Vishnupriya R - Oneindia Tamil News: டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்த அப்தாப் , அவருடைய எலும்புகளை கல் அரைக்கும் கிரைண்டரில் போட்டு அரைத்ததாக பகீர் தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்திய தலைநகரமே அதிர்ந்த கொடூர கொலைகளுக்குள் ஒன்று என்றால் அது ஷ்ரத்தா வாக்கர் கொலைதான்.
மும்பையை சேர்ந்தவர் ஷ்ரத்தா வாக்கர். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் அப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.
அவருடன் மும்பையில் லிவிங் டுகெதர் உறவில் ஷ்ரத்தா இருந்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பெற்றோரை உதறி தள்ளிவிட்டு அப்தாபுடன் ஷ்ரத்தா டெல்லிக்கு சென்றுவிட்டார்.
அங்கு ஒரு வீட்டில் இருவரும் தங்கி வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஷ்ரத்தா கொலை வழக்கு.. நார்கோ டெஸ்டில் டாக்டர்களையே முட்டாளாக்க நினைத்த அப்தாப் தகராறு
இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆவது வழக்கமாம்.
ஒரு முறை ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாப்பிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அப்தாப் மறுத்துள்ளார்.
இது குறித்து இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஷ்ரத்தா சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களுக்கு பதிவுகளை அனுப்புவதை விடமாட்டாராம்.
அது போல் அப்தாப் குறித்து சில தோழிகளிடம் ஷ்ரத்தா கூறியிருந்தது தெரிகிறது.
ஷ்ரத்தா இந்த நிலையில் சில நாட்களாக ஷ்ரத்தா சமூகவலைதளங்களில் வராமல் இருந்துள்ளார்.
போன் செய்தாலும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் ஷ்ரத்தாவின் பெற்றோரை அணுகி போலீஸில் புகார் அளிக்க வைத்தனர்.
அப்போது அப்தாப்பிடம் விசாரித்த போது ஷ்ரத்தா தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு இனி இங்கு வரமாட்டேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதன் பிறகு நான் அவரை பார்க்கவில்லை என கூறியிருந்தார்.
கிரெடிட் கார்டு இதை நம்புவது போல் நடித்த போலீஸார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர் ஷ்ரத்தாவின் கிரெடிட் கார்ட் மூலம் தனது செலவுக்கு அப்தாப் பணத்தை செலுத்தினார்.
இது போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து செல்போனின் சிக்னலை வாட்ச் செய்த போது அப்தாப்பின் வீட்டை காட்டியது.
உடனே அப்தாப் வீட்டிற்கு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஷ்ரத்தாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரது உடல் எங்கே என போலீஸார் கேட்ட போது அவர் வீட்டிலிருந்த ப்ரிட்ஜை காட்டினார். பெரிய சைஸ் பிரிட்ஜ் பெரிய சைஸ் பிரிட்ஜ் உடலை வைப்பதற்காகவே பெரிய சைஸ் பிரிட்ஜை அப்தாப் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரிட்ஜை திறந்து பார்த்தால் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் சிறு சிறு மூட்டைகளாக கட்டியிருந்தார்.
தலையை மட்டும் ப்ரீட்ஜரில் வைத்திருந்தார். வீட்டில் நாற்றம் வராமல் இருக்க நறுமணங்களை பயன்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
6500 பக்கங்கள் இந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸார் 6500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் அப்தாப் கூறியதாக குற்றப்பத்திரிகையில் உள்ளதை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அப்தாப்புக்கும் ஷ்ரத்தாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பதால் மேலும் உறவை வளர்த்துக் கொள்ள இருவரும் ஹரித்வார், ரிஷிகேஷ், முகோரி, மணாலி, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் போய் ஒன்றாக தங்கினர்.
டேட்டிங் ஆப் மணாலி, சண்டீகர் சென்றுவிட்டு பார்வதி பள்ளத்தாக்கிற்கு சென்றபோது இருவரும் பத்ரி என்பவரை சந்தித்துள்ளனர்.
அவர் டேட்டிங் ஆப் மூலம் இருவருடனும் நட்பில் இருந்துள்ளார்.
பத்ரி தனது டெல்லி வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அவரது வீட்டில் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் 8 முதல் 10 நாட்கள் தங்கியிருந்தனர். அங்கும் அப்தாப் - ஷ்ரத்தா இடையே சண்டை தொடர்ந்துள்ளது.
செலவுக்கு பணம் கேட்ட அப்தாப் செலவுக்கு பணம் கேட்ட அப்தாப் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்ததால் இருவரையும் வீட்டை விட்டு செல்லுமாறு பத்ரி கூறியுள்ளார்.
இதையடுத்துதான் இருவரும் டெல்லியில் உள்ள சத்தர்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இருவருக்கும் வேலை இல்லாததால் தினசரி தேவைக்கு பணம் இல்லாமல் இவர்களுக்கிடையே சண்டையை மேலும் தீவிரப்படுத்தியது.
ஒரு முறை தினசரி செலவுக்கு நீயும் பணம் கொடுக்க வேண்டும் என ஷ்ரத்தாவிடம் அப்தாப் கேட்டுள்ளார்.
சண்டையிட்ட ஷ்ரத்தா இதனால் ஆத்திரமடைந்த ஷ்ரத்தா தன்னை காப்பாற்றுவாய் என நம்பி வந்தால் என்னிடமே காசு கேட்கிறாயே என அப்தாபை கடும் சொற்களால் பேசியுள்ளார்.
தினசரி சண்டை வருவதால், அப்தாப் ஷ்ரத்தாவை பிடித்து அவரது நெஞ்சில் ஓங்கி உட்கார்ந்துள்ளார்.
மேலும் அவர் இறக்கும் வரை கழுத்தை நெரித்துள்ளார்.
பின்னர் அவரை கொலை செய்து உடல் பாகங்களை கூறு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரது எலும்பை கல் அரைக்கும் கிரைண்டரில் கூட போட்டு பவுடர் செய்துள்ளார்.
கடைசி பீஸான தலையை ஷ்ரத்தாவை கொன்ற மூன்று மாதங்கள் கழித்து அப்புறப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்தாப் கூறியதாக குற்றப்பத்திரிகையில் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஷ்ரத்தாவின் உடல் ஷ்ரத்தாவின் உடலை நள்ளிரவு 2 மணிக்கு மேல் எடுத்துக் கொண்டு நாய்களுக்கு உணவாக போட்டதாகவும் அப்தாப் கூறியிருந்தார்.
இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் போதெல்லாம் ஷ்ரத்தா மும்பை போலீஸில் அப்தாப் குறித்து புகார் கொடுப்பது வாடிக்கை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
சேர்ந்து வாழ்வதாக அழைத்து வந்து ஒரு பெண்ணை இப்படி கொடூரமான முறையில் அப்தாப் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் செயலிகளை உடனடியாக முடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக