திங்கள், 12 டிசம்பர், 2016

அம்மா திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயம் உருவாகும் என்கிறார்கள்

அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தை தொடர்ந்து விரைவில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சி உருவாகும் என்று அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை அதிமுக நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்று கட்சியை வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலா பொதுச் செயலாளர் பதவி ஏற்க விரும்பவில்லை. இதையடுத்து பத்திரிக்கை ஒன்றில் புது கட்சி ஒன்று உருவாக போவதாக அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்கச்சொல்லி அதிமுக நிர்வாகிகள் வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.

வர்தா புயல் சென்னையை நெருங்குகிறது


சென்னையை நெருங்குகிறது வர்தா புயல் வர்தா புயல் சென்னையை நெருங்குகிறது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வர்தா புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை அருகே இன்று பிற்பகல வர்தா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக சட்ட விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக முடியாது?

ஆர்.மணி அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைக் கொண்டு வருவதற்கான பிரம்மப் பிரயத்தனத்தில் தமிழ் நாட்டின் பல ஊடகங்களும் இன்று ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பசி நோக்காமல், கண் துஞ்சாமல் இந்த தியாக வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய ஊடகங்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை கவனிக்க மறுத்தும், தவறியும் வருகின்றன. அதுதான் அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள். இதன்படி சசிகலா தற்போதைக்கு அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக வர முடியாது என்பதுதான் யதார்த்தம்.
எம்ஜிஆரால் துவக்கப் பட்ட அஇஅதிமுக வின் சட்டதிட்ட விதிகள் 1.11.1976 ல் பெரியளவில், விரிவாக உருவாக்கப்பட்டது. அதற்கு கடைசியாக திருத்தங்கள் அதாவது amendment மேற்கொள்ளப் பட்டது 5.2.2007-ல். AIADMK Rules and Regulations 2007 ... இதில் Section 30 (5) என்ன சொல்லுகிறது என்றால், Those who want to contest for the post of office bearers in the Organization should have been members of the party for 5 years without any break. The General Secretary is vested with the power to relax this.

சென்னை காசி தியேட்டரில் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்க மறுப்பு .. சண்டை!

 திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்பும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை காசி திரையரங்கில் தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காதவர்கலோடு சிலர் தகராறு . திரையில் தேசிய கொடியை காட்ட வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நிற்கவில்லை என்று அங்கிருந்த சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, உடனடியாக திரையரங்கில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர் பொய்களை கூறிய அப்போலோ +சசிகலா + பாண்டே போன்ற ஊடகங்கள் ... டாக்டர் புகழேந்தி


ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித்    தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.

* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக பேசுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார். * எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.* "வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்'- அப்பல்லோ ரெட்டி.

* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.

* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.

* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.

சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுகவும் ஆட்சியும் ஓரளவு வந்துவிட்டது?

தனக்கு துரோகம் செய்த சசிகலா உள்பட அவரது சொந்தங்கள் 14 பேரை 2011 டிசம்பரில் கட்சியி லிருந்து நீக்கினார் ஜெயலலிதா. துரோ கக் குற்றச்சாட்டுக் குள்ளானவர்கள் ஜெ. இருந்தவரை தலை காட்டவில்லை. ஆனால், ஜெ. இறந்த போது அவர் தலை மாட்டில் சுற்றி நின்ற வர்கள் அவர்கள் தான். இதைப் பார்த்த அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகி களும் அதிர்ந்து போனார்கள். ஆனால், கடந்த 75 நாட்களாகவே அவர்கள் இப்படித்தான் வட்டமடிக்கிறார்கள் என்பது கட்சியினருக்குத் தெரியாது.; அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானதுமே ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அத்தனை பேரும் அப்பல்லோவில் குவிய, அவர்களை அரவணைத்தார் சசிகலா. அவர்களிடம் ஆலோசித்த பிறகே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார். இதனை, "அப்பல்லோவைச் சுற்றும் துரோகிகள்' என அட்டைப்படக் கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். மன்னார்குடி சொந்தங்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""அம்மாவின் உடல் போயஸ்கார்டனில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது. முறைப்படி சம்பிரதாய சடங்குகள் முழுமையாக நடக்கவில்லை. அப்போது, சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது குடும்ப வகையறாக்கள் பலரும் கார்டனுக்குள் நுழைய முயற்சித்தனர். தனது கணவர் நடராஜனை மட்டுமே அனுமதிக்கும்படி கார்டன் பாதுகாவலர் களுக்கு சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.. அதேபோல ராஜாஜி ஹாலில் உடல் வைக்கப்பட்டதும் அதனைச் சுற்றி தனது அக்காள், அண்ணன், தம்பி குடும்ப வழிச்சொந்தங்கள் மட்டுமே இருக்க வேண்டும். கணவர் (நடராஜன்) வழிச்சொந்தங்களை அனுமதிக்கக் கூடாது என சசிகலா சொல்லியிருந்தார்.

சசிகலா புஷ்பா : எந்த சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கடிதம் கொடுத்த சசிகலா எப்படி பொது செயலாளர் ஆகலாம்? அனுமதிக்க மாட்டேன்!

சசிகலாவை எதிர்ப்பேன்- சசிகலா புஷ்பா! பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்ற ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதல் முதலில் வேண்டும். அதன்பிறகுதான் செயற் குழு, பொதுக்குழு எல்லாம். ஆட்சி மன்றக் குழுவில் மதுசூதனன், ஓ.பி.எஸ். தொடங்கி கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். இவர்களில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலர் இதில் கையெழுத்திட மறுத்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் ஓ.பி. எஸ்.. மற்றும் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜலெட்சுமி உள்ளிட்ட பலரையும் கார்டனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சசிகலா. இந்நிலையில், இன்னமும் அ.தி.மு.க எம்.பி.யாகவே நீடிக்கும் சசிகலாபுஷ்பா, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் கொடுத்திருக்கிறார். அவரிடம் நாம் பேசியபோது, ""எந்தச் சூழலிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெ.விடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சசிகலா, அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவியைப் பெற துடிக்கிறார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடமுடியும். சசிகலா செயற்குழு உறுப்பினர் கிடையாது. கட்சியில், மூத்த தலைவர்கள் பண்ருட்டிராமச்சந்திரன், பி.ஹெச்.பாண்டியன், செங்கோட்டையன், மதுசூதனன் போன்ற பலரும் இருக்கிறார்கள். சசிகலா போட்டி யிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். என்னை தடுக்க நினைத்தால் அந்த சதியை முறியடிக்க கோர்ட்டுக்குப் போவேன்'' என்கிறார் சசிகலாபுஷ்பா. நக்கீரன்,இன்

பில்டிங் ஸ்டிராங்.. ஆனா பேஸ்மென்ட் வீக்".. இதுதான் சசிகலாவின் உண்மை நிலை!

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. காரணம், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கடைக்கோடி கருணாஸ் வரை அத்தனை பேரும் சின்னமா புகழ் பாடி வருகின்றனர். இருப்பினும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே சசிகலாவுக்கு முழு அளவில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அரசியல் அரங்கில் மிகப் பெரிய வெற்றிடம் விழுந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இடம் பெறாமல் ஒதுங்கியிருக்கும் நிலையில் ஜெயலலிதாவும் இல்லாதது தமிழக மக்களையும் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் எதிர்காலம், முக்கியப் பிரச்சினைகளை எப்படி தமிழக அரசு கையாளப் போகிறது என்ற கவலையில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் அஏதிமுக தலைவர்களோ வேறு கவலைகளில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை. மொத்தமாக யார் தலைமைப் பொறுப்பில் இருந்தால் நமக்கெல்லாம் நல்லது என்ற பெரும் கவலையில் அவர்கள் உள்ளனர்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

இடைநிலை சாதிக்காரர்கள் தலித்துகள் மீது நடத்துகிற வன்மம்

சுவாதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இடைநிலை சாதியை சேர்ந்த நவீனாவுக்கு கொடுக்கவில்லை.நவீனாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்விக்கு கொடுக்கவில்லை
தலித்துகள் மாயவலையில் இருக்கின்றனர்.இங்கு நடக்கும் எல்லா கொடுமைகளுக்கும் பிராமணர்கள்தான் காரணம்.இடைநிலை சாதிக்காரர்கள் வெறும் அம்பு.இப்படிதான் இங்கு அரசியல் நகர்த்தப்பட்டு வருகிறது. கருத்தியல் வேறு.கள நிலவரம் வேறு.கடந்த 2015 ம் ஆண்டு தலித்துகள் மீது 1782 வன்கொடுமைகள் நடந்து உள்ளன.இதில் 7 பேர் மட்டும்தான் பிராமண சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள்.அது மட்டும் அல்ல 97 சதவீதத்தினர் இடைநிலை சாதி காரர்கள்.அப்படி என்றால் பிராமணர்கள் சாதி பாகுபாட்டினை நடத்தவில்லையா? கண்டிப்பாக பெரும்பாலான பிராமணர்கள் சாதி துவேஷ மன நிலையில்தான் இருக்கின்றனர்.ஆனால் அவர்களால் நேரடி வன்முறையில் ஈடுபடும் சூழல் இல்லை.ஆனால் இடைநிலை சாதிக்கார்கள் நடத்துகிற வன்கொடுமையின் உச்சம் ஆபத்தானது.

ஜெ’ மரணம்: தேவை பிரேத பரிசோதனை - நீதிமன்றத்துக்கு கடிதம்!


“மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்று பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நரசிம்மமூர்த்தி ‘தி இந்து' பத்திரிகைக்கு அளித்த பேட்டி இதோ:
“கடந்த செப்டம்பர் மாதம் வரை நலமுடன் இருந்த ஜெயலலிதா திடீரென இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று முதலில் சொன்னார்கள். அடுத்த சில தினங்களில் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார்கள். அவரது உடலுக்கு என்ன பிரச்னை என்று வெளிப்படையாக அறிவிக்காததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தமிழக அரசுக்குக் கடிதம்!

வர்தா… உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஓங்கோலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, அதி திவீர புயலாக வலுவடைந்துள்ளதால் ஆந்திர, தமிழக அரசுகள் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்பதால் இன்று மாலை தொடங்கி அடுத்த 36 மணி நேரத்துக்கு மழையுடன் கூடிய காற்றும் இருக்கும் என்று எச்சரிக்கிறது வானிலை மையம். நாளை பிற்பகலில் இந்த புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை

எல்லாமே நடிப்பா?.. ஜெ. இருந்தவரை பவ்யம்.. போன பின்னர் குனிய மறந்த ஓ.பி.எஸ் + அமைச்சர்கள்!

ஓவர் நடிப்பு சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பவ்யம், அடக்கம் என அலப்பறையைக் கொடுத்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் அவர் மறைந்த உடனேயே அத்தனையையும் தூக்கி போட்டுவிட்ட அதிசயத்தை தமிழகம் பார்த்து இன்னும் வியந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவைப் பார்த்தாலே போதும்.. அவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் விமானமும் ஹெலிகாப்டரும் வானத்தில் பறந்தாலே போதும்.. அதிமுகவினரின் அத்தனை நாடி நரம்புகளும் பவ்யம் பணிவுகளுக்கு ஷிப்ட் ஆகிவிடும்...
அதுவும் ஜெயலலிதாவுக்கு எதிரே நின்றால் போதும்... இடுப்பு எப்படித்தான் அவர்களுக்கு அப்படி வளையுமோ ..அடடே அந்த பவ்யமே இன்னும் சமூக வலைதளங்களில் நாறடிக்கப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டம்தான் ஜெயலலிதா சிறைக்குப் போன சமயத்தில் நடந்தது...

தேர்வு மண்டபத்தில் அதிமுக! நேர்மையான கட்சியாக இனி மாறவேண்டும்!

கதிர்வேல்கதிர்வேல் : ஒரு டூரின்போது வண்ணாரப்பேட்டை பிடபிள்யுடி கெஸ்ட் அவுசில் தங்கினார் எம்ஜிஆர். கட்சிக்காரர்கள் சந்தித்து பேசினார்கள். கட்சியில் இல்லாதவர்களும் போயிருந்தோம். கெடுபிடி ஏதும் இல்லை.
லோக்கல் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அதில் சர்ச்சை ஓடிக் கொண்டிருந்தது. ஜி ஆர் எட்மண்ட், நம்பிராஜன், கருப்பசாமி பாண்டியன் முதலான பிரமுகர்கள் ஒரு கூட்டத்திடம் சமரசம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சத்தம் கேட்டு எல்லாரையும் உள்ளே அழைத்து விவரம் கேட்டார் எம்ஜிஆர். பலரும் ஒரே நேரத்தில் பேச தொடங்கினார்கள். ஒருத்தர் பேசுங்கள் என்ற எம்ஜிஆர், என்ன நினைத்தாரோ, ஒரு இளைஞனை பார்த்து “நீங்க சொல்லுங்க” என்றார்.
அவர் ஒரு சைனா காரர். அப்பா ஊரில் கொஞ்சம் பிரபலமான பல் டாக்டர். அதிமுகவில் தொடக்க நாள் முதல் உறுப்பினர். “தலைவர் நீங்க செஞ்சது பெரிய தப்பு!” என்றார் அந்த இளைஞர் மழலை போன்ற அந்நிய தொனியில்.
திடீர் நிசப்தம். எல்லோரும் எம்ஜிஆரை பார்த்தனர் அவர் ரியாக் ஷனுக்காக. சீனரை உற்றுப் பார்த்த எம்ஜிஆர் குபீரென்று சிரித்தார். “என்ன தப்புனு சொல்ல மாட்டீங்களா?” என்றார்.

31 தலித் எம் எல் ஏக்களைக் கொண்ட அதிமுக ஒருவரையாவது அமைச்சராக்க வேண்டும்: திருமாவளவன்

ஆளும் கட்சியில் அதிகார பகிர்வின் போது தலித்துகளுக்கு உரிய பிரிதிநிதிதுவத்தை அளிக்க வேண்டும் என  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன்வெளிச்சம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு மூன்று அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். அவர் காலமானதை தொடர்ந்து தற்பொழுது சமூக குழுக்களின் அடிப்படையில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அல்லது அதிகார பகிர்வை வலியுறுத்தும் நிலை ஆளும் கட்சி அதிமுகவில் நிகழ்வதாக ஊடங்கங்களின் மூலம் அறிய வருகிறோம். ஒவ்வொரு சமூக குழுவும் தங்களுடைய சமூக பிரிவினருக்கு அதிகாரம் வாய்ந்த பொறுப்புகள் வேண்டும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று தங்களுக்கிடையே போட்டிபோடுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் 31 பேர் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுக உறுப்பினர்களிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரு சமூக குழு தலித் சமூகத்தை சார்ந்த சமூகம்தான், ஆனால் அதை விட மிக குறைவாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டவர்கள் மிக அதிகமான அளவில் அமைச்சர்களாக இருக்கிற நிலை உள்ளது.

வர்தா புயல் கனமழை .. அவசர தொலைபேசி எண்கள்,,ஈமெயில் அறிவிப்பு

வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, வடதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்பட்சமாக 20 சென்டிமீட்டருக்கு மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில்‌ மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை பிற்பகல் கரையைக்‌ கடக்கிறது.இந்நிலையில் வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த எண்கள் பற்றிய விவரங்கள்..தொலைபேசி எண்கள்: : 044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள: 94454 77207, 94454 77203, 94454 77206, 94454 77201, 94454 77205 மேற்கூறிய எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவசரகால மின்னஞ்சல் முகவரிகள்: gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

2011-ம் ப்ளாஷ் பேக் ஜெயலலிதா :‘என்னைக் கொல்ல சதி நடக்கிறது. சொத்துக்களையும் ஆட்சியையும் கைப்பற்றவும் என்னைச் சூழ்ந்திருப்பவர்களே சதி செய்கிறார்கள்

அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று  அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளியே கொண்டுவந்தது வரையில், எல்லாமும் மர்மமாகவே இருந்தன. முதல்நாள் காலையில், மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பங்கேற்ற முதல்வர், அன்று மாலையில் உடல் நலமில்லை என்று அட்மிட் செய்யப் படுகிறார்.

ரெட்டி ரெயிட் ... அதிமுகவை பிளக் மெயில் செய்யும் பாஜக,, அதிமுகவின் ஊழல் பணமெல்லாம் பிடிபடுகிறது

மிஸ்டர் கழுகு: சிக்கிய கஜானா - ‘சென்ட்ரல்’ செக்! ‘‘அ தி.மு.க-வை எஃகு கோட்டையாக வைத்திருந்த, இரும்புப் பெண்மணி ஜெயலலிதா இப்போது இல்லை.’’ - சோகம் படர்ந்த முகத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார் கழுகார். அவர் கையில் 2015 ஜூலை 19 தேதியிட்ட ஜூ.வி. இதழ் இருந்தது. ‘‘ ‘ஆளும் கட்சியின் புதிய கஜானா! நிழல் ரெட்டி - நிஜ ஜாதகம்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுயிருந்தோமே. அந்த சேகர் ரெட்டிக்கு இப்போது சிக்கல். சென்னை தியாகராயர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் 90 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்.  தமிழகத்தில் புதிய மந்திரிசபை அமைந்து இரண்டாவது நாளே வில்லங்கம் தொடங்கிவிட்டது. பொதுப்பணித் துறையின் பிரபல கான்ட்ராக்டரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டி பற்றி விலாவரியாக ஏற்கெனவே எழுதியிருக்கிறோம். சேகர் ரெட்டியின் அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பதும், அங்கு ஏராளமாக பணம் கிடைத்திருப்பதும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி என்ற பெயர் சென்னை தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பிரபலம். ‘சென்னையைச் சேர்ந்த பிரேம் என்பவர் கொடுத்த தங்கக் கட்டிகளை பணமாக மாற்றித்தர ரெட்டி சகோதரர்கள் சம்மதித்து அதற்கான வேலையில் தீவிரமாக உள்ளனர்’ என்ற தகவல் வருமான வரித்துறையினருக்குக் கிடைக்க... சேகர் ரெட்டியின் வீடுகளில் நுழைந்தனர்.

ஆர்த்தி :ஆமா... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை...எங்களுக்குள்ள பிரச்னை

ஆர்த்திகாதல் கணவர் கணேஷுடன் விவாகரத்து..ஹீரோயின் ஆசையில் சைஸ் ஸீரோவுக்கு முயற்சி...காமெடி நடிகை ஆர்த்தியைச் சுற்றி இப்படி ஏகப்பட்ட செய்திகள்....'நெசமா' என ஆர்த்திக்கு வாட்ஸப்பினால், ஸ்மைலியை அனுப்பிவிட்டு அதே ஸ்மைலுடன் 'ஹாய் அக்கா' என லைனில் வருகிறார் ஆர்த்தி.'ஆமாம்... நானும் கணேஷும் ஒண்ணா இல்லை... செம அடிதடி... பயங்கர பிரச்னை...''சின்ன இடைவெளி விட்டு பெரிய சிரிப்புடன் தொடர்கிறார் ஆர்த்தி.
''புருஷன், பொண்டாட்டின்னா சண்டை, சச்சரவு இருக்கணும். பிரச்னை இருக்கணும். அப்பதான் இந்த சமுதாயம் நம்மை உத்துப் பார்க்கும். அமைதியா இருந்தா, அட அவங்களுக்கென்ன... நல்லாத்தானே இருக்காங்கனு விட்ருவாங்க.  நான் தனியா எங்கேயாவது போறபோது கணேஷ் எப்படியிருக்கார்னு என்கிட்ட யாராவது கேட்டாங்கன்னா, அவர் எப்படியிருக்கார்னு யாருக்குத் தெரியும்னு சொல்லிடுவேன். அப்புறம் எங்களைப் பத்தியே யோசிச்சிட்டிருப்பாங்கல்ல... 

அதிமுக சேகர் ரெட்டி ரெயிட் பிந்திய ஸ்கோர் : 177 கிலோ தங்கம் , 131 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள்

அ.தி.மு.க., கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் இருந்து, இதுவரை 131 கோடி ரூபாய் பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 'அடேங்கப்பா, திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடுவாரோ' என, மக்கள் வியக்கும் அளவுக்கு அவரது வீடு, அலுவலகம் மற்றும் காரில் இருந்து பணம் மற்றும் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனையை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திலும் சேகர் ரெட்டி சிக்கியுள்ளார் வேலூர் மாவட்டம், தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி; 'ஜே.எஸ்.ஆர்., இன்ப்ராடெக்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில், 'கான்ட்ராக்ட்' எடுத்து வந்தார். 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற பெயரில், தமிழகம் முழுவதும், மணல் குவாரிகளை நடத்தும் உரிமையை பெற்றுள்ளார்.

பிரதாப் ரெட்டி : எப்படி அவரை இழந்தோம் என்றே தெரியவில்லை.. ரெட்டிக்கே தெரியாதுன்னா ?

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறி வந்தபோது திடீரென்று அவர் மரணம் அடைந்தது எப்படி? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை இப்படி திடீரென முடிவுக்கு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
68 வயதே ஆன நிலையில் அவர் காலமானது தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியாகவும், சொல்ல முடியாத துயரமாகவும் மாறியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்று வந்ததில் இருந்தே அவர் உடல் நலம் குன்றிதான் காணப்பட்டார்.
என்றாலும் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் அவரிடம் புத்துணர்ச்சி ஏற்பட தொடங்கி இருந்தது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கூட அவர் குணமாகி வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் நிலவியது.

ட்ராபிக் ராமசாமி :ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது .. வழக்கு போடுவேன் . சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே போவார்



75 நாட்கள் ஜெயாவின் ஆரோக்கியத்தை பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்ட தந்தி டிவி பாண்டே,ஹரிஹரன் போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

நியாயமாக ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடித்த, விசுவாசமாக இருந்த ஊடகங்கள்தானே 75 நாட்கள் அப்பல்லோ மர்மத்தை விடாப்பிடியாக தோண்டித் துருவ வேண்டும்? மாறாக ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்த நக்கீரன், சில ஆங்கில தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள்தான் அவரது மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை வெளிக்கொணர தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இருக்கும்போது ஜெ புகழ்பாடிய ஊடகங்களும் குனிந்து கும்பிட்ட முதுகுகளும் மறுநாளே புனைப்பெயர்களை களைந்துவிட்டு அடுத்த தலைவி ‘சின்னம்மா’ என்று அடுத்த சுற்று குனிய தயாராகிவிட்டன. பணிவு, மரியாதை, விசுவாமெல்லாம் ஜெயலலிதாவுக்கு அல்ல, அதிகாரத்திற்கு மட்டும்தான் என்பது புரிகிறது. இருந்தாலும் இவ்வளவு எளிதில் ஜெயலலிதாவும் அவரது மரணமும் தாண்டிச்செல்லப்படுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் சென்ற நாளில் இருந்து வெறும் அறிக்கைகளில் மட்டுமே படிக்க முடிந்த ஜெயலலிதாவின் வாழ்வு, இறந்த உடலாகத்தான் வெளிஉலகத்திற்கு வந்தது. எனில் இது ஜனநாயக நாடுதானா என்றும் கேள்வி எழுகிறது.

சசிகலா பெண் பெரியாரும் அல்ல, அவரை எதிர்ப்போர் அனைவரும் பார்ப்பனர்களும் அல்ல

sasi3அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவை பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி.
தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களிடம் பணம் பெற்று, சீட் வழங்கியது சசிகலா அன்ட் கோ தான். 

சசிகலா தன் கணவர் நடராஜனை முதல்வராக்க முயற்சி எடுத்தார்.. ஆனால் .

jayalalitha-rare-photo-pics20 savukkuonline.com : ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன.  இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா பொருத்தமானவரா என்றால் பொருத்தமானவரே.     ஆண்களின் உலகமான சினிமா மற்றும் அரசியலில், அனைத்து தரப்பினரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறி, வென்று காட்டியவர். பராசக்தி திரைப்படத்தின் வசனத்தைப் போல “நெருப்பாற்றில் நீந்தியவர்” என்றால் அது மிகையில்லை ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது தொடர்ந்த எதிர்ப்புகளாலேயே நடைபெற்றுள்ளது.  தொடக்க காலத்தில், எம்ஜிஆர் ப்ரூகளின் மருத்துவமனையிலிருந்த போது ஆர்.எம். வீரப்பன் கோஷ்டியால் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார்.  பின்னாளில் அவர் அரசியலை விட்டே ஒதுங்கலாம் என்று நினைத்தபோது, எம்.நடராஜன் வீட்டில் நடந்த ஒரு சோதனையில் அவரது சட்டப்பேரவை ராஜினாமா கடிதத்தை திமுக கைப்பற்றி சபாநாயகரிடம் அளித்தது.    அப்போது புதிய வேகத்தோடு அரசியலில் இறங்கினார் ஜெயலலிதா.  ஒரு வேளை திமுக அந்த கடிதத்தை பொது வெளியில் வெளியிடாமல் இருந்திருந்தால், ஜெயலலிதா அரசியலை விட்டே ஒதுங்கியிருப்பாரோ என்னவோ.

பாலபாரதி ex MLA:ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை.

ஜெயலலிதா"தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, அரசியலில் ஈடுபடுவதில் இருக்கும் தயக்கதை உடைத்தவர் ஜெயலலிதா. எங்கு சந்திக்கும்போதும் நலம் விசாரிப்புடனே பேசத் தொடங்குவார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்தவர், அதிமுக எனும் பெரிய கட்சியை திறம்பட வழிநடத்தியவர், மாற்றுக்கருத்துகள் பல இருந்தாலும் நான் மதிக்கக்கூடியவர்" என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அமைதியாக பேசத் தொடங்கினார் திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாலபாரதி. ஆனால்,ஜெயலலிதாவின் மரணம் பற்றிப் பேசும்போது குரலில் சூடேறியது.