திங்கள், 16 மே, 2016

TN Exit Poll திமுக..124, அதிமுக 90, இதர கட்சிகள் +......C Voter Exit கணிப்பு அதிமுக தனிப்பெரும்பான்மை.....

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 124 முதல் 140 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தவிர 232 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. Exit poll predicts 124 seats for DMK, 90 for AIADMK வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டது.

அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?

EC_1கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள் தேர்தல் முறையில் உடனடியாக எதையாவது செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் இல்லையேல் இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாக வந்துவிடும்”. – அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்படதை தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிட்டார் பா.ஜ.க-வின் தமிழிசை சவுந்தர்ராஜன். “கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கவலையுடன் சொல்கிறது” என்கிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தியாகச் செம்மல். இப்படியாக விதியின் மேலும், கடவுளின் மேலும் பாரத்தை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் ஜனநாயகக் காவலர்கள்.

ராஜேஷ் லகானியிடம் கேள்வி கேட்கும் ஒரு ஐ.டி ஊழியர்

சமூகத்தில் 90% மக்களை விட எனக்கு அதிக வருமானம் வருகிறது. இருந்தும், நான் 1 கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனால்,தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும்,வேட்பாளர்களும் நூற்றக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள்.
ராஜேஷ் லகானிஐ.டி ஊழியர் ஒருவர் தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ராஜேஷ் லகானிக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம் மதிப்புக்குரிய ராஜேஷ் லகானி சார், நான் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறேன். “தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம்” என்று தமிழ்நாடு எங்கும் 1.7 கோடி பேரை நீங்கள் உறுதி மொழி எடுக்க வைத்ததாக செய்தியில் பார்த்தேன். நல்ல விஷயம். சார், இன்னும் சில விஷயங்களிலும் சில நபர்களை உறுதிமொழி எடுக்க வைக்க நீங்கள் ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ரூ. 570 கோடி பணம் தப்பியதில் ஜெயலலிதா, மோடி உறவு அம்பலம் : வைகோ குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடி அரசுடன், ஜெயலலிதா அரசியல் பேரம் பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளருமான வைகோ கூறியுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மே 13 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் பறக்கும் படையினர் மூன்று கண்டெய்னர்களைத் தடுத்து சோதனையிட்டதில், 570 கோடி ரூபாய் அதில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது.

73.76 சதவீதம் வாக்குப்பதிவு தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 63.70 சதவீதம் வாக்குப்பதிவுLalte news :தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது என்றும் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.50 சதவீதம் பதிவாகியுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களை விட கிராமங்களில் அதிக வாக்குகள் பதிவானதாக அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தொகுதியில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக லக்கானி தெரிவித்துள்ளார்.

தன் தற்கொலை முயற்சிக்கு காரணம் சொல்கிறார் கெளசல்யா!

vikata.com தேர்தல் பரபரப்பையும் மீறி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கெளசல்யா. கடந்த 12-ம் தேதி காலை அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி வெளியானபோது, தேர்தல் பரபரப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, கெளசல்யா குறித்த வருத்தங்களை பலர் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
கெளசல்யாவுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் துவங்கி, கெளசல்யா தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பலர் கவலை கொண்டிருந்ததை காண முடிந்தது கெளசல்யா இப்போது நலமாக இருக்கிறார். அவர் தற்கொலைக்கு முயன்றது உண்மை. ஆனால் அவர் அபாய கட்டத்தை எதுவும் எட்டவில்லை. மனரீதியில் அவர் தன்னை வலுப்படுத்திக்கொள்ள அவருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அதற்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை சந்திக்க மீடியாக்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதிக்கவில்லை. கெளசல்யா இனி என்ன செய்ய வேண்டும் என பலரும் கவலைப்படத் துவங்கி விட்டார்கள்.

உஜ்ஜைனில் மகா கும்பமேளா: பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்றார்

மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் நகரின் அருகே இன்று நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். இந்தூர்: மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் நகரின் அருகே இன்று நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.முன்னதாக, இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்த மைத்ரிபாலா சிறிசேனா நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது, அவருக்கு மோடி விருந்து அளித்தார்.

232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.38 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டசபை தேர்தலில் ஒரே கட்டமாக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அனல்பறக்கும் சனிக்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. vote பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இன்று கேரள சட்டசபை தேர்தல் : காங்., - இடதுசாரி பலப்பரிட்சை


திருவனந்தபுரம்:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. இதில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமை யிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. சட்டசபைக்குள் நுழைந்தே தீருவது என்ற முனைப்புடன், பா.ஜ., மூன்றாவது அணியாக, களமிறங்கியுள்ளது.
உள்ளூர் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர்.காங்கிரஸ் அரசு மீதான ஊழல்களைமுன்னிறுத்தி, இடதுசாரி அணி பிரசாரம் செய்தது. வளர்ச்சி திட்டங்களை வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மாற்று அணி என்ற அடிப்படையில் பா.ஜ., ஓட்டு வேட்டையாடியது.

தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு"

Tamilnadu Assembly Election News:  தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறுதிருச்சி:அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதால், ஆட்சி பறிபோகும் கடந்த கால, 'சென்டிமென்டை' நினைத்து, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, மது வினியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தேர்தலை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.கடந்த, 25 ஆண்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதெல்லாம் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி,
எதிர்க்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.    போஎஸ் கார்டனில் வண்டு முருகன் தலைமையில் 4 நாட்களாக கேர்ள ஜோதிடர்களும், தஞ்சை வேத விற்பன்னர்களும், தொடர்ந்து ராஜா யோக யாகம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் அந்த ஏரியா முழுவதும் புகை மண்டலமாகவும், வர இருக்கும் பருவமழையை தாமதபடுதிகொண்டு இருபதாகவும் தேசிய பருவமழை பரிணாம ஆணையம் தெரிவித்துள்ளது.

Containers Films தயாரிப்பில் "அந்த 18 மணித்தியாலங்கள்" ... (அல்லது அந்த 570 கோடிகள்!)

Containers Films பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் பிரமாண்ட திரைப்படம்தான்  "அந்த 18 (மணித்தியாலங்கள்" (அல்லது அந்த 570 கோடிகள்").
இது ஒரு தமிழக ஆந்திரா டெல்லி கூட்டு தயாரிப்புஆகும். இது கின்னஸ் சாதனையில் நிச்சயம் இடம்பெறும். ஏனென்றால் ஒரு திரைப்படம் தயாரிக்கும் பொழுதே திருட்டு விசிடி தயாரிப்பாக இதுவரை உலகின் எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் உருவானதில்லை. அந்த வகையில் இது ஒரு புரட்சி திரைப்படமாகும்.   
டைரக்டர் கொடை மணி சுவாமியின்  சிறுதாவூர் பிக்சர்ஸ்  தயாரிப்பாக தமிழ் தெலுங்கு  ஹிந்தி ஆகிய மும்மொழிகளில் தயாராகிறது " அந்த 18 மணித்தியாலங்கள்".
நாம் அறிந்தவரை இதன் கதை இதுவரை உலகமே கண்டிராத பல திடுக்கிடும் திருப்பங்களையும் நம்பவே முடியாத பயங்கர முடிச்சுகளையும் கொண்டிருப்பதாக கிசு கிசுக்கள் கூறுகின்றன.

ஆர்.கே.நகர் பட்டுவாடா கின்னஸ் சாதனை ! அரவக்குறிச்சி தஞ்சாவூர் எல்லாம் ஜுஜுப்பீ

ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது: திருமாவளவன் ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு. இந்த தேர்தலில் வியாபாரிகள், சாதாரண மக்கள் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம் அதிமுக, திமுக கொண்டு சென்ற கோடிக்கனக்கான பணத்தை கைப்பற்றாதது புரியாத புதிராகவே உள்ளது.

கலைஞருக்கு மட்டும் Facebook தடை ... லக்கானி திமுகவினருக்கு மட்டும் Social media கட்டுப்பாடு விதிக்கிறார் ஏன்? புரிகிறதா?

570 கோடி குறித்து கலைஞர் கேள்வி எழுப்பியதும் முகநூலில் எழுத கலைஞருக்கு தடை விதிக்கிறார் லக்கானி. லக்கானியும், அதிமுகவினரும் இதுகுறித்து "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என பதட்டம் காட்டுவது சந்தேகங்களை எல்லாம் வலுப்படுத்துகிறது.
மிசா காலத்தில் இருந்து ஃபேஸ்புக் காலம் வரை கலைஞர் எழுதினால் தான் எல்லா திருடர்களுக்கும் வயிற்றைக் கலக்குகிறது. இந்த நொடி வரை ஜெயலலிதா ஜெயா டிவியில் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் கலைஞர் முகநூலில் எழுதுவதுதான் உறுத்துகிறது. ஏனெனில் கேள்வி எழுப்புவது கலைஞர் தானே!!
ஏன் கலைஞரை மாய்ந்து மாய்ந்து எதிர்க்கிறார்கள் எனப் புரிகிறதா? ஏன் கலைஞரை பரம்பரை எதிரி என மேடையில் அறிவிக்கிறார்கள் எனத் தெரிகிறதா? தினமணி, தினத்தந்தி, தினமலர், புதியதலைமுறை, குமுதம் ரிப்போர்ட்டர் என எல்லோரும் சேர்ந்து ஜெவுக்கு ஏன் முட்டுக் கொடுத்து கலைஞரை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பது புரிகிறதா? விஸ்வரூபம் விவகாரத்தில் இருந்து, நுழைவுத்தேர்வில் இருந்து, தேர்தல் வரை கலைஞரின் ஒரு முகநூல் பதிவு ஏற்படுத்தும் அலையை ஒரு மிகப்பெரிய சொற்பொழிவால் கூட ஏற்படுத்த முடியாது. அவர்தான் கலைஞர்
...கிளிமூக்கு அரக்கன்  முகநூல்

ஞாயிறு, 15 மே, 2016

ஆதிச்சநல்லூர்! தொல்லியல் பிரகடனம் .. உலகின் மிக பழமையான திராவிட நாகரீகம்!...கல்குவாரிகளால் அழிக்கப்படுகிறது


சென்னை மாவட்ட மியூசியத்தின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் ரியா, மற்ற தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்துவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். அதோடு, அந்தக்கால மனிதர்கள் வாழ்ந்த வேறு இடங்கள் எவை என்பதையும் அவர் ஆர்வமுடன் தேடினார். ஆதிச்சநல்லூரில் இரும்பின் பயன்பாடு அதிகம் இருந்ததால், அதே போல வேறு எந்த இடங்களில் இரும்பு உலோகத்தை சேகரித்து ஆலைகள் நடத்தினார்கள் என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான், திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்திலும் இதே போல முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருப்பதையும், அங்கேயும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு ஆலைகள் செயல்பட்டன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில், காசிபாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பாமக வேட்பாளர் காசிபாண்டியன் திடீரென்று திமுகவுக்கு தாவியுள்ளார். இச்சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.திருப்பதி, திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கோபிச்செட்டிபாளயைம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமியும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.tamil.thehindu.com

ஐன்ஸ்ட்டீனும் நியூட்டனும் அசந்துபோகிற கண்டுபிடிப்பாளர்கள் R.K Nagar ...

ஐன்ஸ்ட்டீனும் நியூட்டனும் அசந்துபோகிற அளவுக்கு கண்டுபிடிப்பாளர்களாக இருக் கிறார்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவினர். ஆர்.கே.நகர் அம்மாதொகுதியில் கேபிள் டி.வி இலவசம் என்று செல்போன் நம்பர் ஒன்றும் தரப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு போன் செய்தால் ஓட்டுக்கான பணம் உறுதி யாகிறது. காஞ்சிபுரத்தில் வீடு வீடாக கல்யாண பத்திரிகை கொடுக்கப்பட்டது. யாருக்கு கல்யாணம் என பிரித்துப் பார்த்தால், 500 ரூபாய் தாளில் காந்தி சிரிக்கிறார். அதிர்ந்த நீதிபதி! சென்னை அடையாறு பகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் ஒரு வீட்டின் கதவைத் தட்டி, இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்க என்றபடி 20 லிட்டர் பெட்ரோல் கூப்பனைக் கொடுத்திருக்கிறார்கள். வாங்கியவர் அதிர்ச்சியாகிவிட்டார். அவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு போன் செய்து கடுமையான குரலில் நிலவரத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கெல்லாம் அ.தி.மு.கவினர் அலட்டிக் கொள்ளவில்லை.

சவுக்கு :பல்முனை போட்டி,.....மே 19ல் தெள்ளத் தெளிவான முடிவு காத்திருக்கிறது.

இன்றோடு பிரச்சாரம் நிறைவடைந்தது.   பெரும் புயலடித்து ஓய்ந்தது போலிருக்கிறது.    இது வரை இருந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் இரைச்சல் அதிகமாகவே இருந்தது.    வழக்கமான இரு அணிகளுக்கிடையேயான தேர்தலாக அல்லாமல் இம்முறை பல முனை போட்டி இருந்ததே இதற்கு காரணம்.  போதாத குறைக்கு, திசைக்கு ஒரு புறம் இழுத்துச் செல்லும் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் குழப்பத்தை அதிகரித்துள்ளன.
ஒரு தேர்தலில் மக்களின் முன் உள்ள முக்கிய விஷயம்  இது வரை இருந்த ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கலாமா என்பதே.    1991 மற்றும் 2001 ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் இப்போதைய ஆட்சி அளவுக்கு இல்லை  என்றாலும், அப்போதும் மோசமாகத்தான் இருந்தது.   மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தின் பிடியில்தான் ஜெயலலிதா அப்போதும் இருந்தார்.

ஜெயலலிதா: : தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்.... ஆஹா ஒப்புதல் வாக்குமூலம்?

சென்னை: தமிழக மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பெற்றிருக்கின்ற அற்புதமான வாய்ப்பு தான் தேர்தலும், வாக்குப் பதிவும். தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வது ஒரு புனிதக் கடமை. ஜனநாயகத்தைக் காப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும் நாம் செய்து கொள்ளுகின்ற மிகப் பெரிய புனிதச் செயலாகும். அரசியலில் தன்னுடைய வெற்றிக்காக, தன்னுடைய அதிகாரப் பசிக்காக சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுவதையும், அரசியல் ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும்
களங்கப்படுத்துவதையும், சூழலுக்கு ஏற்ப திரைக் கதை வசனத்தை அரங்கேற்றுவதையும் தமிழகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

BBC :பிரெஞ்சு பெண் அரசியல்வாதிகள் ஆண் அரசியல் வாதிகளுக்கு எதிராக போர்க்கொடி ..பாலியல் துன்புறுத்தல்கள் !

பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல்களை தொடர்ந்து அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.

கலைஞர் :திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி நேர்மையான வழியில் வந்ததில்லை !

திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? இதுவும் கன்டெய்னர்களில் தான் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதுவும் நள்ளிரவு 12.30 மணிக்கு
கேள்வி: திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாயை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்திருக்கிறதே?
Kalaignar Karunanidhi's photo. பதில் :- சிறுதாவூர் அரண்மனையில் இருந்த கன்டெய்னர்கள் பற்றி கடந்த மாதமே எல்லா ஏடுகளிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பியதாகவும், அதன்படி கன்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு உண்மையை மூடிப் புதைத்து விட்டார்கள். மாவட்ட ஆட்சியரோ, காவல் துறை கண்காணிப்பாளரோ சோதனையிடவே செல்லவில்லை என்பது தான் பிறகு வெளிச்சத்திற்கு வந்த செய்தி.

நடிகர் பார்த்திபன்: எனக்கு கண்டெய்னரில் கரண்ஸி அனுப்பவில்லை...NOTA-வுக்கு நான் பிரச்சாரம்...?

NOTA - என்பது ஒரு கட்சி அல்ல. அதற்கு கிட்டும் வாக்குகளை வைத்து அது ஆட்சி அமைக்க போவதும் இல்லை. ஆனால் அது நம் உண்மை உணர்வின் உன்னத வெளிபாடு ! கட்சிகளுக்கு கண்டபடி சின்னங்கள் உண்டு அவ்வோட்டு சீட்டில்.ஆனால் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரே சின்னம் NOTA தான். அது ஆட்சி அமைக்காது. ஆனால் அதன் எண்ணிக்கை ஆட்சியாளர்களை அச்சுறுத்தும். அடுத்த கட்சிக்காரர்களை கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய செய்யும். சுருக்கமாய் அது நம் சு'தந்திரச் சின்னம். யாரோ கொள்ளையடிப்பவர் ஆளட்டும் எனில் வெள்ளையனே ஆண்டிருக்கலாமே?
நம்மவர், நம்மில் ஒருவர், நம் உணர்வை உணர்ந்த உயர்ந்த ஒரு நல்லவர் ஆளவே, அதில் நம் உரிமைகளை ( மருத்துவமும் கல்வியும் சமமாய் தரமாய் ) பெற்று வாழவே சுதந்திரம் பெற்றோம்.
அது இன்று 10% நடந்தாலே 100% வெற்றி.
அப்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அவரவர் கருத்தை வெளியிடும் சுதந்திரம் நமக்கும் இருக்க வேண்டும்.

அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் சதா பயபக்தியுடன் அடிமைகளாகவே இருப்பார்கள்....சுயமரியாதை... அப்படீன்னா?

Tamilnadu Assembly Election News: உடைக்கப்பட வேண்டிய பிம்பம்உடைக்கப்பட வேண்டிய பிம்பம் ஜெயலலிதா படுமோசமான தோல்வியை சந்திப்பார் என, இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு கருத்துக் கணிப்பும் சொல்லவில்லை என்பது வியப்பூட்டும் விஷயம்தான், இல்லையா? இத்தனைக்கும் முழுக்க முழுக்கச் செயலற்று கிடந்த ஆட்சி இது. இது போதாதென்று, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சில காலம் சிறைக்கும் சென்று திரும்பினார் ஜெயலலிதா. இதற்கெல்லாம் சிகரமாக, பெருமழை ஒன்றும் பெய்து தமிழகத்தையே புரட்டிப் போடவும் செய்தது.

இறுதிச்சுற்றில் தி.மு.க... இன்னொரு வாய்ப்பு வருமா? vikatan


றுதிச்சுற்று, கழுத்தை அடையும் நேரம் இது! மாலையா... கயிறா... என்பது இன்னும் சில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஜெயலலிதா தக்கவைக்கப் போராடுகிறார் என்றால், கருணாநிதியும் ஸ்டாலினும் கைப்பற்றப் போராடுகிறார்கள்!
ஆறாவது முறை முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையில், 93 வயதில் நடுங்கும் கரங்களோடு ஊர், ஊராகப் பிரசாரம் போகிறார் கருணாநிதி. அப்பாவே இவ்வளவு உற்சாகம்காட்டுகிறார் என்றால், மகன் ஸ்டாலின் சும்மா இருப்பாரா? ஸ்மார்ட் யூத்தாகத் தன்னைக் காட்டிக்கொள்ள, வானவில்லின் எல்லா நிறங்களிலும் சட்டைபோட்டுக் கலக்குகிறார். யாரும் தன்னைக் கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதற்காக, ‘எனக்கும் 63 வயது ஆகிவிட்டது. ஆனாலும் இளைஞன் மாதிரி சட்டைபோட்டு வந்திருக்கிறேன் என்றால், உங்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான்’ என்கிறார். வெளியில் உற்சாகத்தைக் காட்டிக்கொண்டாலும், இரண்டு பேரிடமும் பதற்றம் தெரிகிறது.  அ.தி.மு.க போல, தி.மு.க ஒரு நபர் தலைமை கொண்டது இல்லை. ஏகப்பட்ட பிரசார ஸ்டார்கள், பீரங்கிகள், ஏகப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உண்டு. ஆனால், களத்தில் தென்படுவது எல்லாம் கருணாநிதி, ஸ்டாலின் முகங்கள் மட்டுமே. துடிப்புடன் களவேலை செய்யவேண்டிய கட்சியின் கடைநிலைப் பொறுப்பாளர்கள் ஒதுங்கியிருப்பது எதனால்? தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் இப்படிச் சொன்னார்...

இறுதிச்சுற்றில் அ.தி.மு.க... இலவசங்கள் எடுபடுமா? vikatan


தைத் தூக்கி வீசினால் எது கவ்வும் - கவ்வினால் வாழ்நாள் முழுக்க வாலை ஆட்டும் என்பது அனைத்து அரசியல்வாதி களுக்கும் அத்துப்படி. அதில் ஜெயலலிதா முதல் படி! மாயாவியின் மந்திரக் கம்பளத்துக்குள் என்ன மர்மம் இருக்கிறது என அறிய முடியாததுபோல, அம்மாவின் தேர்தல் அறிக்கையும் இந்த முறை உலக ரகசியமாக ஊறவைக்கப்பட்டிருந்தது. ஆளுக்கு முன்னால் தேர்தல் அறிக்கை அம்புவிடக்கூடிய ஜெயலலிதா இந்த முறை தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அதை வெளியிட்டார்.
‘மக்களுக்காக நான்... மக்களால் நான்...’ என தமிழ்நாட்டு மக்களுக்காக 18 மணி நேரம் உழைக்கின்ற ஜெயலலிதா - ‘ஓர் அம்மாவுக்குத்தான் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்’ என்கிற அக்கறையுள்ள ஜெயலலிதா - ‘தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்றே சதா யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ எனச் சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா - ‘நான் சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்துள்ளேன்’ எனக் கம்பீரமாகச் சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா - இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா - ஏற்கெனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா - தமிழ்நாட்டு மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகள்...

நக்கீரன் இன்றைய கணிப்பு: திமுக133, அதிமுக75, பாமக 1, ம ந கூட்டணி 1, இழுபறியில் 24 தொகுதிகள்


பல அணிகள்.. சிதறும் வாக்குகள்.. அதிருப்தி நிலவினாலும் அதை வெளிப்படுத்தாத அமைதி மனநிலை என கடுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது 2016 சட்டமன்றத் தேர்தல் களம்.மக்களின் ஆதரவு யாருக்கு என்பதைக் கண்டறிவது சவாலாக இருந்த நிலையில், நக்கீரன் சர்வே படை களமிறங்கியது. ஒரு தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என 234 தொகுதிகளிலுமாக 46ஆயிரத்து 800 பேரை சந்தித்தோம். இவர்களில் சரிபாதி பெண்கள்.<புதிய-இளம் வாக்காளர்களான 18 வயது முதல் 25 வயது உடையவர்களை ஒரு தொகுதிக்கு 40 பேர் என சந்தித்தோம். இவர்களிலும் சரிபாதி பேர் பெண்கள். இதுபோல ஆண்-பெண் விகிதம் சரிசமமான அளவில் 26 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் தொகுதிக்கு 140 பேர். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 20 பேர் என்ற அளவில் நக்கீரன் சர்வே படை தனது கருத்துக் கணிப்பை மேற்கொண்டது.விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் எனப் பல தரப்பட்ட மக்களும் இதில் அடங்குவர்.