திங்கள், 10 மே, 2021

அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் முக்கிய ஒழுக்க விதிகள்

 மின்னம்பலம் :மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மே 9) காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை நீடித்தது.
அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும்போதே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இருப்பது வழக்கம். அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள், நிதி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன,
மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் கொரோனா தடுப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு வழங்கினார்.

முள்ளிவாய்க்கால் வீடுகளில் நினைவு கூர தடையில்லை! பொதுவெளியில் கூடுவோர்கள் கைது செய்யபடுவார்கள்

Army Commander Lieutenant General Shavendra Silva appointed as new Chief of  Defence Staff!

jaffnazone.com : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளில் இருந்து நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக
முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள்! தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அயோக்கியர்கள்

May be an image of text that says 'This Covid-19 hospital was set up by chance CARE CENTRE Tamil Nadu overnment Multi Super Hospital nowa Covid hospital STALIN HOSPTINUE TRACING THE CHANGE 2,2007 CMM In The Second Report On Projects That Await New Chief Minister MK Stalin's Attention, We Highlight Hospital That's Doing Well More Care hospital made expand in Experts convertingh Corid George. only etter retain'

LR Jagadheesan : கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களின் கயவாளித்தனத்தை. கழுத்தறுப்பு வேலையை. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்யும் எத்துவாளித்தனத்தை.
அற்புதமாய் வடிவமைத்து அழகாய் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புதியதலைமைச்செயலகத்தை ஒரு அகங்காரி கொடுங்கோலி அப்பட்டமான அரசியல் அசூயையால் சிதைத்து சின்னாபின்னமாக்கினார்.
தன் அரசியல் எதிரி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என்று சபதம் போட்டு சாதித்துக்காட்டினார் அந்த சேலைகட்டிய சர்வாதிகாரி.
அதற்கு ஒத்து ஊதினர் ஊடக அயோக்கியர்கள்.
இதோ அதே அயோக்கியர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் தங்களின் அடுத்துக்கெடுக்கும் அயோக்கியத்தனத்தை. தலைப்பே அயோக்கியத்தனமானது.
தலைமைச்செயலகமாக மட்டுமே திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை சட்டவிரோதமாக மக்களின் பணம் நூறுகோடியை கொட்டி மருத்துவமனையாக மாற்றியதை மறைத்து “by chance” என்கிற வார்த்தைகளால் பூசி மெழுகுவதில் ஆரம்பிக்கும் அயோக்கியத்தனம் செய்தி முழுக்க தொடர்கிறது.

அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா! திமுகவுக்கு மேலும் இரு எம்பிக்கள் கிடைக்கிறது

K.P.Munusamy and Vaithilingam resigns their Rajyasabha MP post

Vishnupriya R  - tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்களாக தேர்வாகியுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவியை கே பி முனுசாமியும் வைத்திலிங்கமும் ராஜினாமா செய்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் ஆகியோருக்கு
இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முனுசாமியும் வைத்திலிங்கமும் விருப்பமனு தாக்கல் செய்து அவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்! 7,000 போதுமானதாக இல்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“7,000 போதுமானதாக இல்லை; 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
kalaignarseithigal.com : மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசியில் வாயிலாக தொடர்புகொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்துக்கு ஒதுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை:சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

maalaimalar : சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.

அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா: அமைச்சரவை கூட்டத்திற்கு வரவில்லை

tamil.indianexpress.com : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக கலந்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தில்  அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக கலந்துக் கொள்ளவில்லை.    ஆனால், சிவசங்கர் கடந்த 5 ஆம் தேதி திமுக சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

கொரோனா தடுப்பு பணி - 22 அமைச்சர்கள் நியமனம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்கள் நியமனம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

Vignesh Selvaraj கலைஞர் செய்திகள் : கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்கள் நியமனம்...
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது, சிகிச்சையளிப்பது, கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:
1. சென்னை மாவட்டம்
மா. சுப்பிரமணியன்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு,
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்​

நரேந்திர மோடி என்ற பிராண்டின் மீது இடியாக விழுந்த கொரோனா .. பி பி சி

மோடி
BBC -அபர்ணா அல்லூரி பிபிசி செய்தியாளர், :   டெல்லி “ஊரடங்கிலிருந்து கோவிட் ஊழிக்காலத்துக்கு இந்தியாவை தலைமையேற்று அழைத்துச் சென்றிருக்கிறார் நரேந்திர மோதி” – என்று விமர்சித்தது இங்கிலாந்தைச் சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி. இந்த செய்தியை மறுபிரசுரம் செய்த ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று, கடுமையாக எழுதப்பட்ட ஒரு சுருக்கத்தையும் சேர்த்துள்ளது : “மூர்க்கத்தனம், அதீத தேசியவாதம், திறமையற்ற அதிகாரத்துவம் எல்லாம் சேர்ந்து இமாலயப் பிரச்னையை உருவாக்கியிருக்கின்றன. இந்தியர்கள் மூச்சுத்திணறும்போது, கூட்டங்களைப் பெரிதும் விரும்புகிற இந்தியப் பிரதமர் குளிர்காய்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்”.

China rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

 /tamil.news18.com : கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்த சீன ராக்கெட்டின் ராட்சத பாகங்கள், இந்திய பெருங்கடல் அருகே விழுந்தன
விண்வெளி குறித்த ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம் பெறவில்லை.
எனவே, தங்களுக்கான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
டியூன்ஹி என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாடு அமைத்து வருகிறது.   
பூமிக்கு மேலே 370 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தாங்கள் கட்டும் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் கடந்த ஏப்ரல்  மாத இறுதியில் சீனா விண்ணில் ஏவியது. இதனை எடை 21 டன் என கூறப்படுகிறது.

இந்தியாவின் கோவிட் எமர்ஜென்சி ! லண்டனிலிருந்து வெளிவரும் இதழான லான்செட்டின் தலையங்கம்

Covid: The Lancet journal calls on Modi govt to own up mistakes
The Lancet, in a commentary on Friday on India’s Covid-19 emergency, cited how the government had allowed religious festivals to proceed, along with huge political rallies, conspicuous for their lack of Covid-19 mitigation measures, despite warnings about the risks of super-spreader events

Vijayasankar Ramachandran : இந்தியாவின் கோவிட் எமர்ஜென்சி
(லண்டனிலிருந்து வெளிவரும் உலகப் புகழ்பெற்ற மருத்துவ வார இதழான லான்செட்டின் தலையங்கம். தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்)
இந்தியாவில் தற்போது நிகழும் துன்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வது கடினம்.
மே 4 அன்று வரை, நாளொன்றுக்கு சராசரியாக 3,78,000 பேர் என்கிற விகிதத்தில் 20.2 மில்லியன் (இரண்டு கோடியே இருபது லட்சம்) கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்;
220000 பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர்.
இந்தக் கணக்குகள் அனைத்துமே குறை மதிப்பீடுகள்தான் என்று வல்லுனர்கள் நினைக்கின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
முன்களப் பணியாளர்கள் முற்றிலும் களைப்படைந்து விட்டனர். தொற்றுக்கு ஆளாகின்றனர்.

கமலஹாசனும் சீமானும் பாஜகவுக்கு வாங்கி கொடுத்த எம் எல் ஏக்கள் ... புள்ளிவிபரம்

கபிலன் காமராஜ்
  : RSS கைக்கூலிகளான சீமானின் நாம் தமிழர் கட்சியும் கமலின் மக்கள் நீதி மய்யமும் பாஜகவின் B-டீம் என ஏன் சொல்கிறோம் ?
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 இடங்களில் வென்றது.
மொடக்குறிச்சி
பாஜக - 78125 ஓட்டுகள்
திமுக - 77844 ஓட்டுகள்
 வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 281 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 12944 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த  மநீம வாங்கியது 4574 ஓட்டுகள்
நாகர்கோவில்
பாஜக - 88804 ஓட்டுகள்
திமுக - 77135 ஓட்டுகள்
வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 11669 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த நாதக வாங்கியது 10753 ஓட்டுகள்
ஓட்டை பிரித்த  மநீம வாங்கியது 4037 ஓட்டுகள்

ஞாயிறு, 9 மே, 2021

ராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்: நடந்தது என்ன?

ராமதாஸுக்கு போன் போட்ட  முதல்வர்  ஸ்டாலின்: நடந்தது என்ன?
minnambalam.com :தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று மே 8 ஆம் தேதி அறிவித்தார். இந்த ஊரடங்கில் பலரும் எதிர்பார்க்காத வகையில் இரு வாரங்களுக்கும் டாஸ்மாக் மதுக் கடைகளும் மூடப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வரவேற்புகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில்,    ”தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த மக்கள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் பாஜகவுக்கு விற்கும் சீமானின் கூட்டம் ! மொடக்குறிச்சி விற்கப்பட்டது

Will DMK attack AIADMK's fort?- Dinamani

கபிலன் காமராஜ் :  விடுதலை போராளி குழுக்களில் ஒன்றான EPRLFயின் தலைவர் பத்மநாபாபை தமிழ்நாட்டில் படுகொலை செய்த விடுதலை புலிகளுக்கு உதவியதாக அன்றைய திமுக அரசில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தடா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். அந்த காலகட்டம் திமுகவிற்கு மிகவும் நெருக்கடியான காலம்.
ஈழப் போராளி குழுக்கலுக்குள்ளான சகோதர சண்டையில் சிறை சென்ற திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் வெறும் 281ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

ஊரடங்கில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு நடந்து கொள்ளக்கூடாது! முதல்வர் ஸ்டாலின் உறுதி

இறைச்சி கடைகள்

Velmurugan P - :tamil.oneindia.com :சென்னை: முழு ஊரடங்கு நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு மக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
ஏனெனில் வாகன சோதனையில் கடுமை கூடாது, வணிகர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிக்கையை வழக்கமானதாக பார்க்க முடியாது,
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காலத்தில் தமிழக காவல்துறையினர் பல இடங்களில் கடுமையாக நடந்து கொண்டனர்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகே காவல்துறையினரிடம் மென்மையான அணுகுமுறை வெளிப்பட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம்! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 சித்த மருத்துவ மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
minnambalam.com :கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்த கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 9) தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய புரட்சி கலைஞர் விஜயகாந்த் ‘வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’!

முதல்வருடன் விஜயகாந்த் பேசிய வார்த்தை!
minnambalam.com : தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று (மே 8) தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அக்கட்சியின் துணைச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து விலகிய தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் திமுக மீதும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தேர்தலில் தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.

சென்னையில் இருந்து 3,800 பஸ்கள் இயக்கம்- மூட்டை முடிச்சுகளுடன் குவிந்த வெளியூர் மக்கள்

சென்னையில் இருந்து 3,800 பஸ்கள் இயக்கம்- மூட்டை முடிச்சுகளுடன் குவிந்த வெளியூர் மக்கள்
malaimalar : சென்னை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி முதல் வருகிற 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய 34 ஆயிரத்து 619 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்கு வரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்யக்கூடியவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தொடர் அதிரடி! வரலாற்றை மாற்றியமைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

 Kathir RS  :   பொறுப்பேற்ற 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டையே மாற்றிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்.
▪அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 4000 கொரோனா நிவாரணத்தொகை
▪ பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.
▪பால் விலை 10% வரை குறைப்பு,
பால் கொள்முதல் விலை 14% வரை அதிகரிப்பு
▪உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை அறிவிப்பு.அதற்கு பொறுப்பு மிக்க அதிகாரி நியமிப்பு
▪தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளிகளுக்கு அரசு காப்பீட்டின்கீழ் சிகிச்சை.(கட்டணமின்றி)
▪பத்திரிகையாளர்கள் மருத்துவர் செவிலியர்களைப் போலவே முன்களப் பணியளர்கள் என அறிவிப்பு.
▪திருநங்கைகளுக்கும் கட்டணமற்ற  பேருந்து பயணம் என அறிவிப்பு.
▪கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் - ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையம் செயலாக்கத்தை துரிதப்படுத்தி முதற்கட்டமாக 300 படுக்கைகள் 10 ஆம் தேதி (நாளைமுதல்) முதல் செயல்படத் தொடங்க ஏற்பாடு.
▪தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒத்துழைப்பை தொலைபேசி மூலம் கோருதல்  மற்றும் கடிதம் மூலம் தெரிவித்தல்.
▪சுகாதாரத்துறை மூலம் கொரோனா சூழலை கட்டுப்படுத்தும் வியூகங்கள் அமைத்து முற்கட்டமாக 15 நாட்கள் பொது முடக்க அறிவிப்பு.
அதற்கு முன் இரண்டு நாட்கள் முழு நேர வேலை நாட்களாக்கி அவகாசம் தந்து மக்களை தயார் செய்ததோடு வெளியூர் செல்லும் பேருந்துகள் தங்கு தடையின்றி இயக்கம்.

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து: இந்திய அரசு ஒப்புதல்

2-deoxy-D-glucose
  BBC :,தற்போதைய இரண்டாம் கொரோனா அலையால் இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு பெரும் அளவில் உள்ளது. இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த மருந்தில் உள்ள 2-DG மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கலைஞர் : தம்பி சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்திலே தான் மிதந்து கொண்டிருந்தார்; விரல்கள் துண்டிக்கப்பட்டிகிடந்தன.! ஜெயா சசியின் குண்டர்களால் அன்று தாக்கப்பட்டர் .. flashback

கருணாநிதி: 97 சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்முரசொலி : திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அவரது உரையின் விவரம்:மூத்த வழக்கறிஞர் தம்பி சண்முக சுந்தரம், சரோஜினி சண்முகசுந்தரம் ஆகியோரின் மகன் மனுராஜ்க்கும், . குமார், மினி ஆகியோரின் மகள், ருக்மிணிக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்துவதில் - இந்த விழாவிற்கு தலைமையேற்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன், பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சண்முக சுந்தரத்தைப் பொறுத்தவரையில் அவர் வழக்கறிஞர் மாத்திரமல்ல, இந்தக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கக் கூடியவர்.
இதை நான் சொல்வதற்குக் காரணம், நம்முடைய கழகத்தின் வழக்குகளை யெல்லாம் நேர் நின்று, எதிர் கொண்டு நடத்துகிறார் என்பதற்காக அல்ல, நான் எழுதி வெளி வந்துள்ள “நெஞ்சுக்கு நீதி” என்ற என்னுடைய வரலாற்றில் நான்காவது பாகத்தில்,
சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றி - அவருடைய குடும்பத்தைப் பற்றி - அவருடைய அருமைத் தந்தையாரைப் பற்றி நான் கோடிட்டுக் காட்டியுள்ள செய்திகளை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்!

minnambalm  :தமிழ்நாடு  அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு  ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தலைமை செயலாளர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு  வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே தமிழ்நாடு  அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜயநாராயணன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.   இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதியின் ஆக்சிஜனுக்கு இந்திய ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினருக்கு சவுதியின் கடுமையான பதில்

May be a Twitter screenshot of ‎text that says '‎Great reply from Saudi Hindutva extremists who remove the label of the oxygen tank that Saudi gave India and label the Reliance company belonging to Bharathi Janatha Party. Hide Original Rate translation uisbalangoda الشريكة مجبل é المحامي @MJALS... 2h We don't mind you changing the skin like a snake or colour like a chameleon but let the Oxygen sent by the Arabs reach the poor needy Indian patients gasping for it. Lie, deceive, disinform because this is the hallmark of Hindutva but please don't kill. We want Indians to live.‎'‎

 Chinniah Kasi  : அனுப்பப்பட்ட ஆக்சிஜனுக்கு லேபில் மாற்றிய  மத தீவரவாத அரசியலுக்கு சவுதி குடுத்த பதில்..
"நீங்கள் பாம்பைப் போல தோலை மாற்றுவதையோ அல்லது ஓணானை போல நிறத்தை மாற்றுவதையோ நாங்கள் பொருட்படுத்தவில்லை.
ஆனால் அரேபியர்கள் அனுப்பிய ஆக்ஸிஜன் ஏழை இந்திய நோயாளிகளை அடையட்டும்.
பொய்கள், ஏமாற்றுகள் மற்றும் தவறான தகவல்கள் இந்து மதவாத்தின் அறிகுறியாக என்று ஆனாலும் தயவுசெய்து மக்களைக் கொல்ல வேண்டாம்.
நமக்குத் தேவையானது இந்தியர்களை உயிருடன் வாழ வைப்பதாகும்."

பெங்களூரு மருத்துவ மனையில் முஸ்லீம் மருத்துவர்கள் மீது பாஜக எம்பியும் எம் எல் ஏயும் அடாவடி

 Sivakumar Shivas  :   பெங்களூருவில் உள்ள மருத்துவ மனையில் 212 மருத்துவர்களும் செவிலியர்களும் பணிபுரிகின்றனர்.
இதில் 17 பேர் முஸ்லிம்கள். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அதிக மருத்துவர்கள் தேவைப்படுகிறது. இதனை அனுசரித்து ஆட்கள் தேர்வு
ஆனால் அங்கு வந்த பெங்களூரு பிஜேபி எம்பி தேஜஸ்வி சூர்யா வரிசையாக முஸ்லிம் பெயர்களை படித்து காண்பித்து 'இதெல்லாம் என்ன?
இவர்களுக்கு பணி நியமனம் செய்தது யார்? அந்த ஏஜென்ஸியை கூப்பிடுங்கள்.
இது மதரஸாவா அல்லது கார்பரேஷனா?' என்று கேட்கிறார்.
200 பேரில் 17 பேர் முஸ்லிம்கள் பணிபுரிவதை கூட சங்கிகளால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு மருத்துவ துறையிலும் மதத்தை புகுத்தி மக்களை பிளவுபடுத்தப் பார்க்கும் சங்கிகள் உண்மையில் தேசப் பற்றாளர்களா?
நோயாளிகளை காக்க அரசும் தவறி விட்டது. இவ்வாறு ஆர்வமுடன் பணிபுரிய வரும் மருத்துவர்களை மதத்தை காட்டி தூரமாக்கினால் இறந்து போகும் உயிர்களுக்கு யார் பொறுப்பு?
கொரோனாவால் இறக்கும் உயிர்களை சொந்தங்களே கைவிடும்போது முஸ்லிம்கள் தானே அனைத்தையும் செய்கின்றனர்?
பல அரபு நாடுகள் ஆக்சிஜன் உதவி புரிகிறதே? அதனை எல்லாம் தேஜஸ்வி வேண்டாம் என்று ஒதுக்கத் தயாரா?