திங்கள், 17 பிப்ரவரி, 2014

ஆம் ஆத்மி 49 நாள் ஆட்சி ! கேஜ்ரிவால் தலைப்புகளில் அடிபட்டதைத் தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை

கேஜ்ரிவால்

டவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்கு கருணை காட்டுங்கள், வழி நடத்துங்கள் என வேண்டிக் கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களை தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.”
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால்
பதவியை ராஜினாமா செய்த சமயத்தில் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையின் ”பினிசிங் டச்சப்” தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் ராஜினாமாவும் அவரது சத்யாவேசம் பொங்கும் உரையும், அதன் இறுதியில் சென்டிமென்டலாக ஒரே போடாக போட்டுத் தாக்கியிருப்பதும் அவரது டி.ஆர்.பி ரேட்டிங்கை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்ளிலும் முதலாளித்துவ ஊடகங்களிலும் நடந்த விவகாரங்கள் குறித்த விவாதங்களில் கேஜ்ரிவாலின் மேல் பகுத்தறிவற்ற ஒரு பச்சாதாப உணர்ச்சி மேலோங்கி வருகிறது.
தில்லி தேர்தலில் 28 இடங்களை வென்று காங்கிரசின் தயவோடு ஆட்சியில் அமர்ந்த கேஜ்ரிவால், துவக்கத்திலிருந்தே தில்லி மக்களின் அன்றாட சவால்களைத் தீர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.  அதனால்தான் இந்த 49 நாட்களில் தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை எப்படியெல்லாம் ஏற்றுவது என்பதில் தான் அவரது கவனம் இருந்தது. இலவச குடி நீர் மற்றும் மின் கட்டண அறிவிப்பை நெருக்கமாக அலசிப் பார்த்தாலே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

மத்திய இடைக்கால பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்


 மக்களவையில் 2014-15-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.
புதிய வரிவிதிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட்டில், உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக, கார்கள், இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன்கள், டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும்.
நாட்டின் பொருளாதார நிலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அடுத்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்குப் பின், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா திகழும் என்று பட்ஜெட் உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய திமுக ! முகத்தில் அறைந்தது போல் எதிரிகளை அசர வைத்த திருச்சி மாநாடு


சென்னை: இனி அவ்வளவுதான்.. முடிவுரை எழுதப்படுகிறது என்றெல்லாம் திமுகவை நோக்கி முன்வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி தமிழக அரசியல் களத்தை தகிக்கவும் இதர கட்சிகளை தவிக்கவும் வைத்திருக்கிறது அந்தக் கட்சியின் திருச்சி மாநாடு. ஸ்பெக்ட்ரம் ஊழல், காங்கிரஸுடன் ஊசலாட்டமான உறவு, உட்கட்சி பூசல், பலமற்ற கூட்டணி ஆகியவற்றால் லோக்சபா தேர்தலில் பலத்த தோல்வியைத் தான் திமுக சந்திக்கும் என்பது கருத்து கணிப்பு வெளியிட்ட ஊடகங்களின் முடிந்த முடிவாக இருந்தது. இந்த நிலையில்தான் திருச்சியில் திமுகவின் "திருப்புமுனை" மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆண்களுக்கு ரூ.50, பெண்களுக்கு ரூ.30 என தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த கட்டண அறிவிப்பை கண்டுகொள்ளாமல் பல லட்சக்கணக்கானோர் 2 நாள் மாநாட்டில் வெள்ளமென திரண்டு "யாருக்கு முடிவுரை?" என முகத்தில் அறைந்தார்போல் அரசியல் எதிரிகளை அசர வைத்திருக்கின்றனர் திமுக தொண்டர்கள்

ராதிகா தேர்தலில் போட்டியிடுகிறார் ? ஜெயா பஜனை கோஷ்டி ஜோதியில் ஐக்கியம் ஆகிறார்

ராதிகா சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுவதாகத் சரத்குமார்  தெரிவித் தார்.
கூட்டணிக்காக பேரம் பேசுகிறார் விஜயகாந்த்” என்று, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாட்டில் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:
விஜயகாந்த் இறைவனுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார். ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது, டெல்லியில் சென்று போட்டியிடுகிறார். இவர் வித்தியாசமான அரசியல்வாதி.
இப்போது டெல்லியிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வந்திருக்கின்றன. யாரும் அவரைச் சீண்டமாட்டார்கள். சீண்டுவதாக நினைத்துக் கொண்டி ருக்கிறார். அதிமுக ஆதரவுடன் வெற்றிபெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார் விஜயகாந்த். அவருக்குத் தேவை பணம். 20 சீட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார். அம்மணீ நீண்ட காலமாகவே இன்டலெக்சுவல் வேஷம் போட்டு தற்போது வெளிறி வெளியே வந்துள்ளார் 

சென்னை IIT ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் கூச்சல் !

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி (IIT for Society) என்ற மாணவர்களது கூட்டமைப்பானது ‘மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்’திற்கான கருத்தரங்கு ஒன்றை கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி, சென்னை) நடத்தியது. குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற மனித உரிமை அமைப்பின் செயலர் தீஸ்தா சேதல்வாத் இதில் கலந்து கொண்டு ‘மனித உரிமைகளும், சமூக அமைதியும்’ என்ற தலைப்பில்  சென்னை ஐஐடியில் உள்ள மைய விரிவுரை அரங்கில் உரையாற்றினார். 2002 குஜராத் கலவரத்திற்கு காரணமான இந்துமதவெறியர்களை நீதிமன்ற வழக்குகள் மூலம் வெளியுலக கவனத்திற்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெரும் வெறுப்புடனும், சினத்துடனும் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி – தீஸ்தா

இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.

கடல் வளம் அழிக்கும் தரகு முதலாளிகள்! கைக்கூலிகளாக நிற்கும் அரசு அதிகாரிகள்!
இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, தொடங்கியிருக்கிறது நாட்டுப்படகு மீனவர் போராட்டம்!
மனிதனின் முதல் உணவு மீன் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலும் அவ்வளவாக மாறாத ஒரு உணவு வகை உள்ளதென்றால் அது மீனுணவாகத்தான் இருக்க முடியும். விதவிதமான மீன்களை விதவிதமாகச் சமையல் செய்து ருசித்து உண்ணும் மக்களில் பெரும்பாலோர் மீனவரின் வாழ்நிலை குறித்து சாதாரணமாகக் கூடச் சிந்திப்பதில்லை. எல்லாத் தொழிலாளிகளின் நிலையினைப் போலவேதான் மீன்பிடித்தொழிலாளர்களின் அவலநிலையும் உள்ளது.
மீன்பிடித்தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, சிறிய அளவுகளிலான நாட்டுப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். இரண்டு, பெரிய அளவிலான மோட்டார்களைக் கொண்டு இயக்கப்படும் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். தொடக்க காலங்களில் கட்டுமரங்கள் மூலமாகவே மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். அதன் பின்னர் கட்டுமரமானது சிறிய படகுகளானது. இதைத்தான் நாட்டுப்படகுகள் அல்லது வல்லம் என்று அழைக்கிறார்கள்; அதன் பின்னர் இப்படகுகளில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டது.

ப. சிதம்பரம் மீது ஷூ வீசிய குண்டனுக்கு சீட் கொடுத்த ஆம் ஆத்மி ! ஜர்னைல் சிங் வேட்பாளர்

டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் மீது ஷூவை வீசிய பத்திரிக்கையாளருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி சீட் கொடுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்தி நாளிதழ் ஒன்றின் சார்பில் வந்திருந்த பத்திரிக்கையாளரான ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது ஷூவை வீசினார். சிதம்பரம் நகர்ந்து கொண்டதால் ஷூ அவர் மீது படவில்லை. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ப. சிதம்பரம் மீது ஷூ வீசியவருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்த ஆம் ஆத்மி ப.சிதம்பரம் மீது ஷூவை வீசியதற்காக நான் வருத்தப்படவில்லை என்று ஜர்னைல் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் ஷூ வீசிய குண்டன்  ஜர்னைல் சிங்கின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

தஞ்சையில் தொடங்கியது பனிப்போர்! டி.ஆர்.பாலுக்கு ஸ்டாலின் ஆதரவு; பழனிமாணிக்கத்துக்கு கனிமொழி ஆதரவு

தஞ்சை தொகுதியில் திமுக சார்பில்
போட்டியிட முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலா ளருமான பழனி மாணிக்கத்தை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு “ஓவர் டேக்” செய்துவிட்டதாக உறுதிப் படுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன.
தஞ்சையின் சிட்டிங் எம்.பி.யான பழனிமாணிக்கம் இங்கு எட்டு முறை போட்டியிட்டு ஐந்துமுறை ஜெயித்து இரண்டுமுறை அமைச்சராகவும் இருந்தவர். இம்முறையும் நமக்குத்தான் சீட் என நினைத்தார். ஆனால், இவருக்குப் போட்டியாக சொந்த ஊர்ப்பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பாலுவின் பார்வை தஞ்சைப் பக்கம் திரும்பிவிட்டது. மாவட்டக் கழகத்தை தாண்டி தஞ்சை மீது இவர் காட்டும் கரிசனத்தால் எரிச்சலடைந்த பழனிமாணிக்கம், பாலு செய்வதெல்லாம் சரிதானா? என தலைமையிடமே நியாயம் கேட்டார். இதையடுத்து இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்துவைத்தார் கருணாநிதி. இதனால், தனது நடவடிக்கைகளை கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டார் பாலு.

டில்லியில் பொங்கிய தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதுஉட்பட, மாநிலத்தின் பல பிரச்னைகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் மனுஅளிக்க, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 20 பேருடன், கடந்த, 13ம் தேதி, டில்லி சென்றார் விஜயகாந்த். அவருடன், விஜயகாந்தின் மனைவி, பிரேமலதா, மைத்துனர், சுதீஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.டில்லி சென்ற விஜயகாந்த், எம்.எல்.ஏ.,க்களை எல்லாம், தமிழ்நாடு இல்லத்தில் தங்கும்படி கூறிவிட்டு, அவர் மட்டும் மனைவி மற்றும் மைத்துனருடன், நட்சத்திர ஓட்டலில் தங்கினார். மறுநாள், எம்.எல்.ஏ.,க்களுடன், பிரதமரை சந்தித்த விஜயகாந்த், அதன்பின், ஓட்டலுக்கு சென்று விட்டார்.
பிரதமரைச் சந்திக்க, டில்லி செல்வது குறித்து, தகவல் ஒரு நாள் முன்னர் தான், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கட்சித் தலைமை உத்தரவு என்பதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த, பல வேலைகளை ஓரங்கட்டி விட்டு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும், டில்லி சென்றனர்.தமிழ்நாடு இல்லம்  இவரையும் தலைவராக மதித்து ஒரு கூட்டம் அலைகிறதே ??? எல்லாம் பணத்திற்காக தான் ??

இந்த செய்தி உண்மையோ , பொய்யோ ஆனால் ஒரு சந்தேகம். தேர்தல் வரும் நேரத்தில்... மன்மோகன் சிங் பதவி காலம் முடியும் நேரத்தில் அவரிடம் சென்று விஸ்கி காந்த் ஏன் மனு கொடுக்கிறார்? இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார் ??? அய்யோ இவரோட அட்டுழியம் தானகவே முடியவில்லை...

திருச்சி தி.மு.க மாநாடு அ.தி.மு.க.,வினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம்?

லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், -புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணியில், விஜயகாந்தின், தே.மு.தி.க.,வை சேர்க்க, கருணாநிதியுடன், அவரது கட்சியினரும், தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பிடிகொடுக்காமல்ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த், இதற்கு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார்.

யுவனின் மூன்றாவது மனைவி? சினிமாக்காரர்கள் மதம் மாறுவது பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது.

கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த 01-01-2014 அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட காட்சிகள்…

யுவன்  தாடி வளாக்கிறார். யுவன்   அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்திருக்கும்  பெண்தான்  யுவனின்  மூன்றாவது மனைவியா?  (அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்)

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?

ஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அஞ்சாநெஞ்சர் அஞ்சாமல் இருக்கிறார் !

தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அதனால், திருச்சியில், நேற்றும், நேற்று முன் தினமும் நடந்த, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டிற்கு, அழகிரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும்அழைப்பிதழ் எதுவும் அனுப்பப்படவில்லை.திருச்சியில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, நேற்றும், நேற்று முன் தினமும் ஆரவாரமாக நடந்து, அதில், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணி தலைவர்கள் எல்லாம், ஸ்டாலின் புகழ் பாடிக்கொண்டிருக்க, மதுரையில், அவரது அண்ணனும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, தென் மண்டல அமைப்புச் செயலருமான, அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், தொலைக்காட்சி யில், தி.மு.க., மாநாட்டு நிகழ்ச்சிகளை அமைதியாக கண்டு களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது..

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சந்திரா: இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா வசீகரிக்கிறார்

பிரபல கன்னடப் பெண் இயக்குனரான ரூபா ஐயர் இயக்கியிருக்கும் சந்திரா இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு பெண் மனத்தின் வெளிப்பாடாக உருவாக்கி உள்ளது
அரசாங்கம் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருக்கும் அரண்மனையில் வசிக்கிறது மைசூர் இளவரசியான சந்திரவதியின் (ஸ்ரேயா) குடும்பம் (படத்தில் காட்டப்படும் அரண்மனையை வைத்து, ஒரு வசதிக்காக மைசூர் ராஜவம்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்). அரண்மனை குருவின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (அறிமுகம் பிரேம்குமார்) இளவரசி சந்திரவதி இருவருக்கும் கண்டதும் காதல். பாரம்பரியக் கலைகள், ஆயுர்வேத மருத்துவம், மரபுக்கவிதை என்று கலாச்சாரத்தில் ஊறியவனாக இருப்பதால் சந்திரஹாசனைச் சந்திராவுக்குப் பிடிக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியவனாக இருக்கும் மற்றொரு அரச குடும்பத்து வாரிசான ஆர்யாவுக்கு(கணேஷ் வெங்கட் ராம்) சந்திராவை நிச்சயம் செய்கிறார்கள். சந்திரா - சந்திரஹாசன் காதல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது.

திமுக நிபந்தனை: சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு ! கூட்டணியில் இணைய கட்சிகளுக்கு ....

சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மட்டுமே தமது கட்சித் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று திருச்சி மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10-வது மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய கருணாநிதி பேசியது:
"நான் எத்தனையோ மாநாடுகளில் பங்குபெற்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த மாநாட்டிலே கே.என்.நேரு ஆற்றிய பணி, வியப்படையும் அளவில் இருந்தது. அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவரை நான் பாராட்டுவது என்பது என்னையே நான் பாராடுவது போன்றதாகிவிடும். இந்த மாநாட்டின் வெற்றிக்குக் காரணமே கே.என்.நேருதான்.
மிக முக்கிய காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்கள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முந்தினம் மாலை தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் ராஜினாமாவிற்கு வெளிப்படையான காரணமாக லோக்பால் மசோதா நிறைவேற்ற மறுப்புக் கூறப்பட்டாலும், அம்பானி சகோதரர்களின் குடைச்சலே முக்கியக் காரணம் என்றத் தகவலும் நிலவுகிறது. இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பானி குறித்து காரசாரமான கருத்தை வெளியிட்டுள்ளார் கெஜ்ரிவால்.

தேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை: இல.கணேசன்


பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தே.மு.தி.க. எம்எல்ஏக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை மத்திய அரசு பிரச்சனைகளுக்காக அவர் அணுகி இருந்தாலும் பிரதமரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி மாதிரிதான். அவரால் தபால்களை டெலிவரி செய்யத்தான் முடியும்.
நரேந்திர மோடி அலையை பயன்படுத்தி ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம். வருவார்கள் என்று நம்புகிறோம். பா.ம.க.வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். nakkheeran.in

பாடசாலை அதிபரின் பேச்சினால் தற்கொலை செய்த மாணவி ஒரு அற்புத நடனக் கலைஞர் ஆவார்.


குருணாகலை சேர்ந்த  பாடசாலை மாணவி  ஒருவரை  தற்கொலைக்கு  இட்டு சென்ற  பேஸ் புக் புகைப்படம் தற்போது வெளியில் தெரிய வந்து உள்ளது.
மாணவி வெனுஷா இமந்தி பண்டார பேஸ் புக்கில் இப்படம் பிரசுரிக்கப்பட்டமையை அடுத்து குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலய அதிபரால் கடுமையாக திட்டப்பட்டு இருக்கின்றார்.
வெனுஷாவுடன் முன்பு காதல் தொடர்பு வைத்திருந்த பையனால் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்தது. ஆயினும் இருவருக்கும் இடையிலான காதல் முடிவுக்கு வந்திருந்த பிற்பாடே புகைப்படத்தை பையன் பதிவேற்றி இருந்தார்.
பாடசாலை அதிபர் சமன் இந்திரரட்ண மாணவியை அழைத்து இப்புகைப்படம் சம்பந்தமாக துஷ்பிரயோக வார்த்தைகளால் நீண்ட நேரம் திட்டி இருக்கின்றார்.

Drகிருஷ்ணசாமி: பேச வாய்ப்பில்லாத அதிமுக அரசில் இருந்து என்ன பயன் ?

திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு எடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவுக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் எந்தவித உள்நோக்கமும் இல்லை. சுயநலமும் இல்லை. 

ராமதாஸ் பாணியில் எல்லோருடனும் பேரம் பேசி மானம் போச்சு ? ஏமாற்றத்துடன் திரும்பும் விஜயகாந்த் !



பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலை என்ன? என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருக்கிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க. ஆகிய 3 கட்கிளும் போட்டா போட்டி போட்டன. ஒவ்வொரு கட்சியிடமும் ஒவ்வொரு விதமான நிபந்தனைகள் விதித்து பிடி கொடுக்காமல் நழுவி வந்தார்.
இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுடன் பேசுவதை நிறுத்தி விட்டன. இந்த நிலையில் கட்சி எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக பிரச்சினைகளுக்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர், விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் இளைஞர் அணி தலைவருமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் ஓரு ஓட்டலிலும் எம்.எல்.ஏக்கள் மற்றொரு ஓட்டலிலும் தங்கி இருக்கிறார்கள். ராமதாஸ் பாணியில் எல்லோருடனும் பேரம் பேசி மானம் போச்சு

ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட் இயக்கம் ! சுப்பிரமணியசாமி :என்னிடம் ஆதாரம் உள்ளது ? ம்ம் தொடங்கிடிச்சு


பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:–
ஆம் ஆத்மி கட்சிக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகள் தவிர, குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த கொள்கையும், குறிக்கோளும் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட்டு இயக்கம் ஆகும்.
இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 'ஸ்வராஜ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் நக்சலைட்டுகளின் கொள்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு பகுதியையும் காலனியாக மாற்றி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
காஷ்மீர் பற்றி ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர்களுக்கு நமது நாடு ஒரே நாடு என்று தெரியவில்லை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வசிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

பாலுமகேந்திரா ! மனம் திறக்கிறார் மௌனிகா !

    மௌனிகா
  • மௌனிகா பாலு மகேந்திராவுடன்..
  • சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல ஒரு சிறந்த குடும்பத்தலைவராகவும் பாலுமகேந்திரா இருந்தார் என்று மௌனிகா கூறியுள்ளார்.
மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா ‘தி இந்து’விடம் கூறியதாவது.
‘‘சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா. 1985-ம் ஆண்டு வெளியான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000 ல் நடந்தது. 28 ஆண்டுகால அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது. சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல அவர் சிறந்த குடும்பத் தலை வராகவும் இருந்தார்.
என் இயற்பெயர் விஜயரேகா. அவரின் நிறைய படங்களில் நாயகியின் பெயர் விஜியாகவே இருக்கும். என்னை சந்திப்பதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ படத்தில் நாயகிக்கு விஜி என்கிற பெயரை வைத்திருப்பார். என்னை சந்தித்தபின், “உன்னை பார்க்க இருந்திருக்கிறேன் என்பதால்தான் அந்தப்பெயர் எனக்கு பிடித்ததாக அமைந்திருக்கிறது” என்று சொல்வார்.

குஷ்பு :நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி திமுகவுக்குத்தான்

திருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 36 தலைப்புகளில் 36 சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். ’ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம்’’ என்ற தலைப்பில் நடிகை குஷ்பு சுந்தர் பேசினார். ‘’ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார்.  நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு.  யாருக்கும் எதுக்கும் நாம பயப்படவேண்டாம்.  எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது.  அத்தனையையும் பொய் என்று நிரூபிப்போம் வெற்றி திமுகவுக்கு மட்டும்தான்.   போன தேர்தலில் தமிழ் மக்கள் அவுங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தது போதும். அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவுங்களுக்குத்தான்னு நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்.  வெற்றி திமுகவுக்குத்தான்.  40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப்பாருங்கள். அம்மா உணவகமா? தமிழ்நாட்டுல எத்தனை குடும்பங்கள் இருக்கு.  அத்துனை பேருக்கும் சோறுபோட முடியுமா? மக்கள் என்ன முட்டாள்களா உங்களை நம்புவதற்கு?’’ என்று பேசினார்nakkheeran.i

ஆ. ராசா : தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ? தமிழ் எழுந்து நிற்கிற போதெல்லாம் கலைஞர்

திருச்சியில்  தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் 36 தலைப்புகளில் சொற் பொழிவாளர்கள் பேசினார்கள்.  
’திராவிடம் வளர்த்த தமிழ்’’ தலைப்பில் ராசா எம்.பி., பேசினார்.  அவர் தனது பேச்சில், ’’தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றில் இரண்டாக பிரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.   ஒன்று சங்கம் வளர்த்த தமிழ்.  இரண்டாவது திராவிடம் வளர்த்த தமிழ்.  சங்கம் வளர்த்த தமிழுக்கும் திராவிடம் வளர்த்த தமிழுக்கும் இடையில் எங்கோ மோதல்; முரன்பாடு.  அந்த முரன்பாட்டையும், மோதலையும் தீர்த்து வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்ற காரணத்தினாலேதான்  திராவிடம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பை இந்த மாநாட்டிலே பயன்படுத்தியிருக்கிறோம்.

தி.மு.க.,வில் 'சீட்' பேரம் அதிகரிக்க விஜயகாந்த்:காங்கிரசை பகடையாக்கும் தந்திரம்

தி.மு.க.,வுடன் பேரத்தை அதிகரிக்கவே, பிரதமரை சந்திக்க, விஜயகாந்த் டில்லி சென்றதாகவும், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், காங்கிரசை, அவர் பகடைக்காயாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உறுதியான பதில் இல்லை: லோக்சபா தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் விரும்புகின்றன. அதனால், இரு கட்சிகளும், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை, கூட்டணி தொடர்பாக, பல முறை அணுகின, ஆனாலும், அவர் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.கடந்த, 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த, தே.மு.தி.க., மாநாட்டிற்கு பிறகாவது, விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என, நம்பப்பட்டது; அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில்தான், தமிழக பிரச்னைகள் தொடர்பாக, புகார் மனு அளிக்க, டில்லி சென்றார் விஜயகாந்த். டில்லி சென்ற அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாக, தகவல்கள் கசிந்தாலும், அதை எந்தத் தரப்பும் உறுதி செய்யவில்லை.

Delhi சட்டசபையை முடக்க்கம், ஜனாதிபதி ஆட்சிக்கு ஆலோசனை

புதுடில்லி : டில்லி சட்டசபையை கலைக்கும்படி, 'ஆம் ஆத்மி' தலைவர், கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை, அம்மாநில கவர்னர், நஜீப் ஜங் நிராகரித்து விட்டார். சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, அவர், பரிந்துரைத்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதி களை கொண்ட சட்டசபையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி கட்சி, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக, கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அவரின் சகாக்கள் ஆறு பேர், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிருப்தி: ஆனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில்மோதல் போக்கை, ஆம் ஆத்மி கட்சியினரும், அரவிந்த் கெஜ்ரிவாலும், கடைபிடித்தனர்.
எதுக்கு இந்த விளம்பரம்? கட்சிக்கு பெரும்பான்மை இல்லன்னு தெரியும்...காங்கிரஸ் ஆதரவோட தான் ஆட்சின்னு தெரியும்....மக்களுக்கு நல்லது செய்யிற கட்சின்னா முதல்ல மக்கள் கஷ்டங்கள் மீதான மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் பிரச்சினையை தீர்க்க ஆரம்பிச்சு இருக்கணும்...அதுக்கு பேருதான் மக்கள் கட்சி...அரசியல் ஆதாயங்களுக்காக அம்பானிகளை எதிர்க்கிறதும், ஆதரவு கொடுத்த கட்சியின் காலை வாரி விட்டுகிட்டு இருக்கறதும் தான் அரசாங்கம் செய்யிற லட்சணமா? தான் பிரபலம் ஆகிறதுக்காக ஜன் லோக்பால் (ஏற்கனவே மத்திய அரசு லோக்பால் சட்டம் கொண்டு வந்து இருக்கு) சட்டம் கொண்டு வருவதற்கும் அம்பானி டாடாவை எதிர்ப்பதற்கு மட்டுமே தனது முழு நேரத்தையும் செலவழித்தால் எப்படி மக்கள் இவரை ஏற்று கொள்வார்கள்?...