செவ்வாய், 22 டிசம்பர், 2015

மாநிலங்கள் அவையில் சிறார் குற்ற சட்டம் நிறைவேறியது . ராகுல்காந்தியிடம்...ஜோதி சிங்கின் பெற்றோர்

பிந்திய செய்தி:  மாநிலங்கள் அவையில் சிறார் தண்டனை மசோதா நிறைவேறியது, Under the new law, those in 16-18 age group will be be examined by Juvenile Justice Board to assess if crime was committed as child or adult.:மாநிலங்களவையில், சிறார் சட்ட திருத்த மசோதா மீது இன்று நடைபெற்று வரும் நிலையில், அவை நடவடிக்கைகளை கவனிக்க நிர்பயா பெற்றோர் மாநிலங்களவைக்கு வருகை தந்துள்ளனர். சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வதின் மூலம், கொடூர குற்றங்கள் புரியும் 16-18 வயதுடையவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்த முடியும்.

10 லட்சம் ..அகதிகள் போர்வையில் இஸ்லாமிய....ஐரோப்பிய மக்கள் விசனம்


கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. Image caption ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர். bbc.தமிழ்.com

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....சிம்பு அனிருத் பாட்டால் நொந்துபோனவர்களுக்கு ஆறுதல்


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (13.4.1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர்,நடனக்காரர், உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 15-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது. இந்த பாடலில் படத்தின் கதையையே  மிகவும் அழகான கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார் பட்டு கோட்டையார் .இவரல்லவோ கவிஞர்.

அனுஷ்கா சருமா :100 கோடி வசூலை குறி வைப்பதால் நல்ல படங்களே வருவதில்லை....

அழகான நடிகை அனுஷ்கா சருமா கோபத்தில் கொதிக்கிறார். திரையுலகில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே பெரும் பாகுபாடு
காட்டப்படுகிறது, பெண்கள் வெறும் அழகுப் பொம்மைகளாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்பது அனுஷ்காவின் ஆத்திரத்துக்குக் காரணம். ‘‘சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது. நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறது? இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்’’  என்று சீறித் தள்ளுகிறார், அனுஷ்கா.

16 வயது சிறுவனையும் தண்டிக்க சட்டம்...டெல்லி மேல்–சபையில் இன்று விவாதம்

புதுடெல்லி கொடிய குற்றங்களுக்காக 16 வயது சிறுவனையும் விசாரிப்பதற்கான திருத்தத்துடன் கூடிய இளம் குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு குவிகிறது. டெல்லி மேல்–சபையில் அம்மசோதா இன்று விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரிக்கலாம் டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, டெல்லி மேல்–சபையில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம்.

தமிழகம், கேரளா, மே.வங்கம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல்.....ஆணையம் திட்டம்

டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக சட்டமன்ற தேர்தலை தாமதமாக நடத்த சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் அட்டவணையை மாற்றும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகிற நிலையில், விரைவில் வாக்கு இயந்திரங்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. Tamil Nadu, Kerala, West Bengal and Assam polls in April-May இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஜவடேகர் : கனமழை பெய்யும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டது ...மாநிலஅரசு.......?

கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது: பிரகாஷ் ஜவடேகர்
நாட்டில் நிலவும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு வெள்ளம் ஏற்படப்போகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தோல்வியால் 400 உயிர்களை இழந்துள்ளோம். 

திங்கள், 21 டிசம்பர், 2015

நேபாள பெண் கற்பழித்து கொலை! 7 பேருக்கு தூக்குத் தண்டனை ஹரியான மாநிலத்தில்

சண்டீகர்: ஹரியான மாநிலத்தில் மனநலம் பாதித்த நேபாளப் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கு ரோதக் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒரு பெண் ஹரியாண மாநிலம் ரோக்டெக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோதக் போலீசில் புகார் செய்தனர். 7 get death for gangrape and murder of nepal woman in Rohtak ஆனால், 4-ந்தேதி ரோதக் அருகில் உள்ள பாகு அக்பர்பூர் கிராமத்தில் ஒரு வயலில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது.

கரகாட்டகாரி தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் ..இளங்கோவன் மீது புகார் ...மாதர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை அவதூறாக பேசியதற்காக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கமிஷனர் ஆபீசில் புகார் மனு அளித்தனர். பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கரகாட்டக்காரி, பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார் இளங்கோவன். பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார்

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு..மோடியிடம் ஆதரவு கோரும் கெஜிரிவால்

டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை அமல்ப்படுத்த மோடியிடம் ஆதரவு கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம்.

சிம்பு -அனிருத்துக்கு பாதுகாப்பு.....கோவன் பாட்டுக்கு தேசதுரோக வழக்கு...இதுதான் மேட்டுக்குடி வாழ்வியல்

protest-against-simbu-aniruth-3
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது
செக்ஸ் பாடகன் சிம்புவையும் பக்கவாத்தியம் அனிருத்தையும் கண்டிக்கும் வகையில், தி,நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டின் முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில், தோழர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது, அதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
சிம்புவின் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு வழிகள் இருந்ததால் காவல் துறை நம்மிடம், “மேடம் எந்த இடத்தில் பண்ண போறீங்க, நாம ஒரு understand-ல் பண்ணலாம்.” என்று சரியான இடத்தை சொல்ல சொல்லி காலையில் இருந்தே தொந்தரவு பண்ண தொடங்கி விட்டார்கள்.

விஜயகாந் யாரோடு......கணக்கு கணக்கு கணக்கு பார்த்தவண்ணமே உள்ளார்

வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, பிரதான கட்சிகளான, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்வர் காட்டி வருகின்றனர். அதனால், கூட்டணியில் சேரும்படி, அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகின்றனர்.ஆனாலும், தொகுதி பேரத்தை அதிகரிக்கவும், முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை உறுதி செய்யவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதால், கூட்டணி தொடர்பாக வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது; விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனாலும், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாமல் வெளியேறினார்.   இவரு ஏதோ பெருசா புரட்டுவார்னு எல்லாரும் நம்புறாய்ங்க ஆனா நானு நம்பல்ல இவரு இன்னொரு டம்மியாதான் .....

இந்த ஆண்டுதேர்வுகளை ரத்து செய்யவும் .கலைஞர் கோரிக்கை : மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை விபரம் : ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறை.
கேள்வி :- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இழந்து, பல நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்திருக்கிறார்களே?

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஜல்லிகட்டில் நடிகை எமி ஜாக்சன் சிக்குவாரா? ஏனிந்த வில்லங்கம்?

எமி ஜாக்சனுக்கு தமிழ்நாட்டு விபரம் ஒண்ணுமே புரியல்ல. ஜல்லிகட்டுக்கு
எதிராக பெடா அமைப்பு கையெழுத்து வேட்டை ஆரம்பித்து உள்ளது. இதில் நடிகை எமியும் ஆதரவு கையெழுத்து போட்டு உள்ளார் . பல நட்சத்திரங்கள் பாய்ந்து பாய்ந்து கையெழுத்து போட்டு தங்கள் ஜீவகாருநியத்தை பறைசாற்றி வருகிறார்கள் .ஜல்லிகட்டுக்ககவே வீரலட்சுமி இயக்கத்தை நடத்தி வருபவர்கள் எமியின் எந்திரன் படத்துக்கு ஆப்பு வைக்க கூடிய சாத்தியகூறுகள் உள்ளது, அய்யா பாவம் மாட்டிக்க போறாங்களே?

கலைஞர்: GATT காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதீர்!

சென்னை:'உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.   கலைஞர் சொல்லுவதில் இருக்கின்ற உள் அர்த்தங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,எப்பொழுதும் அவர் எது சொன்னாலும் கேலி பேச ஒரு கூட்டம் இங்கே இருக்கின்றது, அவர்களுக்கு இங்கே நல்லது நடப்பதை விட அந்த நல்ல கார்யங்கள் இவரால் நடந்துவிட கூடாது என்று இந்த கூட்டங்களின் குறிகோள். கலைஞர் எப்பொழுதும் மாணவர்களின் நலனின் அக்கறை உள்ளவர் அதனால் தான் சமச்சீர் கல்வி, இலவச பஸ் பாஸ் என்று மாணவர்களுக்கு கொடுத்தார், இங்கே கேலிபேசும் கோமாளிகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை, தெரிந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் இல்லை.

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு ஆரம்பம்: சென்னை முழுவதும் விரைவில் இடிப்பு?

10000.20000. மட்டும் சம்பளம் வாங்கும் நாங்கள் , சட்டத்திற்கு பயந்து, 20 , 30 கி மீ. தள்ளி , approve ஆன இடத்தில , கடன் வாங்கி , ஒரு வீடு கட்டுகிறோம் . தினமும் 4 மணிநேரம் போக வர பயணித்து, கஷ்டபடுகிறோம். இப்போதும் வெள்ளத்தில் கஷ்டபடுகிறோம். ஆனால், சென்னையில் நடுவில் ஆக்ரமிப்பு செய்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நல்லபிள்ளைகளாகி , சலுகைகளையும் வாங்கி கொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எல்லோரும் வக்காலத்து வாங்குகிறார்கள். சட்டத்தை மதிக்கிறவன் பைத்தியக்காரன், மிதிக்கிறவன் புத்திசாலி. ஆக்ரமிப்பு செய்தவர்களை தயவு தாச்சனியம் பார்க்காமல் வெளியேற்றவும். மேலும் மீண்டும் அவர்கள் அங்கு வந்தால், தண்டனை கொடுக்கவும். ஆக்ரமிப்பால் அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள். 
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, ரகசிய கணக்கெடுப்பை, நீர்வளத் துறை துவங்கியுள்ளது.  இதிலும் லஞ்சம் இடம்பெறும் சாத்தியம் தாரளமாக உண்டு

டெல்லி பலாத்கார கொலையாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டுவிட்டான்..அவனது உயிருக்கு ஆபத்தாம்...ரகசிய இடத்தில்...

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா( ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. விடுதலையை எதிர்த்து நிர்பயாவின் பெற்றோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், இளம் குற்றவாளி, ரகசிய இடத்திலிருந்து விடுவிக் கப்பட் டுள்ளார். இவர், ஒரு தனியார் அமைப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வந்த நிர்பயாவின் பெற்றோர் திடீர் என்று கைது செய்யப் பட்டனர். இதைக்கண்டித்து பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்
செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளி இன்று (20.12.2015) விடுதலையாகியுள்ளார்.

அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு

டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்துவருகிறது. இந்த பின்னணியில் சமீபத்தில் அகதிகள் தொடர்பான புதிய சட்டமசோதா ஒன்றை டென்மார்க் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி, அகதிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதனை செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. bbc.தமிழ்.com

இனி இந்தியா மத/ஆகம சார்புள்ள நாடு ?ஆகம விதி என்பது ஆரிய மாயை!

சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள்
 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
- இதை எழுதினது சிவனென்றும்
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று என் அறிவிற்கு சுட்டிக்காட்டிய தமிழ்ப் பெருங் கடலே ன்னு அவ்வைப்பாட்டி முருகனைப் பார்த்துப் பாடினார் என்றும் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.
இப்படி தமிழில் விளையாடிய அப்பாவும் மகனும் சமஸ்கிருதம் கற்றது எப்போது? இவர்களிருவரும் சமஸ்கிருதம் கற்றதாக எந்த இலக்கியத்திலும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால் இவர்களுக்குப் புரியுமா?  சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறார்கள். இந்துக்களே உங்களுக்கு இந்து சமயத்தில் என்ன இருக்கிறது? பாப்பானுக்கு எல்லாம் இருக்கிறது ..

ஜெயலலிதா : உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன், எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான்

சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். Jayalalithaa's heart touching speech to Tamil people மிக உருக்கமாக அமைந்துள்ள அந்த உரையில், "வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்: கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு.  இந்தம்மாவை  இன்னுமா நம்புறாங்க?  ......ஆனால் இயங்கியல் தத்துவம்னு ஒண்ணு இருக்கே? எந்த பெரிய சர்வாதிகாரியும் கம்பி எண்ணிதானே தீர வேண்டும்?  அம்மணீ உங்களுக்கு ஏன் இத்தனை பேராசை? 

எங்கே தேடுவேன் அவனுகளை எங்கே தேடுவேன்....சிம்பு அனிருத் வலைவீசும் போலீஸ்

கேமிராவுக்கு முன்னால்… அல்லது ஏதாவது ஸ்டுயோவில் அட்டைக் கத்தியை, டம்மி துப்பாக்கியை வைத்துக் கொண்டு பஞ்ச் வசனம் முழங்குவதும், நேரில் ட்ரவுரைப் பிடித்தபடி ஓடி ஒளிவதும் சினிமாக்காரர்களின் வழக்கம். பீப் பாட்டால் பிராப்ளமாகி நிற்கும் சிம்புவும் அனிருத்தும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.
“இனி மறைக்க ஒன்றுமில்லை.. சட்டத்தைச் சந்திப்பேன்..” என்றெல்லாம் முழங்கிய பீப் பாய் சிம்பு, இப்போது வீட்டிலேயே இல்லை. எங்கிருக்கிறார் என்ற தகவலும் இல்லை.
அதாவது தலைமறைவு வாழ்க்கை.
இன்று அவர் கோவை போலீஸ் முன்பு ஆஜராகியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஒருபக்கம் வீராவேசமாக அறிக்கை விட்டுக் கொண்டே, மறுபக்கம் வக்கீல்கள் மூலம் முன்ஜாமீன், வாய்தா என அழுகுணி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் சிம்பு.மகளிர் அமைப்புக்கள் மட்டுமல்ல மொத்த தமிழகமே உண்மையில் கடும் கோபத்தில் தான் உள்ளது,

Delhi ஜோதி சிங் வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்படமாட்டான்... நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தில் மனு !

SC accepted r petition. Matter listed on Monday as Item No 3. Case subjudice now. Nirbhaya rapist should not be released until case heard.
டெல்லி: நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலையை எதிர்த்து டெல்லி மகளிர் அணி ஆணையத் தலைவி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஜோதிசிங் என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார். delhi filled petition to stay juvenile release

பவானி சாகர் அணையில் இருந்து அம்மாவின் ஆணைப்படி இன்று தண்ணீர்....என்ஜினீயர்கள் ஆணைப்படி அல்ல ...

சென்னை : பவானி சாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை - ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை,தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டுபகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறுவேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர்அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போகபாசனத்திற்கு இன்று 20.12.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான்ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம்,அந்தியூர், பவானி மற்றும் ஈரோடு வட்டங்களில் உள்ள 40,247 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தினமலர்.com

தொடங்கட்டும் சமூகநீதிப் போர் ! பேராசிரியர் சுப.வீரபாண்டியன் முழக்கம்!

அரசு நீதியை நிலைநாட்டத் தவறுமேயானால், சமூகநீதி கோரி ஒரு சமூகப் போரை அறவழியில் நாம் அனைவரும் தொடங்க வேண்டும். சட்ட வழியிலான போர் முடிந்துவிட்டது. சமூகப் போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது   இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அட்டவணைச் சாதியினரின் சமூக,கல்வி,  பொருளாதார மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் ஆணையம், 1969 ஆம் ஆண்டு, சமூகநீதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்தது. சாதி இழிவை ஒழித்திட, தாழ்த்தப்பட்ட மக்களோடு 26.01.1970இல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தந்தை பெரியார் அறிவித்திருந்தார்.


இச்சூழலில், அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை 02.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார். 1971 சனவரியில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகியது. எனினும், சேஷம்மாள், எத்திராஜ் ஜீயர் உள்ளிட்ட 12 பேர் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக, அது முடங்கிப் போயிற்று.

பாஜகவின் நஷனல் ஹெரால்ட் வழக்கு பூமராங்காக சு.சாமியையும் பாஜகவையும் பதம் பார்க்கிறது

காங்கிரஸ் தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கை, அரசியலுக்கான மைலேஜாக பக்காவாக பயன்படுத்திவிட்டனர். நேஷனல் ஹெரால்ட் வழக்கை முற்றிலும், ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினையாக மாற்றுவதில் இன்று காங்கிரஸ் முழு வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். National herald case: Congress getting political mileage கோர்ட்டில் இன்று மதியம் 3 மணிக்கு சோனியா, ராகுல் ஆஜராகும் முன்பாகவே, குலாம் நபி ஆசாத், கார்கே போன்ற காங். மூத்த புள்ளிகள், செய்தியாளர்களை சந்தித்து, இவ்வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தனர். காங்கிரசார் ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தி தங்கள் பங்குக்கு ஹைப் ஏற்றினர்.பாஜகவின் இதே தந்திரத்தைதான் கனிமொழிக்கும் ராசாவுக்கும் எதிராக பார்பன பனியாக்கள் பயன்பத்தினர். சிபியை மத்திய அரசின் மாமாவாக வேலை பார்த்தது.