சனி, 28 மார்ச், 2026

யாழ்மாவட்டம் திருட்டு மணல் உழவு இயந்திரம் மோதி போலீஸ் உயிரிழப்பு!

hirunews : சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவல்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
இதன் போது மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.உழவு இயந்திரம் நிறுத்தாது காவல்துறை உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
 
வீரகேசரி :யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் அதிகாரி மரணம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை, உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திர சாரதியை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களமிறங்கி தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை: