ஞாயிறு, 29 மார்ச், 2026

திமுக வேட்பாளர்கள்: 4 முஸ்லிம்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!

 minnambalam.com  - Mathi  : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 5 பேர் முஸ்லிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்.
5) டாக்டர் சுபேர் கான்- ராயபுரம்
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2


மமக -2
மஜக- 1
எஸ்டிபிஐ- 1

என முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டுமே 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள் , பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமூகங்களுக்கும் உரிய பிரதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்களில் 60-க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். 18 பேர் பெண்கள்.

பட்டதாரிகள் 125; மருத்துவர்கள் 15 பேர்; பொறியாளர்கள் 17 பேர்; வழக்கறிஞர்கள் 29 பேர். முனைவர்கள் 7 பேர்
164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். 80% படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக.

சென்னையில் 6 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தி.நகர் கருணாநிதி; எழும்பூர்- பரந்தாமன்; அண்ணாநகர்- மோகன்; வில்லிவாக்கம் வெற்றியழகன்; ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, திருவிக நகர் தாயகம் கவி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை

கன்னியாகுமரி மகேஷ், தஞ்சாவூர் சண் ராமச்சந்திரன், திருப்பூர் தினேஷ்குமார், ஓசூர் சத்யா என 4 மேயர்கள் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாலக்கோடு தொகுதியில் முன்னாள் மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார்.

கருத்துகள் இல்லை: