சனி, 28 மார்ச், 2026

மத்திய கிழக்கை சீரழிக்க ஈரான் இஸ்லாமிய கடும்போக்கு அரசு முயல்கிறது.

 ராதா மனோகர் : உலகம் முழுவதும் இஸ்ரேலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் 
இதை விட முக்கியமான லெபனானை பற்றி பேசுவதிலை 
லெபனானுக்குள் ஊடுருவி இருக்கும் ஹிஸ்புல்லா என்பது வெறும்  ஒரு  பயங்கரவாத இயக்கம் அல்ல 
அது ஈரானின் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரங்கேற்ற ஈரானால் பணமும் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து லெபனானுக்குள் ஊடுருவிய அமைப்பாகும் 
இந்த ஹிஸ்புல்லா அமைப்பானது ஈரானிய இஸ்லாமிய தீவிரவாத அரசை லெபனானுக்குள் அமைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது 
லெபனானுக்குள் மட்டுமல்லாமல் முழு மத்திய கிழக்கையும் ஈரான் போன்று ஒரு அடிப்படை வாத மதவெறி ஆட்சியை அமைப்பதற்காக ஈரான் ஆட்சியாளர்களால் ஹிஸ்புல்லா ஹமா ஐ எஸ் ஐ எஸ் ஹுத்தி போன்ற இயக்கங்கள் வழி நடத்த படுகின்றன 
இன்று லெபனானில் என்ன நடக்கிறது?


அந்த நாட்டு அரசின் எல்லா சக்திகளையும் மீறி ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் அரசை ஒரு பணய கைதியாக வைத்திருக்கிறது 
ஒரு காலத்தில் லெபனான் என்பது மத்திய கிழக்கின் சுவிஸ்லாந்து என்று கருதப்பட்டது
லெபனான் மக்கள் சுதந்திரமான கலாச்சாரம் வாழ்வியல் கல்வி போன்றவற்றில் பாரசீகத்திற்கு இணையாக உயர்ந்து இருந்தவர்கள்  
பொதுவாழ்வில் மதம் என்பது தலைகாட்டாமல் ஒரு மேம்பட்ட நாடக இருந்தது
இன்று அது எல்லா அழிவுகளையும் சந்தித்து உலகின் பார்வையில் ஒரு பயங்கரவாத நாடாகி விட்டது 
ஈரான் ஆட்சியாளர்கள் முழு மத்திய கிழக்கிலும் இதைத்தான் செய்கிறார்கள் 
விதம் விதமான பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கி பணம் கொடுத்து ஆயுதம் கொடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள் 
ஈரானின் இஸ்லாமிய பயங்கரவாதம் இன்று லெபனான் ஜோர்டான் ஏமன் சிரியா ஈராக் ஆகிய நாடுகளை சீரழிக்க முயல்கிறது. 
இன்று ஈரானை வெறும் இஸ்ரேல் அமெரிக்க மட்டுமல்லாமல் ஏறக்குறைய முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எதிர்க்கும் காரணம் இதுதான்.
வளர்ந்து வரும் மத்திய கிழக்கை சீரழிக்க ஈரான் இஸ்லாமிய கடும் போக்கு  அரசு முயல்கிறது.

நாடுகள் அரசுகளால்தான் கட்டி எழுப்ப படவேண்டும் .. இயக்கங்களால் அல்ல!
லெபனான் பக்கம் ஜனநாயக சக்திகள் நிற்கவேண்டும் 

கருத்துகள் இல்லை: