ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

டாடா, பிர்லா, அம்பானி.. ஒரே நாளில் 1 லட்சம் கோடி முதலீடு-க்கு உத்தரவாதம்..!

டாடா குழுமம்

tamil.goodreturns.in - Prasanna Venkatesh : லக்னோ: இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இருக்கும் நிலையில்,
இந்தியாவின் 3 பெரிய வர்த்தகக் குழுமங்கள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா குழுமம், ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 3 முக்கிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் அடுத்த சில வருடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளனர்.


ஆதித்ய பிர்லா குழுமம்
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா உத்தரப் பிரதேச முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் கூறுகையில், சிமென்ட், உலோகங்கள், ரசாயனங்கள், நிதிச் சேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல்வேறு வணிகங்களில் சுமார் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

குமார் மங்கலம் பிர்லா
மேலும் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் 7 வர்த்தகம் செயல்படுவதாகவும், இந்த 7 வர்த்தகத்திற்காகச் சுமார் 40000 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 30000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது இக்குழுமம்.

என் சந்திரசேகரன்
மேலும் டாடா சன்ஸ் தலைவரான என் சந்திரசேகரன் பேசுகையில் டாடா குழுமம் சமீபத்தில் கைப்பற்றிய ஏர் இந்தியா SATS மூலம் உத்தரப் பிரதேசத்தில் இன்டிகிரேடெட் மல்டி மோடல் கார்கோ ஹப்-ஐ ஜூரிச் விமான நிலைத்துடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தின் ஜீவார் விமான நிலையத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தார்.

டாடா குழுமம்
இதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தை நாட்டின் அனைத்து பகுதிகளையும், மாநிலங்களையும் இணைப்பை உறுதி செய்ய உள்ளதாக என் சந்திரசேகரன் இக்கூட்டத்தில் பேசினார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் டாடா குழுமத்தின் 18 நிறுவனங்கள் இயங்குவதாகவும், இதில் 50000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் அறிவித்தார்.

உத்தரப் பிரதேசம்
டாடா குழுமம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஸ்டீல், ஆட்டோமோடீவ், ரீடைல், பைனான்சியல், பவர், ஐடி சேவை துறையில் இயங்கி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல முனைகளில் முதலீட்டையும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

5 டிரில்லியன் டாலர் ஜிடிபி
மேலும் இந்தியா 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி அளவீட்டை எட்டும் போது உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறும், இதேபோல் இந்தியா 10 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடையும் போது உத்தரப் பிரதேசம் 2 டிரில்லியன் டாலர் வரையில் உயரும்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெலிகாம் நெட்வொர்க்-ஐ விரிவுபடுத்துவதற்கும், 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதற்கும் அடுத்த 4 வருடத்தில் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த 75000 கோடி ரூபாய் முதலீடு திட்டத்தில் டெலிகாம் துறை மட்டும் அல்லாமல் ரீடைல் மற்றும் நியூ எனர்ஜி ஆகிய பிற பிரிவு வணிகமும் அடங்கும். இதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வர்த்தகமும் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

5ஜி சேவை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ டிசம்பர் 2023க்குள் மாநிலம் முழுவதும் 5ஜி சேவைகளை வெளியிடும் என்று உறுதி அளித்தார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Reliance, Aditya Birla, Tata Investing more than 1 lakh crore in UP

கருத்துகள் இல்லை: