பாலாவின் ‘அவன், இவன்’ படத்தைப்
பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியாமல் ஓடி வந்த போதே இனிமேல் தமிழ்ப் படம்
பார்க்கக் கூடாது என்ற முடிவு எடுத்தேன். இருந்தாலும் அந்த முடிவுக்கு
அவ்வப்போது ’ட்ரபிள்’ வந்து விடுகிறது. முகமூடி படத்தை நான் முதல்
காட்சியாகப் பார்த்த ஒரே காரணம், அதன் இயக்குனர் மிஷ்கின் பத்திரிகைகளில்
கொடுக்கும் பேட்டிகள்தான். தன்னை ஏதோ ஒரு குரஸவே ரேஞ்சில் வைத்துக் கொண்டு
தமிழ் சினிமா ரசிகர்களை சகட்டுமேனிக்குத் திட்டுவது; எல்லாம் குப்பை,
எதுவுமே சரியில்லை என்பது… பாலாஜி சக்திவேல் எடுத்த ’வழக்கு எண்…’ என்ற
அசட்டுத்தனமான படம் ஓடவில்லை என்றதும் மிஷ்கின் ஒரு விழாவில் தமிழ்
ரசிகர்களைத் திட்டித் தீர்த்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
அவரிடம் உதவி இயக்குனராகச் சேர விரும்பி, அவரால் மறுக்கப்பட்டு வருபவர்கள்
சொல்லும் கண்ணீர்க் கதையை வைத்து என்னால் ஒரு நாவலே எழுத முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேரும் மடையர்கள்; தான் ஒரு ஜீனியஸ் என்பதாகவே
அவருடைய பேட்டிகள் அனைத்தும் அமைந்திருப்பதைப் பார்க்கிறேன்.
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
விளையாட வந்த வரை திருப்பி அனுப்பியது தவறு
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து
விளையாடுவதும்,இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான
ஒன்று.எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல
என்றார் அவர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் கெட்டுப்போவது என்பது சீனாவுக்கு காதில் தேன் பாயும் செய்தியாகும் . நமது சந்தேகம் எல்லாம் சீனாவிடம் சீமானும் நெடுமாறனும் இன்னும் பல கைகூலிகளும் விலைபோய்விட்டார்கள் ???
சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம் வெளியீடு
"புட்டபர்த்தி, சத்ய சாய்பாபா டிரஸ்டுக்கு, பக்தர்கள் வழங்கிய சொத்துகள்,
காணிக்கை பொருட்கள் அனைத்தும், மக்களின் சேவைக்குச் சொந்தமானது' என, சத்ய
சாய்பாபா, "பிரகடன பத்திரம்' ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
"மக்கள் சேவையே மகேசன் சேவை' என, வாழ்ந்து வந்த சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தும், மக்களின் உபயோகத்திற்கு சேர வேண்டும் என, 1965ம் ஆண்டு எழுதி வைத்துள்ள பிரகடன பத்திரத்தின் மூலம், இத்தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களே தனக்கு வாரிசுகள் என, நினைத்திருந்த சாய்பாபா, மறைந்து ஓராண்டுக்குப் பின், இப்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல், இ-மெயில் வடிவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாய்பாபா, எழுதியுள்ள பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நான் புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்தேன். தற்போது எனக்கு, 44 வயது. ஆரம்பக் கல்வியுடன் கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டு, பக்தி மார்க்கத்திற்கு வந்து விட்டேன். 14 வயதில், தாய், தந்தையரை பிரிந்து வெளியேறி, பக்தியை நிலைநாட்ட பிரசாரம் துவக்கினேன்.எனக்கென தனி சொத்துகள், வருமானம் இல்லை; எஸ்டேட்டுகளும் இல்லை. எனது பக்தர்கள் என்னிடம் சமர்ப்பித்துக் கொண்ட நன்கொடைகள், மக்களின் உபயோகத்திற்கானவை. இந்த சொத்துகள், "டிரஸ்ட்'ஆக, என் நிர்வாக மேற்பார்வையில் உள்ளது. எனது வாரிசு என, கூறிக்கொண்டு, சொத்துகள் மீது எவரும் உரிமை கொண்டாடக் கூடாது.“Whatever is given to me by my devotees is under my management, supervision and control as a trustee to be used for public charitable purposes. This declaration I am making so that nobody can claim under or through me in the family properties,” said Sai Baba in his deed, dated 23 March 1967.
"மக்கள் சேவையே மகேசன் சேவை' என, வாழ்ந்து வந்த சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தும், மக்களின் உபயோகத்திற்கு சேர வேண்டும் என, 1965ம் ஆண்டு எழுதி வைத்துள்ள பிரகடன பத்திரத்தின் மூலம், இத்தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களே தனக்கு வாரிசுகள் என, நினைத்திருந்த சாய்பாபா, மறைந்து ஓராண்டுக்குப் பின், இப்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல், இ-மெயில் வடிவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாய்பாபா, எழுதியுள்ள பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நான் புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்தேன். தற்போது எனக்கு, 44 வயது. ஆரம்பக் கல்வியுடன் கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டு, பக்தி மார்க்கத்திற்கு வந்து விட்டேன். 14 வயதில், தாய், தந்தையரை பிரிந்து வெளியேறி, பக்தியை நிலைநாட்ட பிரசாரம் துவக்கினேன்.எனக்கென தனி சொத்துகள், வருமானம் இல்லை; எஸ்டேட்டுகளும் இல்லை. எனது பக்தர்கள் என்னிடம் சமர்ப்பித்துக் கொண்ட நன்கொடைகள், மக்களின் உபயோகத்திற்கானவை. இந்த சொத்துகள், "டிரஸ்ட்'ஆக, என் நிர்வாக மேற்பார்வையில் உள்ளது. எனது வாரிசு என, கூறிக்கொண்டு, சொத்துகள் மீது எவரும் உரிமை கொண்டாடக் கூடாது.“Whatever is given to me by my devotees is under my management, supervision and control as a trustee to be used for public charitable purposes. This declaration I am making so that nobody can claim under or through me in the family properties,” said Sai Baba in his deed, dated 23 March 1967.
பி.ஆர்.பி யின் பயம். அமைச்சர்களை பாதுகாக்க என்னை போட்டு தள்ளிவிடுவார்கள்
அமைச்சர்களுக்கு நான்
அள்ளிக்கொடுத்த விவகாரங்களும் என் மூலம் வெளியே வரலாம் என்று நினைக்கிறது.
எனவே நான் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று யோசிக்கும்
நிலைக்கு அது வந்துவிட்டது. போலீஸ் தரப்பிலிருந்தே எனக்கு இந்தத் தகவல்
வந்தது. "உஷாராக இரு' என்று சொல்கிறார்கள் போலீஸின் கஸ்டடி விசாரணைக்குப் பின் பாளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ’கிரானைட் மோசடி மன்னன்’ பி.ஆர்.பி., சிறைவாசத்தை ஜீரணிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். ஏ.சி. குளிரிலேயே சுகபோகமாக வாழ்ந்த பி.ஆர்.பி.யால் ஜெயில் வெயிலைத் தாங்க முடியவில்லை.
எப்பொழுதும் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு வெறும் வேட்டியோடு பெட்ஷீட்டைப் போட்டு படுத்து உருள்கிறார். அவரால் பலனடைந்த பலரும், தங்கள் பெயரை பி.ஆர்.பி. எங்கும் சொல்லிவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் சிறைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். சிலர் வேறு பெயர்களில் வந்து பி.ஆர்.பி.யை நலம் விசாரிக்கிறார்கள்.
தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் பி.ஆர்.பி. ""என் வழக்கு சி.பி.ஐ. கைக்குப் போகக் கூடாது என்று மேலிடம் நினைக்கிறது.
திங்கள், 3 செப்டம்பர், 2012
மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.
சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.
பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.
இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.
நவ்யா நாயர், மேக்னா நாயுடு,சமீரா ரெட்டி, லட்சுமி மேனன்,ஜனனி அய்யர்
நடிகைகள் சாதி பெயரை பயன்படுத்துவதா? டைரக்டர்கள் எதிர்ப்பு
தமிழ் படங்களில்
நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும்,
இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள்
கண்டுகொள்ள வில்லை. தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும் இணைத்தே
விளம்பரங்களில் போடவேண்டும் என்று இயக் குனர்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
நவ்யா
நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர். தற்போது சமீரா
ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் சாதி பெயர்களை தங்கள்
பெயர்களுடன் இணைத்துள்ளனர். கும்கி’,
‘சுந்தரபாண்டியன்’ படங்களில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். ஜனனி
அய்யர், ‘பாகன்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் படங்களில்
நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும்,
இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள்
கண்டுகொள்ள வில்லை. தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும் இணைத்தே
விளம்பரங்களில் போடவேண்டும் என்று இயக் குனர்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
நவ்யா
நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர். தற்போது சமீரா
ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் சாதி பெயர்களை தங்கள்
பெயர்களுடன் இணைத்துள்ளனர். கும்கி’,
‘சுந்தரபாண்டியன்’ படங்களில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். ஜனனி
அய்யர், ‘பாகன்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன்
சேலம் மாவட்டத்தில்
அங்கம்மாள் காலனியில் கடந்த ஜூன் 2ம் தேதி குடிசைகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. இந்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
உட்பட 30 பேர் மீது பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சேலம் இரண்டாவது நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. போலீஸார் வீரபாண்டி
ஆறுமுகம் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ததை
காரணம் காட்டி,குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதாடினார்.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி லட்சுமி
உத்தரவிட்டார்
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!
அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்த விவகாரத்தின் தற்போதைய நிலவரம்.
குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது.
‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோவிந்தா கும்பலின் (மாமியார், மாமனார்) நிலை. வழக்கம் போல் கணவர் நடுநிலை. ஆனால் கதை எதிர்பாராத விதத்தில் வேறு மாதிரி தடம் மாறியது.
கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து 3 மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘இது சாத்தான் வழிபாடுக்கு கர்த்தர் கொடுத்த தண்டனை’ என்று அல்லேலுயா கும்பல் தீர்ப்பு சொன்னது. ‘ஜபக் கூட்டம், அது இது வென பெருமாளை அவமானப் படுத்தியதால் வந்த தண்டனை’ என்று வாதிட்டது கோவிந்தா கும்பல். போட்டி போட்டுக் கொண்டு தண்டனை கொடுக்கும் எவ்வளவு நல்ல கடவுள்கள்!
‘ஒரு பெரிய தொகையை சபைக்கு கொடுத்துவிட்டு ஜபக் கூட்டம் நடத்தி புனித பிரார்த்தனை ஒன்றை செய்ய வேண்டும்’ என்று அல்லெலுயா பாதிரியார் சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தா கோஷ்டி ஒரு படி முன்னேறி சிந்தித்தது. ‘இந்த கூட்டத்தை ஒரேயடியாக அடக்கா விட்டால் நல்லது நடக்க போவதில்லை. இனி சமரசமில்லை’ என்று கறாரான முடிவுக்கு வந்துவிட்டது.
ஜபக்கூட்டம் என்று பிரச்சனையை அல்லேலுயா கிளப்பியது வரை காத்துக்கொண்டிருந்த கோவிந்தா கூட்டம் சண்டையை நன்றாக வலுக்க செய்து, பின்னர் ஒரு அதிரடி இடியை தூக்கி போட்டது.
“இனியும் இந்த மாதிரி அல்லேலுயா கூட்டம், கிறிஸ்துவ மதம் பற்றிய பேச்செல்லாம் இந்த வீட்டில் கேட்கக் கூடாது. மீறினால் சொத்தில் சல்லி பைசா கூட விடாமல் திருப்பதிக்கு எழுதி வைத்துவிடுவேன்” என்று ஒரு செக் வைத்தார் கோவிந்தா கூட்டத்தைச் சேர்ந்த மாமனார்.
எது நான்காவது தூண்? ரத்தக்கறை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு?
லஷ்மண பெருமாள்
இன்றைய பத்திரிகை உலகை நான்காவது தூண் என்று அழைக்கமுடியுமா? அதற்கான
தகுதியோடுதான் பத்திரிக்கைகளும் பத்திரிக்கை ஆசிரியர்களும் பத்திரிக்கை
நிருபர்களும் செயல்படுகின்றனரா? தங்கள் பணியை நேர்மையோடும், தர்மத்தோடும்,
தைரியத்தோடும் செய்கிறார்களா? இவர்கள் தங்களை என்றேனும் சுய பரிசோதனை
செய்துகொண்டிருக்கிறார்களா?
கிட்டத்திட்ட
எல்லாப் பத்திரிக்கைகளும் அரசியல் கட்சியைப் போல ஒரு கொள்கை வைத்துக்
கொண்டு அதனடிப்படையில் மட்டுமே இயங்கி வருகின்றன. உதாரணத்துக்கு,
பத்திரிகைகளில் இடம்பெறும் பேட்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த
மாதிரியான கேள்விகளை அரசியல் தலைவர்களிடம் கேட்க வேண்டும் என்பதற்குப்
பதில் எதையெல்லாம் கேட்கக்கூடாது என்பதில்தான் அந்தப் பத்திரிகை கவனமாக
இருக்கும். நெற்றியில் அடித்தாற்போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை.
நேரடியான ஒரு கேள்வியைப் பத்திரிக்கை நிருபர் முன் வைக்கிறார். பதில்
மழுப்பலாக வருகிறது அல்லது பொதுப்படையான அரசியல் மொழியில் வருகிறது.
அதற்குப் பிறகு அதைத் தொடுத்து, அது சார்ந்த பல கேள்விகளை பத்திரிக்கை
நிருபர்களால் முன்வைக்க முடியும்.
எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-1: பின்-லேடன் பேட்டி
Viru News
நவம்பர்
1-ம் தேதி 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-ஜசீரா டி.வி. சேனல்,
கத்தாரிலும், வேறு சில அரபு நாடுகளிலும் மட்டுமே அறியப்பட்டு இருந்த
காலமும் உண்டு. ஆரம்பத்தில் அரபு மொழி ஒளிபரப்பு மாத்திரமே செய்யப்பட்டும்
வந்தது.
அப்படியிருந்த சேனல், இன்று பிரிட்டனில் பி.பி.சி.-க்கும்,
சேனல்-4க்கும், அமெரிக்காவில் சி.என்.என். மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற
மெகா சேனல்களுக்கும் சவால் விடும் வகையில் வளர்ந்தது எப்படி என்று
தெரியுமா?“ஆப்கானிஸ்தான் யுத்தம் அல்-ஜசீரா சேனலை உலகெங்கும் பிரபலமாக்கியது” என்ற சிம்பிள் பதில் ஒன்று சொல்வார்கள். அது முழுமையான உண்மையல்ல.
ராணுவத்தின் பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியிலும், அரசாங்கங்களின் அதிர்வேட்டுகளுக்கு மத்தியிலும் அல்-ஜசீரா, கேமராவை தூக்கிக் கொண்டு ஓடி ஜெயித்த கதை தெரிய வேண்டுமா? மீடியா உலகில் இந்த தலைமுறையின் மகத்தான வெற்றிக் கதை, அல்-ஜசீராதான்!
வேறு எந்த மீடியாவும் இவர்களை போல வளரவில்லை. வளர்ச்சிக்காக போராடவும் இல்லை.
60 நிலக்கரிச் சுரங்க உரிமங்களை ரத்து!
நிலக்கரிச்
சுரங்க முறைகேட்டை பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் எழுப்பி, அனைத்தையும்
ஸ்தம்பிக்க வைத்த நிலையில் மத்திய அரசு, “நிலக்கரிச் சுரங்க உரிமங்களை
ரத்து செய்வது இயலாத காரியம். அதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழும்” என்று
கூறியிருந்தது. இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்
போலிருக்கிறது.
தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 60 நிலக்கரிச் சுரங்க
உரிமங்களை ரத்து செய்யலாம் என்று அமைச்சகங்கள் குழு கூறியுள்ளது.
டெல்லியின் இன்று நடைபெறும் அமைச்சகங்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான
குறிப்பு, விவாதத்துக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.1993-ம் ஆண்டு முதல் இதுவரை ஒதுக்கப்பட்ட 90 நிலக்கரி சுரங்கங்களில் 60 நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சுரங்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 670 கோடி டன் நிலக்கரியின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்றும் இந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் குழு குறிப்பிட்டிருக்கும் 60 சுரங்கங்களில் 57 சுரங்கங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், 7 சுரங்கங்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்திலும் ஒதுக்கப்பட்டவை
சகானா 6 மாத கர்ப்பிணி பிரசன்னாதான் காரணம்
8 பேரிடம் பழகினேன்;4 பேரை திருமணம் செய்து கொண்டேன் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் காதல் ராணியாக வலம்வந்த சகானா, தற்போது பல இளைஞர்களின் புகாரினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைப்பதற்கு முன்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்ல்லப்பட்ட
சகானாவுக்கு நேற்று மாலையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி சகானா
போலீசாரிடம் கூறும்போது, எனது கர்ப்பத்துக்கு பிரசன்னாதான் காரணம் என்று
தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரசன்னாவிடம் போலீசார் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, சகானாவின்
வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நானாகவே இருந்தாலும் அவருடன் இனி
எப்படி வாழமுடியும் என்று கூறியுள்ளார்.
Pakistan கிறிஸ்தவ சிறுமியை மாட்டிவிட்ட இமாம் கைது
பாகிஸ்தானில் குர்ஆன் அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ சிறுமியை மாட்டிவிட்ட இமாம் கைது
இஸ்லாமாபாத்:
குர்ஆனை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்தவ சிறுமியின் வழக்கில்
புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த சிறுமியை வேண்டும் என்றே
மாட்டிவிட்ட இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக கிறிஸ்தவ சிறுமி ரிம்ஷா மாசிஹ் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மெஹ்ரியா ஜாபர் பகுதியில் உள்ள ஜாமியா அமினியா பள்ளியின் இமாம் காலித் சிஸ்தி தான் வேண்டும் என்றே அந்த சிறுமியை இந்த வழக்கில் மாட்டி விட்டதாக ஒருவர் சாட்சியம் அளித்ததையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து அவர் ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக கிறிஸ்தவ சிறுமி ரிம்ஷா மாசிஹ் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மெஹ்ரியா ஜாபர் பகுதியில் உள்ள ஜாமியா அமினியா பள்ளியின் இமாம் காலித் சிஸ்தி தான் வேண்டும் என்றே அந்த சிறுமியை இந்த வழக்கில் மாட்டி விட்டதாக ஒருவர் சாட்சியம் அளித்ததையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து அவர் ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
காவிரி. பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'ரத்தக் கொதிப்பு' வருகிறது
சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழக மக்களின் வாழ்வாதார விவகாரம். தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கரிலான குறுவை சாகுபடியே செய்ய முடியாமல் போய் சம்பா சாகுபடியும் நடக்குமா? என்ற கேள்விக்குறியோடு தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எப்படியெல்லாம் அலட்சியமாக, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எப்படியெல்லாம் படுகேவலமாக மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெட்ட வெளிச்சமாக எச்சரிக்கையுடன் கூடிய கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.
திருப்திப்படுத்தினேன் : திருமணம் செய்தது 5 பேரை தான் : சஹானாஸ்
சென்னை :ஐந்து பேரை மட்டுமே திருமணம் செய்தேன். மற்றவர்களை திருமண
ஆசை காட்டி பணம், நகைகளை மட்டும் வாங்கிவிட்டு தலைமறைவானேன் என்று கல்யாண
ராணி சஹானாஸ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளைஞர்களை பலரை திருமணம்
செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட கல்யாண ராணி சஹானாஸ் போலீசில்
அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: சொந்த ஊர் கேரள மாநிலம் பத்லசிட்டா.
எங்கள் குடும்பம் வறுமையில் வாடியதால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட
சிரமப்பட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்து விட்டார். தாயும்
வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆதரவன்றி தவித்தேன். அன்பு
செலுத்த யாருமில்லை. இந்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த சித்திக் என்பவருடன்
பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒரு வயதான போது கருத்து
வேறுபாட்டால் பிரிந்து விட்டோம். குழந்தை கணவரிடம் உள்ளது. அதன் பிறகு
2005ல் வேலை தேடி சென்னை வந்தேன். வேப்பேரியில் உள்ள சூப்பர்
மார்க்கெட்டில் வேலை செய்த போது, வாடிக்கையாளராக திருவொற்றியூரை சேர்ந்த
சரவணன் அறிமுகமானார். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம்
செய்து கொண்டோம்.
Autism ஆட்டிசம்' பாதித்த பெண்ணின் அசாதாரண திறமை
சென்னை:"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு உள்ள பெண் ஒருவர்,
1,500 துண்டுகள் புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்க்கும் திறன்
பெற்றிருக்கிறார்.
"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு, நோயாக கருதப்படவில்லை. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளிடம் உள்ள குணங்கள் பலவகையாக இருக்கும். இதை நிறப்பிரிகை குறைபாடு என்கின்றனர். அதாவது, இந்த குறைபாடு உள்ள ஒரு குழந்தையிடம் உள்ள குணங்கள், இதே குறைபாடு உள்ள மற்றொரு குழந்தையிடம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு, நோயாக கருதப்படவில்லை. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளிடம் உள்ள குணங்கள் பலவகையாக இருக்கும். இதை நிறப்பிரிகை குறைபாடு என்கின்றனர். அதாவது, இந்த குறைபாடு உள்ள ஒரு குழந்தையிடம் உள்ள குணங்கள், இதே குறைபாடு உள்ள மற்றொரு குழந்தையிடம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
விஜயகாந்த்:பத்மா சேஷாத்ரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
சென்னை :ஜேப்பியார், சீயோன் பள்ளி உரிமையாளரை கைது செய்த அரசு, பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விருகம்பாக்கத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, எல்லா மாவட்டங்களிலும் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்துக்கான விழா, விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது. மேற்கு சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமை தாங்கினார். பிரேமலதா விஜயகாந்த், மாநில அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: ஜெயலலிதா ஆட்சியில்தான் அதிக அளவு ஊழல் நடந்து வருகிறது.
சஹானாஸ் பெங்களூரில் நேற்றிரவு கைது
சித்தீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சில ஆண்டுகளில் கணவன், குழந்தைகளை பிரிந்து, திருச்சூரை சேர்ந்த வாலிபரை 2வது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார். இதுபோல் கேரளாவில் மட்டும் 5 வாலிபர்களை திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டி உள்ளார். அதன்பின், சென்னைக்கு வந்துள்ளார். வாலிபர் ஒருவரின் போட்டோவை காட்டி, Ôஇவர் என் தோழியை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். இவரை பற்றிய தகவல் தெரியுமாÕ என கண்ணில் தென்படும் இளைஞர்களிடம் அப்பாவியாக விசாரிப்பார். பரிதாபப்பட்டு பேசுபவர்களிடம் தன் செல்போன் நம்பரை கொடுப்பார்.
3 வாரங்கள் கடலில் மிதந்து சென்ற பூனை- கலிபோர்னியாவில் மீட்பு
LOS ANGELES -- A stowaway kitten who survived a three-week
ocean voyage from China to California trapped in a storage container
without food or water has found a new home.
Los Angeles County
animal control officials say the cat, which has been named Ni Hao (NEE'
how) or "hello" in Chinese, will leave the animal hospital he's called
home since turning up in the U.S. last month to start life next week
with a family in the LA suburb of Redondo Beach.
Read more here: http://www.fresnobee.com/2012/08/31/2973096/stowaway-cat-from-china-says-ni.html#storylink=cpy
இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து வருகின்றது. `ஹலோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.
உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். என்று கால் நடை மருத்துவர்கள் கூறினர்.
சோனியாவின் ஆவேசம் காங்கிரஸாரை ஆச்சரியப்படு
சோனியாவின் திடீர் கோபாவேசத்திற்குக் காரணம் பிரணாபின் அட்வைஸ்?
Posted by: Sudha
சஹாராவின் பணம் எப்படி வருகிறது ?போகிறது ?
சஹாராவின் தில்லாலங்கிடி..
இந்திய கிரிக்கெட்டின் வெகு நாளைய ஸ்பான்சர் என்பதால் இந்தியாவெங்கும்
அறியப்பட்டுள்ள சஹாரா நிறுவனத்துக்குக் கடுமையான கண்டனம் உச்ச
நீதிமன்றத்திடமிருந்து வந்துள்ளது. அதன் இரு நிறுவனங்கள் மக்களிடமிருந்து
பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ள கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை உடனடியாக
மக்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
சஹாரா நிறுவனம் எப்படி ஆரம்பித்தது, அதற்கான பண முதலீடுகள் யாரிடமிருந்தெல்லாம் வந்துள்ளன என்பது குறித்து சரியான தகவல்கள் யாரிடமும் இல்லை. ஒரு non-banking finance corporation (NBFC) என்ற முறையில் சஹாரா உத்தரப் பிரதேச மக்களிடமிருந்து நிறையப் பணத்தை முதலீடாகப் பெற்று, அதன்மூலம் வளர்ந்துள்ளது. அவர்களுடைய பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பது மட்டுமல்ல, எங்கெல்லாம் போகிறது, எப்படி புதுப்புது நிறுவனங்கள் முளைக்கின்றன என்பதும் யாருக்கும் தெரியாது.
தந்தையை சித்திரவதை செய்தார் முக முத்து
கருணாநிதி வசிக்கும் அதே
தெருவில் என் மறைந்த நண்பன் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா வீட்டுக்கு(1986ல்)
போயிருந்தேன் . எதிர் வீடு முக முத்து வீடு.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து ! தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும் பரூக்கையும் பார்த்துகொண்டே நுழைந்தார். உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார். உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து ! தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும் பரூக்கையும் பார்த்துகொண்டே நுழைந்தார். உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார். உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
கட்சிக அலுவலகங்களுக்கு தொண்டர்கள் வருகை குறைந்து வருகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, கட்சி பேதமில்லாமல், சென்னையில் உள்ள அனைத்து
கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கும், தொண்டர்கள் வருகை, படிப்படியாக
குறைந்து வருகிறது.
ஆளுங்கட்சியில், ஆட்டம் போடும் கட்சி நிர்வாகிகள் மீது எழுப்பப்படும்
புகார்கள் மீது நடவடிக்கை இல்லாததாலும், எதிர்க்கட்சிகளில் கோஷ்டி பூசல்
தகராறு தொடர்பான புகார்களுக்கு மதிப்பு இல்லாததாலும் தொண்டர்கள், கட்சி
தலைமை மீது அதிருப்தி காட்டுகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., -
தே.மு.தி.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸ்,
பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளுக்கும், சென்னையின் முக்கியப் பகுதிகளில் தலைமை
அலுவலகங்கள் இயங்குகின்றன. கட்சி தலைவர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள்
சந்திக்கும் இடமாக, இந்த அலுவலகங்கள் விளங்கி வருகின்றன. மாநிலத்தின்
ஒவ்வொரு பகுதியிலிருந்தும், சொந்தப் பிரச்னை, பொதுப் பிரச்னை, கட்சி
பிரச்னைகளுக்காக தலைமை அலுவலகங்களை தேடி நிர்வாகிகளும், தொண்டர்களும்
வருகின்றனர். தங்கள் பயணத்தில், எவ்வளவு தூரம் வெற்றியோடு, மன திருப்தியோடு
ஊர் திரும்புகின்றனர் என்று பார்த்தால், கொதிப்பு குரல்களே அதிகமாக
கேட்கின்றன.
புதிய கூட்டணி உருவாக்க முலாயம் மும்முரம்
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும்
தலைவலியாக வெடித்துள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம்,
பார்லிமென்டை முடக்கியதோடு, அரசியல் ரீதியான திருப்பங்களுக்கும்
வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலுக்கு
காங்கிரஸ், பா.ஜ., அல்லாத ஒரு அணியை, இடதுசாரிகளோடு சேர்ந்து,
உருவாக்குவதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தீவிரம் காட்டத்
துவங்கியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், காங்கிரஸ் மீது, கசப்பில் உள்ள தி.மு.க.,
மூன்றாவது அணியில் சேருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், எட்டு நாட்களாக, பார்லிமென்டை முடக்கியுள்ளது. "பிரதமர் பதவி விலக வேண்டும்' என பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆனால், "சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என, சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், தெலுங்குதேசம் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், திடீர் கோஷம் எழுப்பியுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









