புதன், 25 மார்ச், 2026

1996 இல் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமல் ஹாசன்

Kalaignar 100 Ceremony Updates: Kamal Haasan Rajnikanth Full Speech Check  Here | Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய  கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல் ...

ராதா மனோகர் :  அம்மையார் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமலஹாசன்!  ஒரு பிளாஷ் பேக் ( மீள் பதிவு 28 -5-2025)
சுதாகரன் ஆடம்பர திருமணத்திற்கு பின்பு (1996 இல்) நடந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தன் தோல்வியை ஓரளவு ஊகித்து விட்டார்.
எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்
அந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் திரு கமலஹாசனுக்கு 100 கோடி தருவதாக தூண்டில் விட்டு பார்த்தார்! 
1996 இல் நூறு கோடி என்பது சாதாரண தொகை அல்ல.
ஆனாலும் கமலஹாசன் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து விட்டு அமேரிக்கா சென்றுவிட்டார்
செல்லும்போது கலைஞரை சந்தித்து அய்யா நீங்கள் வெற்றி பெறப்போகிறீர்கள்,
இதை அம்மையாரின் டீல் முயற்சியை பற்றியும் கலைஞரிடம் கூறிவிட்டு சென்றார்.


அரசியலில் என்னென்னெவோ எல்லாம் நடக்கும்
நட்பு பகைமை கோபம் வெறுப்பு அன்பு ஆதரவு எல்லாம் இருக்கும்
ஆனாலும் அவ்வப்போது நடக்கும் சில நல்ல விடயங்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
கமலஹாசன் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினராக பொறுப்பேற்பதை கலைஞர் நிச்சயம் வாழ்த்துவார்!
கமலஹாசன் அவர்களே நீங்கள் உண்மையில் ஒரு அறிவாளிதான்
கொஞ்சம் முற்போக்காக சிந்திப்பவர்
உங்களிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்கிறேன் ஏமாற்றி விடாதீர்கள்,
ஏராளமான பல மாநில அவை உறுப்பினர்கள் போல ஆசனத்திற்கு பாரமாக இருக்காமல்
தேவைக்கு ஏற்ப துணிந்து குரல் கொடுங்கள்

கருத்துகள் இல்லை: