்கியது.

டெல்லி கல் அரைக்கும் கிரைண்டரில் ஷ்ரத்தா வார்க்கரின் எலும்பை அரைத்து பவுடராக்கிய அப்தாப்..பூனாவாலா

டேட்டிங் ஆப்

Vishnupriya R - Oneindia Tamil News:  டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்த அப்தாப் , அவருடைய எலும்புகளை கல் அரைக்கும் கிரைண்டரில் போட்டு அரைத்ததாக பகீர் தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்திய தலைநகரமே அதிர்ந்த கொடூர கொலைகளுக்குள் ஒன்று என்றால் அது ஷ்ரத்தா வாக்கர் கொலைதான்.
மும்பையை சேர்ந்தவர் ஷ்ரத்தா வாக்கர். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் அப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.
அவருடன் மும்பையில் லிவிங் டுகெதர் உறவில் ஷ்ரத்தா இருந்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.