ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

 zeenews.india.com - RK Spark :  இரைப்பை சுவர்களில் இருந்து உருவாகும் புற்றுநோய் வயிற்று புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.  
செரிமான மண்டலத்தின் முக்கியமான பகுதியாக வயிறு உள்ளது,
இதில் புற்றுநோய் ஏற்படுவது பெரியளவில் நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.  
உலகளவில் அதிகளவில் இருக்கும் புற்றுநோய்களில் வயிற்று புற்றுநோயும் ஒன்று,
 இது உலகளவில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
 சமீப காலமாக வயிற்றுப் புற்றுநோய் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது,
இளைய தலைமுறையினருக்கு கூட வயிற்று புற்றுநோய் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


 மற்ற வகை புற்றுநோயை விடவும் வயிற்று புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
 இந்த வகை புற்றுநோய் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.  
பரவலாகக் குறைத்து மதிப்பிடப்படுகிறது, ஆனால் இது கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும், வயிற்று புற்றுநோய் கட்டிகள் இயல்பாகவே வேகமாக வளரும் மற்றும் மிகவும் வீரியம் மிக்கது.

வயிற்று புற்றுநோய்கள் ஹார்மோன்களில் உள்ள வேறுபாட்டின் காரணமாக பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உள்ளது, இது வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது
மற்றும் வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது.  
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது.

 அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான சில அறிகுறிகள் வெளிப்படுவதால் மக்கள் இதனை சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர்.  
சில நேரங்களில் நோயாளிகளுக்கு குறைந்த அளவு ஹீமோகுளோபின், திடீர் எடை இழப்பு அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  ஆனால் இதனை நோயாளிகள் பெரிதாக உற்றுநோக்குவதில்லை.

வயிறு நாம் உண்ணும் உணவை சேமித்து வைத்து செரிமானத்திற்கு உதவுகிறது,
உணவுக்கு இடமளிப்பதற்கு விரிவாக்கக்கூடிய கட்டமைப்பாக இருப்பதால், புற்றுநோய் மிகப் பெரியதாக இருந்தாலும் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு பிறகே வெளிப்படுகிறது.  

மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, அதிகப்படியான உப்பு, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.  
சிலசமயம் சிலருக்கு வயது மற்றும் மரபணு போன்ற இயற்கையான காரணங்களும் புற்றுநோய்க்கு காரணிகளாக அமைகிறது.  
புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: