வியாழன், 12 ஜூலை, 2018

முட்டை ஊழல் 6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!

 6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!மின்னம்பலம்: சத்துணவு முட்டை டெண்டர் வழங்குவதில் இழபறி ஏற்பட்டதையடுத்து, எந்த நிறுவனத்துக்கும் டெண்டர் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு சப்ளை செய்து வந்த கிறிஸ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனத்தில் கடந்த ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.1,350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள உரிமையாளர் டி.எஸ்.குமாரசாமியின் வீடு, சென்னை, நாமக்கல், கோவை, பெங்களூர்உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. ஐந்து நாட்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களும் சிக்கின. 100 போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவ கோரிக்கை நிறைவேறியது சிவா எம்.பி.

பாராளுமன்றத்தில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவ கோரிக்கை நிறைவேறியது சிவா எம்.பி.தினத்தந்தி : திருச்சி சிவா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
திருச்சி சிவா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதன் விளைவாக 17 மாநில மொழிகளில் பட்டியலில் மேலும் 5 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 22 மொழிகளாக அதிகரித்துள்ளது. இதில் காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் பேசினால் அவை மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் மற்றவர்கள் கேட்கமுடியும். மேலும் 5 மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது வரவேற்கத்தக்கது. திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கான பணியில் ராணுவ நிலத்தை மாநில அரசு கேட்டு பெற வேண்டும். தமிழகத்தில் லே£க்ஆயுக்தா சட்டத்தை வலுவானதாக அமைக்க வேண்டும் என்றார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம்


tamil.news18.com : ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-இன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க தற்போதுள்ள சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் தேதி, இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, 2013-ஆம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரினச் சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

8 வழிச்சாலை ...என் நிலம்- என் உரிமை’: சேலம் நோக்கி மார்க்சிஸ்ட் நடைபயணம்!

மார்க்சிஸ்ட் நடைபயணம்-
tamil.thehindu.com :  சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘என் நிலம் என் உரிமை’ என்ற நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
“நரேந்திர மோடி தலைமையிலான கடந்த நான்காண்டு கால ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரலை திணிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன உரிமைகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் 11 முறை பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு பெரும் விலை உயர்வை சந்திக்க வேண்டியுள்ளது.

பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்க அமித் ஷா கும்பல் முயற்சி?

Kalai Mathi =- ONEINDIA TAMIL : தமிழகத்தில் ஊழல் அதிகம் என்று அமித்ஷா
பேசியதின் பின்னணி என்ன?- வீடியோ சென்னை: தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.
அதிமுக அரசை பாஜகவின் பினாமி அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக அரசும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் செவி சாய்த்து வருகிறது. எந்த விதத்திலும் பாஜகவை தமிழக அரசு கடுமையாக விமர்சிப்பதும் இல்லை, எதிர்ப்பதுமில்லை. இதுகுறித்து கேட்டால் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் திட்டங்கள் கிடைக்கும் என கூறுகின்றனர் தமிழக அமைச்சர்கள்.

தனியார் நிலத்தைப் பாதுகாக்க செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!’’ – தணிக்கை அறிக்கை அதிர்ச்சி

``தனியார் நிலத்தைப் பாதுகாக்க செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சிvikatan - ஜெ.அன்பரசன்</;எஸ்.ஏ.எம். பரக்கத் அலி<: 2015-="" b="">:   2014 -ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு மனித தவறே காரணம்’ எனக் கண்டறிந்திருக்கிறது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை. அந்த அறிக்கையில் சொன்ன விஷயங்கள் என்ன?
2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கடும் மழையால் ஏரிகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டு, சென்னை மாநகரமே பலநாள்களுக்கு முடங்கிப்போனது.
இந்த வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம், அரசு செய்திருக்க வேண்டிய ஏற்பாடுகளில் ஏற்பட்ட தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தப் பேரிடர் தவிர்த்திருக்கக்கூடியதா என்பதை மதிப்பீடு செய்ய முயன்றது இந்திய தணிக்கைத்துறை. நீர்நிலைகளின் பாதுகாப்பு, மழைநீரின் ஓட்டத்தைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகள், வெள்ள மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தது.

புதன், 11 ஜூலை, 2018

ஆசிரியர் வீரமணி குதிரை வண்டியில் அமர்ந்து பேரணியை பார்த்தது தவறா?


பி என் எம் பெரியசாமி : தமிழர் தலைவர் அலங்கார வாகனத்தில் வந்தது ஏன்?  என்று விமர்சனம் வைப்பவர்களுக்கு சொல்ல ஆயிரம் விளக்கங்கள் இருக்கிறது. அவைகளை இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை ..!!
நான் கேட்பது, குடந்தையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் சமூகநல கருத்துகளைப் பற்றி சமூகநீதி பற்றி நீட் தேர்வு முறைகேடு பற்றி கல்வி வேலை வாய்ப்பில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்படுவது பற்றி ஆயிரம் செய்திகள் பேசியிருக்கிறோம் ..!!
தமிழகத்தின் துடிப்புமிக்க இளைஞர்கள் மாணவர்கள் எல்லோரும் மய்யத்தின் பின்னாலும் ஆன்மீக அரசியல் பின்னாலும் தான் இருக்கிறார்கள் என்ற பிம்பத்தை உடைத்து !! திராவிட இயக்க அரசியலுக்கு மாற்று நாதக சீமான் பின்னால் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையும் முறியடிக்கும் விதத்தில் எங்கள் கருஞ்சட்டைப் படை பெரியார் மண்ணில் அணி அணியாக "படை பெருத்ததால் பார் சிறுத்ததா ? பார் சிறுத்ததால் படை பெறுத்ததா " என்று அளவிற்கு பெரியாரின் பேரப் பிள்ளைகள் தமிழர்தலைவர் ஆசிரியர் வீரமணியாரின் வீரப்பிள்ளைகள் நிகழ்த்திக் காட்டியவைகளைப் பற்றி பேச முடியாதவர்கள் முயலாதவர்கள் பாவம் புறம் பேசித் திரிகிறார்கள் ..!! வயிற்றெரிச்சல்காரர்கள் !!

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை வழங்க அரசு தீர்மானம் .

மாலைமலர் : இலங்கையில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்
செயல்களுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, இது தொடர்பாக இதுபற்றி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில், “தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் வெளியே போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்கின்றனர்” என்றார்.

சமூக நீதிக்கு எதிராகவும், இந்துத்வ வெறிக்கு ஆதரவாகவும்... பார்ப்பனர்கள் எதை கையில் எடுத்தாலும் ..

Ganesh Babu :பார்ப்பனர்கள் எதைக் கையிலெடுத்தாலும் அது சமூக நீதிக்கு
எதிராகவும், இந்துத்வ மதவெறிக்கு ஆதரவாகவும்தான் திசை திரும்பும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கிரிக்கெட் விளையாட்டு. இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பை ஊட்டி வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது வர்ணனையாளர்கள் தொடங்கி அணியின் தேர்வாளர்கள், வீரர்கள்வரை பார்ப்பனர்களால் ஏகபோகமாக ஆளப்படும் கிரிக்கெட்.
திறமையின் அடிப்படையிலும், தரவரிசையின்படியும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகள்தான் இந்திய அணிக்கு நேரடியான சவால் என்றாலும், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானும், வங்கதேசமும் மட்டும் தனிப்பட்டமுறையில் விரோதிகளாக முன்னிருத்தப்படுவதும், அந்நாட்டு ரசிகர்களுடனான கடும் மோதல் உருவாக்கப்படுவதும் எதேத்சையானதாகவோ, ரசனை சார்ந்ததாகவோ மட்டும் தெரியவில்லை.
முகநூல் கிரிக்கெட் பக்கங்களின் பின்னூட்டங்களில் அந்நாட்டு ரசிகர்களைத் வக்கிரமாகத் தாக்குவதையும், பதிலுக்கு அவர்களும் தரக்குறைவாக தாக்குவதையும் நாம் அடிக்கடி பார்க்கலாம்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!minnambalam.com : தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் நீரை திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு நேற்று(ஜூலை 10) முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். இதனால், தற்போது அதிகபட்சமாக விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பை கருதி, நீரை திறந்துவிடுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போலீஸ்காரரை கத்தியால் குத்தி கொன்ற புத்த பிட்சு .. பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்போன

கைது செய்ய வந்த போலீஸ்காரரை கத்தியால் குத்தி கொன்ற புத்த பிட்சுமாலைமலர் : இலங்கையில் பாலியல் பலாத்காரம் குற்றத்திற்காக தன்னை கைது செய்ய வந்த போலீஸ்காரரை புத்த பிட்சு கத்தியால் குத்தி கொன்ற தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு : இலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதிக்குட்பட்ட புத்த மத கோவிலில் கொன்வலனே தம்மசாரா தேரா எனும் புத்த பிட்சு வசித்து வந்துள்ளார்.  பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த புத்த பிட்சுவை கைது செய்ய அவர் வசித்து வந்த கோவிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் நிராயுதபாணியாக சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை குத்தியதில் வலியில் போலீஸ் அதிகாரி அலரியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாலைமலர் : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர். மதுரை : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடுவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன? துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது? துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!விகடன் : இரா.மோகன்-இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை 7.20 மணிக்கு கிருஷ்ணா (39) அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 1979-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன், தனது  கட்சி அலுவலகம் அருகே நின்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிருஷ்ணா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்துவரும் கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன், நவோதய மக்கள் முன்னணியின் தலைவராக உள்ளார் என்பதுடன், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக  வெற்றி பெற்றிருந்தார்.

நெல்லையில் 24 பஸ்கள் உடைப்பு... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி கைது

tamilmurasu.org  நெல்லை: ஜான்பாண்டியன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நெல்லையில் நேற்றிரவு 24 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரில் தமமுக நிறுவனர் ஜான்பாண்டியன் வீடு மீது நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 3 பேர், பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞர் அணி மாநில செயலாளர் கண்ணபிரான் (39), பள்ளமடையைச் சேர்ந்த  பாலமுருகன் என்ற பான்ஸ் பாலன் ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர்.
பாளை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் இருவரும் ஜேஎம் 1 வது மாஜிஸ்திரேட் ராம்தாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீட் வழக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்

திருமாவை அடுத்து ராகுலை சந்தித்த பா ரஞ்சித். .. மாற்றுக்கூட்டணியை ?

LR Jagadheesan : காங்கிரஸில் சேருகிறாரா பா ரஞ்சித்?
ரஜினியின் தூதராக ராகுலை சந்தித்தாரா பா ரஞ்சித்?
ராகுல் ரஜினி ரகசிய திட்டம் என்ன?
திருமாவை அடுத்து ராகுலை சந்தித்த பா ரஞ்சித். தலித்துகளை தன் பக்கம் ஈர்க்கிறாரா ராகுல் காந்தி?
கழகங்கள் இல்லாத மாற்றுக்கூட்டணியை அமைக்கிறாரா காலா இயக்குநர்?
இப்படின்னு ஏகப்பட்ட தலைப்புல விவாதிக்கலாம். பார்ப்போம் எந்த TV முந்துதுன்னு.
கற்பனைக்குதிரையை தட்டிவிடறதுக்கு காசா பணமா. சும்மா கொளுத்தி போடுங்க. யாரு கேக்கப்போறா? எத்தனையோ கொளுத்தி போட்டிருக்கோம். யாராவது கேட்டாங்களா என்ன? நாம குத்துமதிப்பா கொளுத்தி போடறதுல குருட்டாம்போக்குல ஒண்ணு ரெண்டு உண்மையானால் “அன்றே சொன்னது **********.” அப்படின்னோ “செய்திகளை முந்தித்தருவது #######” அப்படின்னோ நமக்கு நாமே ஷொட்டு குடுத்துக்க வசதியா இருக்கும். ஆரம்பிங்க.

ஆப்பசைத்த குரங்கு – சிபிஎஸ்இ

Krishnavel T S  :  தமிழக மாணவர்களை குறிவைத்து தாக்க மூன்றாண்டுகளுக்கு முன்பு NEET தேர்வை கொண்டு வந்தது சிபிஎஸ்இ.
சென்ற ஆண்டு நம் மாணவர்கள் பலர் படிக்கும் வைப்பை இழந்தனர், இந்த ஆண்டும் அதே கொடுமை தொடர, மாணவர்களின் காவலனாக வந்தது CPM கட்சி, அவர்கள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கின் பலன் நேற்றைய தீர்ப்பு.
NEET தேர்வில் சுமார் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது, உதாரணமாக “சீட்டா” என்ற ஆங்கில வார்த்தையை “சிறுத்தை” என்பதற்கு பதிலாக “சீதா” என்று மொழி பெயர்த்துள்ளார்கள்
உயர்நீதிமன்றம் தன தீர்ப்பில் இந்த 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் அதாவது 49 X 4 = 196 மதிப்பெண்கள், NEET தேர்வை தமிழில் எழுதிய 24,720 மாணவர்களுக்கும் கொடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சேர்க்கை அனைத்தையும் தள்ளுபடி செய்து விட்டு, புதிய தகுதி பட்டியல் தயாரித்து மீண்டும் சேர்க்கை நடத்தவேண்டும் என்று கூறிவிட்டது.
இந்த தீர்ப்பால் என்ன நடக்கும் என்று பார்ப்போம், இந்த வருடம் NEET CUT OFF 720-க்கு 119
மதிப்பெண்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த CUT OFF கணக்கு சிபிஎஸ்இ கணக்கிடும் முறை வித்தியாசமானது, அதனை 50th பெர்செண்டைல் என்று சொல்லுவார்கள்.

லதா ரஜினி காந்த் கடன் மோசடி வழக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

விசாரணை,ரஜினி மனைவி,லதா ரஜினிகாந்த்,சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்றம்,உத்தரவுதினமலர் : புதுடில்லி : ரஜினிகாந்த் நடித்த, கோச்சடையான் படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை திருப்பி தராமல் மோசடி செய்த வழக்கில், விசாரணையை சந்திக்கும்படி, லதா ரஜினிகாந்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2014ல், 'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில், கோச்சடையான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இதற்கு, 'ஆட் - பீரோ' விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய, 6.2 கோடி ரூபாய் கடனுக்கு, ரஜினியின் மனைவி லதா பொறுப்பேற்றிருந்தார். போலீசில் புகார் :கடன் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக, லதாவுக்கு எதிராக, கடன் வழங்கிய நிறுவனம், கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ட்ரினிடாடின் இலக்கியக் குரல்.. சாம் செல்வனின் கரீபியக் கறுப்பு இலக்கியப் பணி மகத்தானது.

சிறப்புப் பத்தி: ட்ரினிடாடின் இலக்கியக் குரல்மின்னம்பலம் :முரளி சண்முகவேலன்- லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர். காலனியத்துக்கு ஆதரவாகச் சமகாலத்தில் குரல் எழுப்பிவருகிற பிரிட்டனின் அறிவுஜீவுகளைப் பற்றிப் போன வாரத்தில் பார்த்தோம். தாராள அல்லது முற்போக்குவாதிகளோ பிரிட்டனின் பன்மைத்தனத்திற்குக் காலனிய வரலாறும் ஒரு காரணம் என நிறுவுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற காலனிய சாம்ராஜ்ஜியங்களில் மற்ற இனத்தினர் குடியேறியதில் காலனியத்தின் பங்கு முக்கியமானது. அதே சமயத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களோ மிகுந்த இடர்ப்பாடுடனே இருந்துவந்துள்ளன என்பதையும் மறுக்க இயலாது.
ட்ரினிடாட், டொபெகோ போன்ற தீவுகளிலிருந்து வந்த வின்ட்ரஷின் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, பிரிட்டிஷ் பதி அல்லது அப்போது வந்த செய்தித்தாள்களில் வந்த விவரணைகள் காலனியத்தை ஏதோ ஒருவகையில் ‘அங்கீகரிப்பதாகவே’ இருக்கின்றன. ஆனால், 1950களில் ட்ரினிடாடிலிருந்து வந்த குடியேறிகளே தங்களது வாழ்வனுபவத்தை எழுத ஆரம்பிக்கின்றனர். இவர்களின் பதிவு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

தமிழக லோக் ஆயுக்தா சட்டம் ஒரு அட்டை கத்தி? கடும் விமர்சனங்கள் ....

விகடன் : கா . புவனேஸ்வரி : : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா, ஜூலை 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டுவந்துள்ள 17-வது மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம்படைத்த தனி அமைப்பாக 'லோக் ஆயுக்தா' செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா, வெறும் கண்துடைப்புக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த மசோதா மிகவும் பலவீனமானது என்று கூறி, பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்துள்ள நிலையில, 'மசோதா தாக்கல் செய்யப்படும் முன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும்' என்று வலியுறுத்தி, அறப்போர் இயக்கமும், சட்டப் பஞ்சாயத்து இயக்கமும் இணைந்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில், லோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ள பலம், பலவீனங்கள் என்னென்ன என்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் உயிரழப்பு


பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் பலிதினத்தந்தி : பாகிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் பலியாகினர். பெஷாவர், பாகிஸ்தானில் வருகிற 25ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

தாய்லாந்து குகையில் இருந்து அத்தனை சிறுவர்களும் மீட்பு .. பிந்திய செய்தி!

Thailand cave rescue: all 12 boys and coach successfully rescued –
BBC : தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணிகள் குறித்த தகவலை இந்த நேரலை பக்கம் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம்.
4:10 PM: பதினோராவது நபர் மீட்கப்பட்டதாக தகவல்
பதினோராவது சிறுவன் குகையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. > ஒன்பதாவது சிறுவன் குகையிலிருந்து மீட்கப்பட்ட தகவலை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள எஞ்சிய ஐந்து பேரை மீட்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, குகையில் சிக்கி இருக்கும் எஞ்சியுள்ள சிறுவர்களும், பயிற்சியாளரும் இன்றே மீட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீட்பு பணிகளின் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள்கிழமையும் மீட்கப்பட்டனர்.

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது!மின்னம்பலம் : சடங்கு என்ற பெயரில் பெண்ணின் பிறப்புறுப்பைத் தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 9) தெரிவித்துள்ளது.
போரா என்ற இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்த சமூகத்தில் பெண் உறுப்பைச் சிதைக்கும் சடங்கு வழக்கத்தில் உள்ளது. மதச் சடங்கு என்ற பெயரில் சிறுமியாக உள்ளபோதே பெண் உறுப்பைச் சிதைக்கும் வழக்கம் சில சமூகங்களில் நடைமுறையில் உள்ளது. இது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகும். இந்த நடைமுறையை வழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுனிதா திகார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

இல்லாத அம்பானியின் இன்ஸ்டிடியூட்டுக்கு 10000 கோடி ரூபாய் நிதி உதவியும் உலகத்தரம் என்ற அங்கீகாரமும் வழங்கிய மோடி அரசு

tamilthehindu :தொடங்கப்படாமல் ‘பேப்பர்’ அளவில் மட்டுமே உள்ள ஜியோ
இன்ஸ்டிடியூட்டுக்கு மத்திய அரசு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் வழங்கி, பல கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்ததும் நாட்டின் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் கூறுகையில் ‘‘பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, பிஐடிஎஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் மத்திய அரசால் நடத்தப்படுபவை. எஞ்சிய 3 நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை’’ என தெரிவித்து இருந்தார்.

நீட் வினாத்தாள் குளறுபடி ,, 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

tamilthehindu :தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.