வெள்ளி, 20 ஜனவரி, 2017

வட இந்திய ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான்...இம்முறை வசமாக மாட்டிக் கொண்டது! ஜல்லிகட்டு காளையின் குறி தப்பாது !

உச்சநீதிமன்றதீர்ப்பை
  • காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
  • சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
  • மாணவச் சமூகமே, பிடிஇறுகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே

    டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே ! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு ! டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் ! தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. 
    சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
    7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.

    ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு... மதிமாறன்

    சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது?
    அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது?
    கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். மாட்டுக்கறி சாப்பிடறவனாலதான் இன்னும் நல்லா மாடு புடிக்க முடியும்.
    பயம். நம்ம மாட்டை மாட்டுக்கறி சாப்பிடறவன் புடிச்சிறபோறான்னு.
    ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியவர்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள். ஆனால், பல மூட பிரமுகர்கள் கம்பு சுத்துறது மாட்டுக்கறி சாப்பிடறவன்கிட்ட. இந்த அநியாயத்தை மாடே ஒத்துக்காது.
    ‘ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு. ஏகாதிபத்திய – பார்ப்பனிய கூட்டான Peta வுக்கும் குறிப்பாக மோடி க்கு எதிரான முழக்கங்களோடு தமிழ்நாடு தழுவிய பெரிய முதல் போராட்டம் இது; அதுவும் மாணவர் நடத்துவது.

    ஜல்லிகட்டு அவசர சட்டம் ..ஒரு கண்துடைப்பு ஏமாற்று நாடகம்?. மீண்டும் ஒரு தற்காலிகம் திட்டம்?

    ஓ பி எஸின் இந்த அவசர சட்ட நாடகத்தின் ஆயுள் ஒரு வாரத்துக்கு மட்டுமே.
    அதற்குள் ஜல்லிக்கட்டு ஒப்புக்கு நடத்திவிட்டு... மாணவர் போராட்டங்களை கலைந்துபோக விடலாம்
    போராட்டக்காரர்கள் மோடிக்கும் பன்னீருக்கும் நன்றி நன்றி நன்றி என்று புகழ்மாலை சூட்டலாம்.
    அதன் பிறகு வழக்கம்போல உச்சநீதிமன்ற தீர்ப்பும் பீட்டாவின் தர்பாரும் தொடரும்....
    மறுபடியும் வரும் பொங்கலுக்கு இதே நாடகம் மீண்டும் அரங்கேறும்.
    அப்போது இந்த மாணவர் படை ஒன்று திரள்வது சந்தேகமே..

    இறுதிவரை தமிழின எதிரி மோடி அரசு காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீஎக்கப்போவதுமில்லை..
    பீட்டாவை தடை செய்யப் போவதுமில்லை.

    அசதுத்தீன் ஒவைசி: ஜல்லிகட்டு போராட்டம் இந்துத்வா சக்திகளுக்கு மிகப்பெரிய பாடம்!


    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று, அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, ‘ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது இந்துத்துவா சக்திகளுக்கு பாடமாக அமைந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை இந்த தேசத்தில் அமல்படுத்த முடியாது. இந்த தேசம் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் தேசமாக மாற்ற முடியாது. நாம் பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்டாடும் தேசமாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
    மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

    காட்சிப்பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு அவசர சட்டம்?

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்று காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி அவசர சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி இனி வரும் காலங்களில் தடையின்றி நடைபெற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். லைவ்டே

    ஜல்லிகட்டு திமுகவை வசைபாடுவது அறியாமையின் வெளிப்பாடு . கிருபா முனிசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்!

    ஜல்லிக்கட்டு போராட்ட குரல்களில் ஒன்றாக தி.மு.க.வையும், ஸ்டாலினையும் வசைபாடுவதை கேட்க நேர்கிறது.
    போராட்ட நோக்கத்தின் பின்னணியும், அரசியலும் தெரிந்துக் கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடே இது!
    தமிழக அரசு ஒருபோதும் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இருந்ததே கிடையாது. அதுவும் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராக "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை இயற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சவால் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழ்நாடு அரசே ஜல்லிக்கட்டை எடுத்து நடத்தியது.
    அப்படியாக தி.மு.க. அரசு கொண்டுவந்த "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009" சட்டத்தை அகற்ற கோரியே 'பீட்டா' அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
    உண்மையிலேயே அவர்கள் குற்றம்சாட்ட வேண்டுமானால், தி.மு.க.விற்கு பிறகு ஆட்சிக்கு வந்து ஜல்லிக்கட்டை நடத்தாத ஜெயலலிதாவின் ஆ.தி.மு.க. ஆட்சியையே குறைக்கூற வேண்டும்!

    மாணவர் போராட்டமும் -- பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளும்

    சசிகலா தேறாது...பன்னீர் போண்டி ஆகாது...தீபா களை கட்டாது
    .ம. ந .கூ ....வைக்கோ ...சீமான் இனியும் உதவாது
    என்ற முடிவுக்கு வந்துவிட்டது போலும்...பார்ப்பன சமூகம். அதனால்தான்....திமுக என்னும் திராவிட கட்சிக்கு எதிராக... எம்ஜிஆரைப்போல தங்கள் சொற்படி தலையாட்டும் ... ஒரு பொம்மை தலைமையை ... மாணவர்கள் போராட்டக்களத்தில் இருந்து தேடிப்பிடிக்க துவங்கிவிட்டார்கள்.
    பார்ப்பன ஊடகங்கள் இப்போதே...மாணவர்கள் இளைஞர்கள் என்று போர்வையில் தங்கள் ஆளை திணித்து முன்னிறுத்தத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
    தங்கள் சொற்படி ஆடும் ஒரு சப்பாணியை முதல்வராக அமர்த்திவிட்டு ......... ஆட்சி அதிகாரத்தை எப்போதுமே தங்கள் கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே ... தமிழக பார்ப்பன ஆதிக்க அரசியல் சித்தாந்தம்
    ஹிந்து...விகடன் மணி நாளேடுகள் செய்திகளை உற்று நோக்கினால் அவர்கள் திட்டம் புலப்பட்டுவிடும்.
    மாணவர்கள் வழக்கம்போல ஏமாந்துவிடக் கூடாது  முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

    ஸ்டாலின் கனிமொழி கைது ... ரயில் மறியல் போராட்டதில் திமுக ..

    சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயி்ல மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தி.முக..,வினர் கைது செய்யப்பட்டனர். திமுக போராட்டம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று கடையடைப்பு போராட்டம், தனியார் பள்ளிகள் விடுமுறை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். உறுதுணை: இதன்படி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி கைது செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார். தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமால்ர்

    போலீஸ்காரர்களை தட்டி எழுப்பிய ஜல்லிகட்டு : வேலையே போனாலும் உங்களோடு நானும் வருகிறேன்

    மத்திய அரசுக்கு எதிரான  ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்தவர்களும் தமிழால் இணைந்தனர். இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துத் துறை எஸ்.ஐ. சேகரன் என்பவர் சீருடையுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். ” உங்கள் போராட்டத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை. நானும் உங்களோடு போராடுகிறேன்” என்றார். ஆனால் போராட்டக்காரர்கள், ” ஐயா நீங்கள் இப்படி சொன்னதே எங்களுக்கு போதும். உங்கள் வீட்டில் உங்களது மகன்கள்  இருந்தால் அனுப்பி வையுங்கள், உணர்வுள்ள ஒரு தமிழர் காவல்துறை அதிகாரியாக இருப்பது தான் எங்களுக்குத் தேவை” என அனுப்பி வைத்தனர்.

    1965 இல் இந்தி பேயை விரட்டிய வீரம் மீண்டும் வந்தது பாரீர் வீறு கொண்டெழுவதை பாரீர்


    மின்னம்பலம்: தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை அண்ணாநகரில் இருந்து, கோயம்புத்தூரில் இருந்து ஜல்லிக்கட்டு நடக்கிற அல்லது நடக்காத பகுதிகள் என்று இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாப் பகுதி இளைஞர்களும், தமிழ் கலாசாரத்தின், பாரம்பரியத்தின் அடையாளமாகிய ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற குரல் எழுப்பி எழுந்திருக்கிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாத இடத்தில் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரவென்றும், பகலென்றும் பாராமல் திரண்டு, தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. மிக விரைவாக சிற்றூர்களுக்குக்கூட பரவி வருகிறது.

    ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் ... பன்னீர்செல்வம் வாக்குறுதி! போராட்டத்தை கைவிடவேண்டுமாம்! எப்படீ?

    ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி டெல்லியில் தமிழக முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறபிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றார். பன்னீர் செல்வம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதையடுத்து டெல்லியில் தங்கி சட்ட வல்லுநர்களுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்ல  ராவோடு  ராவா  சட்டத்தை கொண்டுவாங்க.. .ராவோடு  ராவாக பதவி பிரமாணம் செய்ய தெரியுதில்ல?

    கீழடி அகழாய்வு முடக்கம் .. தமிழர்கள் மீது மோடி தொடுத்த போர்? தொடர்முழக்கப் போராட்டத்துக்கு அழைப்பு!


    தமிழர்களின் நாகரிக வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக, மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் சுமார் 5300 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டது. கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. ஆப்கன் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் மரபில் இருந்திருக்கிறது என்ற தகவல்கள் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு பரிணாமத்தை வழங்குகின்றன. காவிரிப்பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய தொல்லியல்துறை தமிழகத்தில் கீழடியில் ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆனால் கீழடி அகழாய்வு தற்போது தொடர்ந்து நடைபெறவில்லை.

    தமிழகமெங்கும் ஜல்லிகட்டு முழக்கம்! அரசியல்வாதிகளை மிரள வைத்து ஆட்சியாளர்களை நடுங்க வைத்து ...


    மின்னம்பலம் :ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி கைவிரித்து விட்ட நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் இன்னும் தமிழகம் திரும்பவில்லை. ஆனால் மோடியின் அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ட்விட்டர் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழகத்தில் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.  

    மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை இயங்காது

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:< தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக் குழு சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு எங்கள் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது.

    ஜல்லிகட்டு .. பெங்களூர் அதிர்ந்தது இப்படித்தான் .. களத்தில் இருந்து நேரடி விபரம்!

    .nisaptham.com:  பெங்களூரில் இவ்வளவு கூட்டம் சேருமென்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்தே வாட்ஸப் குழுமங்களில் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று மாலையில் ஒரு செய்தி வந்தது- வியாழன் மாலை 4 மணிக்கு டவுன்ஹாலில் திரண்டு விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்திவேளையில் சில இளைஞர்களிடம் பேசிய போது அனுமதியளிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் இரவில்தான் கடிதம் கைக்கு வரும் என்றார்கள். ஆனால் இரவு வரைக்கும் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அனுமதியில்லை என்ற தகவல் வந்தது.& இந்த உரையாடல் அத்தனையும் வாட்ஸப் குழுமங்களில்தான் நடைபெற்றது.& பெங்களூரில் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துவது லேசுப்பட்ட காரியமில்லை. வேறு மாநிலம். இப்பொழுதுதான் பிரச்சினைகள் உண்டாகின. ஆனாலும் இளைஞர்கள் உறுதியாகத்தான் இருந்தார்கள். ‘யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்’ என்று பிலால் என்கிற இளைஞர் செய்தி அனுப்பியிருந்தார். அவரை நேரில் எல்லாம் பார்த்ததில்லை. குழுமத்தின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். அவரைப் போலவே இன்னமும் பல இளைஞர்கள்.

    மதிமாறன் :பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் எப்போதுமே கள்ளக்கூட்டு. சாட்சி Peta.


    தேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு
    சுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது.
    சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி.
    18 தேதி.
    ‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. சுவாமி பகிரங்க < மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற முழக்கமும் முதன்மையாக இருக்க வேண்டும்.‘Peta தேச விரோத அமைப்பு’ என்று மு.க. ஸ்டாலின் சொன்னதற்கு, ‘விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி’ என்று விலங்காபிமானத்தோடு ‘சைவ உணவு’ பிட்டா அமைப்பாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. நல்லது.
    காலில் சங்கிலியிட்டு, அங்குசத்தால் குத்தி, காதருகே வெடி வெடித்து, கும்பலாக சூழ்ந்து பக்தியினால் இம்சித்து அதிகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது கோயில் யானைகள்.
    ‘யானைகளை கோயிலில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை அல்ல கோரிக்கைக் கூட ஏன் வரவில்லை?

    ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு!

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நேற்று இரவு டெல்லி சென்றார். காலையில் அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக ஓரு மனுவை கொடுத்து கோரிக்கையையும் அவர் கூறினார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை விரைவில் காண்பீர்கள் என கூறினார்.

    எழுத்தாளர் லக்ஷ்மி சரவனகுமார் சாகித்திய அகடெமி பரிசை திருப்பி கொடுக்கிறார் .. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ..

    LakshmiSaravanakumarஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றாததைக் கண்டித்து சாகித்ய அகாதெமி சார்பில் வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை திருப்பிக் கொடுக்கப் போவதாக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அறிவித்துள்ளார்.
    "கானகன்' நாவலுக்காக 2016 -ஆம் ஆண்டில் யுவபுரஸ்கார் விருது லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதையை அவர் திருப்பிக் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் கூறியிருப்பது: தமிழ்ச் சமூகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்னைகளுக்காக சிறு சிறு குழுக்களாக மக்கள் போராடினாலும், அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டன.

    வியாழன், 19 ஜனவரி, 2017

    மெரீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கோபத்தில் ஆதார் ,வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர் !

    சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பல ஆயிரம் மக்கள் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் - இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த ஆதரவை அளித்துள்ளனர் இன்று மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடக்கும் இந்தப் போராட்டத்தில், அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கிழித்தும் வீசி எறிந்தும் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 'தமிழர் உணர்வை, பண்பாட்டை மதிக்காத மத்திய அரசின் அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை', 'இனி நாங்கள் இந்தியர் இல்லை... தமிழர் மட்டுமே..' என்ற கோஷங்களோடு அந்த அட்டைகளை வீசி எறிந்துவிட்டனர். இதுவரை வேறு எந்தப் போராட்டங்களின்போதும் பொதுமக்கள் இப்படி அடையாள அட்டைகளை வீசி எறிந்ததில்லை. இதுபோன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்தைப் பார்ப்பதும் பங்கேற்பதும் இதுவே முதல் முறை என்றனர் வந்திருந்த பலரும்
    //tamil.oneindia.com/

    தமிழகம் ஸ்தம்பித்தது தமிழ்த்தலைகள் எல்லாம் ஓரணியில் ! சாது மிரண்டால் ....

    சிங்கத்தை தூக்கி மிதித்தி புலிப்படையடா நாங்கள்சென்னை: ஊர் உலகமே உன்னை உற்றுப்பார்க்க வேண்டும் என்பார்கள். இன்று ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் மொத்தமாக திருப்பி வருகிறது தமிழ்நாட்டு இளைஞர் படை, பெண்கள் படை. தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றில் இது மாபெரும் தருணமாக, பெருமை மிகு போராட்டமாக பதிவாகியுள்ளது.
    இது எங்க ஏரியா உள்ளே வராதே.. இதுதான் போராட்டக் களத்தில் இருக்கும் புரட்சி நாயகர்கள் அரசியல்வாதிகளுக்கும், பிறருக்கும் தரும் ஒரே பதிலாக இருக்கிறது. எங்க பிரச்சினையை இதுவரை தீர்க்காத நீங்க எங்களுக்கு வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பதே இதற்கு அர்த்தமாகும். இதுவரை தமிழ் கூறும் நல்லுலகம் காணாத வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாட்கள் இவை. தமிழர்களின் பொற்காலமாக இது மாறியிருப்பதுதான் வியப்பின் உச்சமாகும். ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில் திரண்டு நிற்பதை நாடே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்காரர்கள் முட்டாள்கள், எதற்குமே ஒன்று சேர மாட்டார்கள், சினிமா அடிமைகள், வாய்ச் சொல் வீரர்கள், பழம் பெருமை பேசியே வீணாய்ப் போனவர்கள் என்று கூறி வந்த அத்தனை வாய்களும் இன்று அடைத்துப் போய்க் கிடக்கின்றன. ஏன் தமிழக அரசியல்வாதிகளையே ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி விட்டு பூரித்து ஆர்ப்பரித்து தனது கலாச்சாரத்தைக் காக்க ஆரவாரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.< கடற்கரையில் தமிழ் தலைகள்< இன்று போராட்டக் களத்தில் புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர் படை தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்து விட்டது.

    பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த பின் அருள்வாக்கு : யாவும் நன்மையாக முடியும் ...

    ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவருடன் புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை பிரதமரைச் சந்தித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ‘தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களும் கடிதத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

    Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ராஜன் கருத்து

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார். அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள். ஒரு பிரச்சனைக்காக தெருவில் வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது. சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில் நடைபெறுகிறது. அதுதான் முக்கியம். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டிருக்கிறது என்றால், அதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்றும் ராதா ராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

    மதுரை சேலம் ரயில் சிறைப்பிடிக்க பட்டது.. ரயில் மறியல் தொடர்கிறது

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 3வது நாளாக நடக்கும் இந்த போராட்டம் தற்போது உக்கிரமாக நடந்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் ரயிலை மறிக்க ஆரம்பத்து உள்ளனர்.
    இந்த ரயில் மறியல் போராட்டம் கூட சாதாரண அளவில் இல்லை. மதியம் 2 மணி அளவில் மறிக்கப்பட்ட ரயில்கள் எதுவும் இன்னும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  மதுரை மற்றும் சேலத்தில் ஓடும்  ரயிலையே நிறுத்தி மாணவர்கள் புதிய சகாப்தம் ஏற்படுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் ரயில் மறியல் தீவிரம் அடைந்துள்ளது.
    மேலும் ரயில் மறியல் போராட்டத்தால் தற்போது வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று சென்னை வர வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. லைவ்டே

    ஜல்லிக்கட்டு..கர்நாடகத்தில் போராட்டத்தில் குதித்த கன்னட தமிழ் மக்கள்

    ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு இந்த வாசகத்திற்கு இன்று உலக தமிழர்கள் ஒன்று இணைந்துள்ளார்கள் என்பது உண்மை.
    ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத நாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, லண்டன், மலேசியா உட்பட பல உலக நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளது.
    காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கர்நாடகாவில், இன்று தமிழர்களுக்கு ஆதரவாக, பெங்களூரு டவுண் ஹால் முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் என வலைதளங்களில் தகவல் வெளியானது.
    யார் அந்த தகவல் முதலில் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் தகவல் வைரலாக பரவியது.
    சரியாக மாலை நான்கு மணிக்கு 25 நபர்கள் மட்டும் டவுன் ஹால் முன்பு வந்தனர். போலீஸார் அனுமதி வாங்கவில்லை, போலீஸாரிடம் நாங்கள் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்த வந்துள்ளளோம் என்று சொன்னதும், கன்னடபோலீஸார் முடியாது என்று சொல்லாமல் நாங்களும் ஆதரவு தருகிறோம் நடத்துங்கள் என கூறியுள்ளனர்.