செவ்வாய், 23 அக்டோபர், 2012

சந்திரபாபு நாயுடு: தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை எதிர்க்கவில்லை

 தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை எதிர்க்கவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தெலங்கானா பகுதியான ராஜௌலியில் 22.10.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு விரைவில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி இப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.
"நான் உங்களுக்காக வருகிறேன்' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, தெலங்கானா பகுதியான மெகபூப்நகர் மாவட்டத்துக்கு சென்றார்.
அவரது வருகைக்கு தெலங்கானா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர்.

திங்கள், 22 அக்டோபர், 2012

கமல்ஹாஸன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக முக்தா சீனிவாசன்

muktha srinivasan sends legal notice to kamal
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘நாயகன். இதை முதலில் முக்தா சீனிவாசன் தயாரித்தார். பின்னர் ஜிவியின் சுஜாதா பிலிம்ஸுக்குக் கைமாறியது.
இப்படம் உருவாகி 25 வருடம் ஆனதையடுத்து ஆங்கில பத்திரிகையொன்றில் கமல் ஒரு கட்டுரை எழுதினார்.
அதில், ‘முக்தா சீனிவாசனின் நிறுவனத்துக்காக நாயகன் படம் நடிக்க முடிவு செய்தேன். மணிரத்னம் இயக்கினார். மும்பையில் ஷூட்டிங் என்றதும் சற்று தயக்கம் காட்டி சீனிவாசன் சம்மதித்தார். பின்னர் சண்டை காட்சிகளை சர்வதேச தரத்துடன் எடுக்க இயக்குனர் முடிவு செய்தபோது அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய முடியாது," என்று கூறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முக்தா சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் கூறியதில் உண்மையில்லை என்றும், அவர் தன் மேதைமையைக் காட்ட என்னை சிறுமைப்படுத்துகிறார் என்றும் கூறினார்.

ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!

கிங்பிஷர்
கிங்பிஷர் ஊழியர் போராட்டம்
நோய்டாவில் நடக்கவிருக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள வரும் விஜய் மல்லையாவுக்கு எதிராக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
2007-ம் ஆண்டு விஜய் மல்லையா டச்சு முதலாளி மைக்கேல் மோல் உடன் சேர்ந்து 90 மில்லியன் யூரோ (சுமார் ரூ 630 கோடி) விலை கொடுத்து பார்முலா ஒன் கார் பந்தய அணியான ஸ்பைகர் F1ஐ விலைக்கு வாங்கியிருந்தார். போர்ஸ் ஒன் என்ற பெயருடன் அந்த அணி 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ போட்டியில் களமிறங்கியது.
2011ம் ஆண்டு இன்னொரு இந்திய கார்ப்பரேட் சகாரா இந்தியாவுக்கு 42.5 சதவீதம் பங்குகளை விற்று விட்டார் மல்லையா. அதைத் தொடர்ந்து அந்த  அணி சஹாரா போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார் பந்தய அணியை பராமரிக்க ஆண்டுக்கு $120 மில்லியன் (ரூ 650 கோடி) தேவைப்படுகிறது என்று பார்முலா ஒன், பந்தய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிறார் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2.

சென்னை: தனது அஞ்ஞாதவாசத்திலிருந்து வெளியில் வருகிறார் வடிவேலு. இனி வடிவேலு நடிக்கவே மாட்டார் என்று வந்த செய்திகளைப் பொய்யாக்கும் விதத்தில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்தப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை சத்தமில்லாமல் முடித்துவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.
ஏற்கெனவே இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்புதேவன் வடிவேலுவுடன் பேசி வந்தார். அரசியல் காரணங்களால் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கான வேலைகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தனவாம்.
விரைவில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சிம்புதேவன் கூறுகையில், "ஆமாம்.. வடிவேலுவின் மறுபிரவேசம் இம்சை அரசனின் இரண்டாம் பாகம் மூலம் நடக்கவிருக்கிறது. படத்துக்கான திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. ரசித்து ரசித்து சிரிக்கும் ஒரு நல்ல படமாக இம்சை அரசன் 2-ம் பாகம் அமையும்," என்றார்

சின்மயி: மறவர் சீமை தமிழச்சி நான்

சென்னை: மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.
நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.
ஐயங்கார் குடும்பம்

நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!

கமல்ஹாசன்தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். vinavu.com
    லகம் எங்கிலும் உன்னை வென்றிட யாரு,
    உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு,
    உலக நாஅஅ யகனே!”
    என்று பாடல் பெற்றவர் தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த மகான் என்று விதந்தோதப்படும் கமல்ஹாசன். முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
    மாநாட்டை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில் “தமிழ்நாட்டில் ஒரு சினிமா தயாரிப்பது கோலா பானம் தயாரிப்பதை விட அதிக செலவு பிடிப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை, வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் கோலாவின் விலையை விட குறைவாக இருக்கிறது. எனவே திரை அரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்ற வேண்டும்” என்று தனது பொருளாதார தத்துவத்தை உலகறியத் தந்துள்ளார்.
    “சினிமாத்துறை இந்தியாவில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே கருதப்படுகிறது. மருத்துவமனைகள் போல அத்யாவசிய சேவையாக கருதப்படுவதில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    குழந்தைகள் எலிகளால் தாக்கப்படும் மருத்துவமனைகள்தான் நாட்டில் அத்தியாவசியச் சேவையின் தரம் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

    காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!

    by வினவு" vinavu.com
    காதலுக்கு தடைகாதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.
      “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். காடுவெட்டி பேசிய அதே மேடையில் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாசும் அவரது புத்திரனும் பசுமைப் போராளியுமான அன்புமணி ராமதாசும் அமர்ந்திருந்து காடுவெட்டியின் பேச்சை ரசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர்கள், காடுவெட்டியின் பேச்சை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.
      இதற்குச் சில வாரங்கள் முன்பு (15/04/2012) தான், தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூடிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் அழைப்பிதழில் சிறப்புப் பேச்சாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.கே குப்புசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

      balu mahendra: நான் காணாம போயிடல

      இதில் வரும் கிசுகிசு அல்லது வதந்தி திரு.பாலுமகேந்திரா வை குறிப்பிடுவதாக தெரிகிறது உண்மையா?
      Director and cinematographer Balu Mahendra
       தொப்பி போட்ட பாலு இயக்கம் சமீபமா நெறைய பங்ஷன்ல கலந்துக்குறாராம்... கலந்துக்குறாராம்...   இப்பல்லாம் பாலு இயக்கம் மீடியாக்காரங்க மேல உர்ரா இருக்காராம். போன மாசத்துல நடந்த பங்ஷன்ல மீடியா விமர்சகர்களை தாக்கி பேச¤னாராம். சமீபத்துல, Ôஉங்கள அறிமுகப்படுத்திக் கிட்டு பேசுங்கÕன்னு மீடியாக்காரர் ஒருத்தர் மைக் கொடுத்ததும் கோபத்துல அந்த மைக்க அடிச்சி உடைச்சிட்டாராம். ‘இத்தன வருஷமா இண்டஸ்ட்ரில இருக்கேன். என்னய யாருன்னு அறிமுகப்படுத்திட்டு பேசறளவுக்கு நான் காணாம போயிடலÕன்னு பாய்ஞ்சிட்டராம்... பாய்ஞ்சிட்டாராம்...

      காதலர்களுக்கு உதவிய மாணவி பயத்தினால் தற்கொலை

      கிருஷ்ணகிரி: தன்னுடன் படித்து வந்த 2 மாணவிகளும், தங்களது காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிப் போக உதவி புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாலிடெக்னிக் மாணவி, உறவினர்கள் மிரட்டியதாலும், போலீஸுக்குப் போகப் போவதாக கூறியதாலும் பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.
      கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலிகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா. 17 வயதான இவர் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். அதே பாலிடெக்னிக்கில் படித்து வந்த சூளகிரியைச் சேர்ந்த 2 மாணவிகள் இவருடன் நட்பாகப் பழகினர். இந்த இரண்டு மாணவிகளும் இருவரைக் காதலித்து வந்தனர். இந்தக் காதலுக்கு பரிமளா உதவியாக இருந்ததாகத் தெரிகிறது.
      இந்த நிலையில் இரண்டு மாணவிகளும் தத்தமது காதலர்களுடன் ஓடிப் போய் விட்டனர். இதனால் இரு மாணவிகளின் வீட்டாரும் கொதிப்படைந்தனர். அனைவரும் பரிமளாவை நெருக்க ஆரம்பித்தனர். எங்கே போயுள்ளனர் என்று கேட்டு விசாரித்துள்ளனர். மேலும் போலீஸில் புகார் சொல்ல்ப போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா, தனக்கு சத்தியமாக எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் உறவினர்கள் நம்பவில்லை.

      தி.மு.க.வுக்குள் ‘உப தேவர்களின்’ பகிரங்க fight


      Viruvirupu
      தி.மு.க. மத்திய அமைச்சருக்கும், அதே கட்சியின் எம்.பி.க்கும் இடையே வெளிப்படையாக நடந்த இழுபறி சண்டையின் பின்னணி பற்றி, நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர்.
      தி.மு.க. மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், “நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரயில்வே திட்டங்களை அறிவிக்கிறார்” என்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு, தி.மு.க.-வுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
      மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கத்தின் குற்றச்சாட்டு காரணமாக திகைத்துப்போன டி.ஆர்.பாலு, உடனடியாகவே சென்னைக்கு வந்து கருணாநிதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
      “ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு இப்படி பேசலாமா? பழநி மாணிக்கம் கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை செய்கிறார்” என பாலு கோபப்பட்டதாக சொல்கிறார்கள். இதையடுத்தே விளக்கம் கொடுக்க பழநி மாணிக்கம் அழைக்கப்பட்டாராம்.

      பீட்சா அழாகவும் அளவாகவும் இருக்கிறது.

      பீட்சா! படத்தின் டைட்டிலே பலபேருக்கு ஆச்சரியத்தையும் ஒரு விதமான அன்னியத்தையும் அளித்தது. பீட்சா எப்படி இருக்கும் என்று ருசித்து பார்க்காத பலபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பீட்சா சாப்பிட வாய்ப்பிருந்தாலுமே அதை ஒதுக்கி வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். சொல்ல வருவது என்னவென்றால்... அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்! இளசுகள் ‘என்சாய்’ பண்ண ஒரு சூப்பர் படம்.

      லிவிங் டூ கெதர் என்று சொல்லி திருமணதிற்கு முன்பே சேர்ந்து வாழும் நவீன யுகத்துத் தம்பதிகள் விஜய் சேதுபதி (மைக்கேல்) - ரம்யா நம்பேசன் (அனு). பிட்சா விநியோகிக்கும் நபராக விஜய் சேதுபதி. காதலி வயிற்றில் தன் குழந்தை இருப்பது தெரியவர, காதலியை மணக்கிறார்.மனைவி ரம்யா நம்பேசன் ஒரு நாவல் எழுதுவதற்காக பேய்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

      நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள்

      It is really hard to make out who the person lying as dying patient. She was Savitri, the legendary actress on Telugu and Tamil screens. It's hard to believe and hearts melt in grief even now. How time can play with beautiful screen goddesses as well! You can also see Gemini Ganesan in the picture. This photograph was taken in almost last hours of Savitri's life.

      கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்!எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி. சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு தேவதாஸ்,மிஸ்ஸியம்மா சாவித்திரி ஒரு வகை அழகு.
      பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

      தினமலருக்கு நன்றி.? திமுகவுக்கு அதிக விளம்பரம் தருவதால்

      தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும், தி.மு.க., எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் இடையே, பகிரங்கமோதல் வெடித்துள்ளது.ஸ்டாலின் ஆதரவாளரான பழனி மாணிக்கத்திற்குபோட்டியாக, தஞ்சாவூர்லோக்சபா தொகுதியை, ஸ்ரீபெரும்புதூர், எம்.பி.,யாக உள்ள டி.ஆர்.பாலு குறி வைத்திருப்பதும், அதற்கு அழகிரி ஆதரவு கொடுத்திருப்பதும் தான்,மோதலுக்கு பின்னணியாகக் கூறப்படுகிறது.இந்தமோதலால், அதிருப்தி அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த நான்கு நாட்களாக அறிவாலயத்திற்கு வராமல், தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், "சிட்டிங்' தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலோ, சென்னை தொகுதிகளிலோ போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என, டி.ஆர்.பாலு கணித்துள்ளார்.

      கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந்தை?

      ஈரோடு மாவட்டத்தில் கொத்தடிமையாக பணியாற்றி, 151 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், பல ஆண்டாக அதிகாரிகள் சோதனையில் இறங்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
      ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தில், பெயரில்லாத நூல் மில் மற்றும் இதன் சார்பு நிறுவனம், சோலார், தனலட்சுமி சிந்தடிக்ஸ் (பி) லிட் மில்லில் இருந்து, 138 கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.மூலப்பட்டறையை சேர்ந்த, சுரேஷ், இரண்டு மில்களின் உரிமையாளர். ஆனால், "கருங்கல்பாளையம் யூனிட், கருப்புசாமி, செந்தில் மற்றும் மணிகண்டன் ஆகியோர், ஒப்பந்த அடிப்படையில் நடத்துவதாகவும், சோலார் மில்லை மட்டும் தான் நடத்துகிறேன்' என, உரிமையாளர் சுரேஷ் தெரிவித்தார்.

      பாலில் 68 சதவீதம் கலப்படம்! மத்திய அரசு தெரிவித்து உள்ளது

      அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் 68 சதவீதம், கலப்படமாக இருப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.உத்தரகண்ட்டை சேர்ந்த, சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்,  ''பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ். எஸ்.ஏ.ஐ., சார்பில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பால் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல முக்கியமான விஷயங்கள் தெரியவந்தன.

      கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்லாதீங்க: அமைச்சர் யோசனை

      கோடா:""வீட்டில் கழிப்பறை கட்டாத, குடும்பத்திற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக செல்லக்கூடாது,'' என, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.
      "நம் நாட்டில், கழிப்பறைகளை விட, கோவில்களே அதிகம்' என, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சமீபத்தில் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
      இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்ட கிராமம் ஒன்றில், பெண்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மத்தியில், நேற்று பேசிய, ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:வீட்டில் கழிப்பறை கட்டாத, குடும்பத்திற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக செல்லக் கூடாது; அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்யக் கூடாது.ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் செய்யும் முன், அவரின் ஜாதகமும், அவருக்கு மாப்பிள்ளையாக வரப்போகும், பையனின் ஜாதகமும் பொருந்துகிறதா என, பலர் ஜோதிடம் பார்க்கின்றனர்.

      ஞாயிறு, 21 அக்டோபர், 2012

      விஜயலட்சுமி: சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன்

      இயக்குனரின் அகத்தியனின் மகள் இரண்டாவது இன்னிங்க்ஸ் : 
      வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி கூறியது: ‘சென்னை 28’ படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். படம் வெற்றி பெற்று பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், என் வீட்டு கதவை தட்டி யாராவது வாய்ப்பு தரட்டும்; நடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். அது என்னை ஏமாற்றிவிட்டது. இதெல்லாம் நான் செய்த தவறு என்று இப்போதுதான் உணர்கிறேன். ‘அஞ்சாதே’, ‘அதே நேரம் அதே இடம்’ என ஒரு சில படங்களில் நடித்தேன். சில படங்களை தேர்வு செய்யும்போது தவறாக கணித்ததும் நான் செய்த மற்றொரு தவறு. இப்போது புதுமுகம்போல் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டேன். சி.எஸ்.ஆனந்தன் இயக்கும் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை நான் தவறவிட விரும்பவில்லை. இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இதில் வெற்றி பெறுவேன். இவ்வாறு விஜயலட்சுமி

      சூர்யாவின் மாற்றான்.திருந்தான்.. காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க

      Maatraan Spl Prg Sun Tv ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?

      தலைப்பை பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.
      பக்கம் பக்கமா பலே பேச்சு
      அது போகட்டும் காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க என்று விட்டுவிடலாம். ஆனால் சேனல்களில் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசும்போதுதான் சிரிப்பு வருகிறது.

      சீன் பை சீன் விளக்கம்
      ஞாயிறு காலை 9.30 மணிக்கு சன் டிவியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மாற்றான் இயக்குநர் கே.வி. ஆனந்த் தொடங்கி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சீன் பை சீன் படத்தை பற்றி விளக்கினார்கள்.
      லிங்குசாமியின் காமெடி

      இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் பேசினார் இயக்குநர் லிங்குசாமி. ஏதாவது ஒரு படத்தைப் பற்றி பேசினாலே முதல்நாள் முதல்ஷோ பார்க்கவேண்டும் என்று நினைப்போம். அதே மாதிரிதான் மாற்றான் படமும் என்று போட்டாரே ஒரு போடு. மிகப்பெரிய காமெடி கேட்டதுபோல சிரிக்கத்தான் முடிந்தது.

      பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை - தீவைப்பு

       Pakistan Church Attack Details

      The Global Lane has learned more about the recent attack against Christians in Mardan, Pakistan.
      பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வகிக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் கிறிஸ்தவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கராச்சி அருகேயுள்ள ஈசா நக்ரி என்ற இடத்தில் மின்சார வெட்டை கண்டித்து போராட்டம் நடந்தது. அப்போது பழைய காஜி கேம்ப் பகுதியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தின் மீது ஒரு கும்பல் தாக்கியது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மீது போலீசார் மதஅவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஈசா நக்ரியில் உள்ள மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்து நொறுக்கியது. ஆயுதம் தாங்கி வெறியுடன் அக்கும்பல் அங்கு வந்தது.

      அப்போது தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்களை தரையில் வீசி எறிந்தனர். அங்கு இருந்த ரூ. 40 ஆயிரம் நன்கொடை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
      இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இப்பகுதியில் 6 கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றில் சில தேவாலயங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.
      இவை கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஈசா நக்ரி பகுதியில் உள்ளது. எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

      வாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை எடுக்கலையே.. திக்விஜய்சிங்

      டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது உறவினர்களின் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருந்தும் காங்கிரஸ் அரசாங்கம் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.  இப்ப நல்லாவே புரிகிறது கனிமொழி மீது வன்மத்துடன் பாய்ந்து கடித்து குதறியது எந்த நோக்கத்தில் என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் இந்த விஷயத்தில் நீங்கள் எல்லாம் அசல் ஆரியர்கள்  அய்யா
      இது தொடர்பாக அவர் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது உறவினர்களின் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்பதுதான்.
      ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு எப்படி கூடியிருக்கிறது என்று சார்ட்டட் அக்கவுண்டுதான் கேள்வி கேட்க முடியும். தமது மருமகனின் சொத்து மதிப்பு எப்படியெல்லாம் உயர்ந்தது என்று ஆராய்வது மாமியார் சோனியாவின் வேலை இல்லை. அரசியல்வாதிகளாகிய நாங்கள் கடவுள் அல்ல.. மனிதர்கள்தான் என்றார் அவ

      குழந்தை திருட்டு ஆர்.எஸ்.ஆர்.எம். RSRM மருத்துவமனை டாக்டரும், நர்ஸூம்!

      சென்னை மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருடிய டாக்டரும், நர்சும் 

      Viruvirupu
      STIRRING SCENE: Police had to be called to the R.S.R.M. Hospital in Royapuram after relatives of a woman went on a protest on Friday.—

      சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டரும், நர்ஸூம் குழந்தையை திருடிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குழந்தைகள் பிறந்த ஒரு பெண்ணின் ஒரு குழந்தையை இவர்கள் திருடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
      இது பற்றி கேட்டதற்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சும் 2 ஆண்குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், ஒரு ஆண் குழந்தைதான் பிறந்தது என்றும், சொன்னார்கள். அதை ஏற்க மறுத்து சண்டை போட்ட தாயிடம், ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு போகாவிட்டால் விஷ ஊசி போட்டு உன்னை கொன்றுவிடுவோம்” என்று மிரட்டினார்கள் என புகார் கூறப்பட்டுள்ளது.
      சென்னை புது வண்ணாரப்பேட்டை, தேசிகா நகரை சேர்ந்த பிரவீன்குமார், மேனகா தம்பதி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இந்த புகாரை அளித்தனர்.

      ஆரோகணம் Director லட்சுமி ராமகிருஷ்ணணனுக்கு பாலச்சந்தர் பாராட்டு!

      முறையாக ஆரோகணம் படத்தை இயக்கியுள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, நூறு படங்களை இயக்கிய கே பாலச்சந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
      படத்தைப் பார்த்து தான் மிகவும் நெகிழ்ந்ததாகவும், முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநருக்குரிய முத்திரை பதித்துள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணனை அவர் பாராட்டியுள்ளார்.
      இது தொடர்பாக சமீபத்தில் கே பாலச்சந்தர் எழுதியுள்ள கடிதம்:
      மறைந்த டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு, தமிழ் சினிமா பல பெண் திரைப்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாத் தொழில்துறையில் அவர்கள் யாருமே ஊக்குவிக்கப்படவில்லை என்பதும் அதனால் அவர்களில் எவருமே இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதும் உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

      OH MY GOD இந்தி பட புகார் விசாரிக்க டெல்லி போலீசுக்கு உத்தரவு

      புதுடெல்லி: ராவல் பரேஷ், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்த இந்திப் படம் ‘ஓ மை காட்’. உமேஷ் சுக்லா இயக்கிய இந்தப் படம் சமீபத்தில் வட மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
      படத்தில் நடித்த ராவல், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பட இயக்குனர் உமேஷ் சுக்லா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிவசேனா இந்துஸ்தான் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ராஜேந்தர்சிங் ராஜா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘ஓ மை காட்’ படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருக்கிறது. அதில் நடித்துள்ள ராவல் பேசும் வசனங்கள் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இந்து மத கடவுள்கள் மற்றும் தேவதைகளை அவமதிக்கும் விதத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்து கடவுள்களையும் தேவதைகளையும் இழிவுபடுத்தும் வசனங்களை ராவல், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் பேசி நடித்துள்ளனர்.

      சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்

      tamil Selvan - chennai,இந்தியா
       கோமளவல்லி ஆட்சியில் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?வேண்டும்?
      சென்னை:“”சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்,’’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சேது கால்வாய் திட்டத்தை ஆராய, எச்.ஆர்.லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு 1981ம் ஆண்டு, தமிழகம் வந்தது. சேது கால்வாய் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அக்குழுவிடம் விரிவாகத் தெரிவித்தார். மேலும், 1985-90ம் ஆண்டில் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தை சமர்பத்தபோது, சேது கால்வாய் திட்டத்தை நிøவேற்றியே தீர வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர்., வலியுறுத்தினார்.
      இப்போதுள்ள தமிழகத்தின் முதலமைச்சரோ, சேது கால்வாய் திட்டம் தேவையில்லை. ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தியுள்ளார். பல பயணங்களை கடந்து, சேது கால்வாய் திட்டம் துவங்கப்பட்டு 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. சேது கால்வாய் அமைக்கப்பட்டால், தமிழகத்துக்கு கிடைக்கும் பயன்களை கருத்தில் கொண்டு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் இணைந்து, திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

      சமூக உதவி பெறும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது

      சோனியா காந்தியுடன் மன்மோகன் சிங்
      அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களுக்கான பயன்களைப் பெறும் ஒரு கருவியாக பல்முனை பயனளிப்பு அட்டையாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சனிக்கிழமை துவக்கி வைத்தார்கள்.

      "உதவித் திட்டங்கள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றானால் பலர் பாதிக்கப்படுவர்"