minnambalam.com - Mathi : “அவனுக்கு என்ன தூங்கிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா..”என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இந்த நேரத்துல தத்துவ பாடல்?
தத்துவம் காலத்துக்கும் பொருந்துமே.. அந்த டிபேட் இப்ப எதுக்குய்யா? நாம ஏற்கனவே சொன்ன மாதிரி தேமுதிக 10 சீட்டை வாங்கி கையெழுத்து போட்டிருச்சே..
தேமுதிகவுக்கு இந்த 10 சீட்டை திமுக கொடுத்ததுக்கு பின்னாடி ‘நிறைய’ சம்பவங்கள் இருக்குய்யா.. வரிசையா சொல்றேன்..
தேமுதிகவை அதிமுக கூட்டணியில இருந்து திமுக கூட்டணிக்கு கொண்டு வரனும்னு 2 மாசத்துக்கு மேல தொடர்ந்து பிரேமலதாகிட்ட பேசிகிட்டு இருந்தவர் எ.வ.வேலு..
ஆனா, லோக்சபா தேர்தல்ல அதிமுக கூட்டணியில இருந்த தேமுதிகவை விட்டுவிடக் கூடாதுன்னு எடப்பாடி நினைச்சாரு.. அதனால எஸ்பி வேலுமணி மூலமாக அதிமுகவும் பிரேமலதாகிட்ட பேச்சுவார்த்தை நடத்துச்சு..
2 கட்சிகள்கிட்டேயும் தேமுதிக 19 சீட் + 1 ராஜ்யபா சீட்டுன்னுதான் டிமாண்டை ஆரம்பிச்சது..
தேமுதிகவுக்கு 6 சீட் கொடுக்கலாம்னு பேசுங்கன்னு எஸ்பி வேலுமணிகிட்ட எடப்பாடி சொல்லி இருந்தாரு.. அதிமுகவும் 6-ல் இருந்து பேச தொடங்குச்சு..
திமுக தரப்புல பேசுன எ.வ.வேலுவும், “19 சீட் அப்படிங்கிறது எல்லாம் சாத்தியமே இல்லையே”ன்னு 6 தொகுதிகள் கொடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சாரு..
இதுக்கு அப்புறமாக பிரேமலதா ரெண்டு பக்கமும் பேசும் போது நம்பர்ஸை கொஞ்சமா குறைச்சாங்க..
திமுககிட்ட 14+1-கேட்டாங்க பிரேமலதா.. அதாவது விஜயகாந்துக்கு ராசியான நம்பர் 5.. அதனால 14 சீட் (1+4 கூட்டுத் தொகை 5) கொடுங்கன்னு பேசுனாங்க..
தேமுதிகவோட இந்த டிமாண்ட் ரொம்ப ஹைன்னு பீல் பண்ணுனதால திமுக பேச்சுவார்த்தையை தொடராம இருந்துச்சு..
ஆனா அதிமுக எஸ்பி வேலுமணி, பிரேமலதாகிட்ட
தொடர்ந்து பேசிகிட்டு இருந்தாரு..
அந்த டைம்ல்தான் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு ரொம்பவே நெருக்கடி கொடுத்தது.. விஜய்கிட்ட ராகுல் காந்தி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துறாருன்னும் தகவல்கள் எல்லாம் வந்துச்சு..
அப்ப சிஎம் ஸ்டாலின், ”அதிமுக கூட்டணியில இருந்து தேமுதிகவை நம்ம கூட்டணிக்கு கொண்டு வர்றது நமக்கு பலமா இருக்கும்.. காங்கிரஸும் இழுத்தடிச்சுகிட்டு இருக்குது.. அதனால தேமுதிககிட்ட மறுபடியும் பேசுங்க”ன்னு எ.வ.வேலுகிட்ட சொன்னாரு..
இதனால பிரேமலதா தரப்புகிட்ட பேசுன எ.வ.வேலு, “7 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் தர்றோம்”னு சொன்னார்.. தேமுதிக இதை ஏத்துக்கலை..
அப்ப சபரீசன், எல்.கே. சுதீஷை அழைச்சு பேசினாரு.. அந்த ஒன் டூ ஒன் மீட்டிங்குல, தேமுதிகவுக்கு 8 சீட் கொடுக்கலாம்னு பேசப்பட்டது..
அந்த நேரத்துல கோவை ஈஷாவுல சிவராத்திரி விழா நடந்துச்சு.. அதுல ராஜ்நாத் சிங், பிரேமலதா, எஸ்.பி. வேலுமணி கலந்துகிட்டாங்க.. பிரேமலதாவும் எஸ்.பி. வேலுமணியும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருந்தாங்க..
அவ்வளவுதான்.. ”பாஜக- அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டது.. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது”ன்னு சிவராத்திரி அன்னைக்கு நைட் சரமாரியாக பிரேக்கிங் நியூஸ் அடிக்க ஆரம்பிச்சாங்க..
அங்க சிவராத்திரி விழாவில இதையெல்லாம் பார்த்துகிட்ட இருந்த பிரேமலதா, தன் பக்கத்துல உட்கார்ந்திருந்த எஸ்.பி. வேலுமணிகிட்ட இந்த நியூஸ் எல்லாத்தையும் காண்பிச்சு சிரிச்சுகிட்டும் இருந்தாங்க..
உண்மையிலேயே அப்படி எல்லாம் அங்க பேச்சுவார்த்தையுமே நடக்கலை.. எஸ்பி வேலுமணிகிட்ட கேசுவலாதான் பிரேமலதா பேசிகிட்டும் இருந்தாங்க..
டிவி செய்திகளை பார்த்த திமுக தரப்பு டென்ஷனாகிடுச்சு.. உடனே சபரீசன், சுதீஷை கூப்பிட்டு பேசி, ”10 சட்டசபை தொகுதி +1 ராஜ்யசபா சீட் தர்றோம்.. டீல் முடிச்சுடலாம்”னு பேசுனாரு..
இந்த தகவல் எடப்பாடிக்கு கிடைக்க, ‘ஆஹா.. திமுக டீல் முடிக்குதேன்னு பதறிப் போய் மறுபடியும் பிரேமலதாகிட்ட எஸ்பி வேலுமணியை பேச சொன்னாரு.. அப்ப “10 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்”னு எஸ்பி வேலுமணி சொன்னாரு.. இந்த பேச்சுவார்த்தை விவரங்களையும் எடப்பாடிக்கு எஸ்பி வேலுமணி பாஸ் செஞ்சாரு..
ஒரு கட்டத்துல திமுக 10 பிளஸ் 1, அதிமுக 10 பிளஸ் 1 ன்னு ரெண்டு டீல் பிரேமலதா முன்னாடி இருந்துச்சு..
இதுல திமுகவோட 10 சட்டசபை தொகுதி பிளஸ் 1 ராஜ்யசபா சீட், 10 தொகுதி செலவையும் பார்த்துக்கிறோம் அப்படிங்கிற டீலை பிரேமலதா ஓகே சொல்ல
கூட்டணி கன்பார்ம் ஆனது..
திமுக கூட்டணியில தேமுதிக கன்பார்ம் ஆனதால அதிமுகவுல சீனியர்ஸ் எல்லாம் எடப்பாடி மேல செம்ம கோபமாகிட்டாங்க.. போன எம்.பி. எலக்ஷனுக்கு நம்ம கூட இருந்த கட்சியை இப்படி திமுக பக்கம் போக விட்டிருக்கவே கூடாதுன்னு கொந்தளிச்சுட்டாங்க.. எடப்பாடியுமே செம்ம அப்செட் ஆகிட்டாருதான்..
இன்னொரு பக்கம், தேமுதிகவை சேர்த்ததால கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அட்ஜஸ் செய்ய வேண்டிய கட்டாயத்துல திமுக சிக்கியிருச்சு..
சிஎம் ஸ்டாலின் கூட ஒரு கட்டத்துல, “அவசரப்பட்டு தேமுதிகவுக்கு 10 சீட்டுன்னு வாக்கு கொடுத்துட்டோமோ”ன்னும் நினைச்சாராம்..
அதுக்கு அப்புறமா மறுபடியும் எ.வ.வேலு, பிரேமலதா தரப்புகிட்ட 10 சீட்டை குறைச்சுக்குங்கன்னு பேச ஆரம்பிச்சாரு.. பிரேமலதாவோ முடியவே முடியாதுன்னு உறுதியா இருந்துட்டாங்க..
நேத்து ஒப்பந்தம் கையெழுத்தாகுறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட ஒரே ஒரு சீட்டை குறைச்சுக்குங்கன்னும் திமுக தரப்பு பேசியது.. பிரேமலதா ரொம்பவே பிடிவாதமா நின்னுட்டாங்க..
இதனால வேறவழியே இல்லாம நேத்து 10 சீட் ஒப்பந்தமும் கையெழுத்தாகிடுச்சு..
இப்ப எல்லா பிரச்சனையும் முடிஞ்சுதா? இல்லையா?
ரொம்ப ஆர்வம் போல.. பிரச்சனை இருக்குதுய்யா.. தேமுதிக விருப்ப பட்டியல்னு 25 தொகுதிகள் லிஸ்ட்டை திமுககிட்ட கொடுத்துருக்கு.. அதுல ஆம்பூர், விருத்தாசலம், விருகம்பாக்கம், விருதுநகர்னு 25 தொகுதிகள் இருந்துச்சு..
இந்த லிஸ்ட்டை பார்த்த திமுக தரப்பு, ”நிச்சயமா ஆம்பூர் தொகுதியை கொடுக்க சான்ஸ் இல்லை.. கேப்டன் நின்னு ஜெயிச்ச தொகுதி விருத்தாசலம்.. அதுல பிரேமலதா நிக்கட்டும்.. பையன் விஜய பிரபாகரனை விருதுநகர் தொகுதியில நிக்க வையுங்க.. எல்லாரையும் ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்பு”ன்னு சொல்லி இருக்காங்க..
திமுகவுல கூட, “தேமுதிகவுக்கு எதுக்கு 10 சீட்? அவ்வளவு ஓட்டு சதவீதம் வெச்சிருக்கா?ன்னு சீனியர்ஸ் சிலர் கேட்டாலும் கூட, “தேமுதிக வந்ததால நமக்கு வெற்றி இன்னும் உறுதியாகிடுச்சுன்னு”னு சந்தோஷ குரலும் அறிவாலயத்தில் கேட்குதய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக