tamil.oneindia.com -Rajkumar R : : சென்னை: விஜய் பல நட்சத்திர ஹோட்டல்களில் குடித்து விட்டு கலாட்டா செய்ததை நானே பார்த்திருக்கிறேன் எனவும், விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் விஜய்க்கு எதிராகவே திரும்புவார் என கடுமையாக விமர்சித்துள்ளார் திருச்சி சூர்யா.
ஒன்இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு பேட்டியளித்த அவரது கருத்துகள் தான் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேசியுள்ள அவர்," மக்களுக்கு நல்லது செய்வேன் என சொல்லும் விஜய் தனது மனைவிக்கே நல்லது செய்யவில்லை தனது மகனுக்கும் நல்லது செய்யவில்லை.
விஜய் தனது மகனுக்கும் மனைவிக்கும் உதவி செய்யவில்லை. எனவே அவரை வைத்து படம் எடுங்கள் என உதயநிதி தான் பேசினார். விஜயின் மனைவி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. பெண்களுக்கு உதவி செய்கிறேன் என்கிறார். அஞ்சலை அம்மாளையும் வேலு நாச்சியாரையும் கொள்கை தலைவர்கள் என்கிறார். ஆனால் அவரது மனைவி எங்கே இருக்கிறார். பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் பெண்களை போற்ற வேண்டும் என சொல்கிறீர்கள்.
உங்கள் வீட்டின் இல்லத்தரசி எங்கே இருக்கிறார். விஜய் மீது அவரது மனைவி உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். அரசியல் சூழல் காரணமாக நாளை அவரே விஜய்க்கு எதிராக பேசலாம். சாதாரண ஆடியோ லாஞ்சுக்கு கூட மனைவியை அழைத்து வந்து முன் சீட்டில் உட்கார வைக்கும் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின் ஏன் அவரை வெளியே காட்டவில்லை. உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினால் நன்றாக இருக்காது.
ஆனால் விஜய் பல நட்சத்திர ஹோட்டல்களில் குடித்து விட்டு கலாட்டா செய்ததை நானே பார்த்திருக்கிறேன். பல நடிகைகளுடன் விஜய் என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். அப்படி உங்கள் வாழ்க்கை கறை படிந்ததாக இருக்கிறது. விஜயின் மனைவி விஜய்க்கு எதிராக திரும்பினால் அவர் திமுகவுக்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. ஏன் அவர் பாஜகவுக்கு செல்லக்கூடாதா?
விஜய் மீது அவரது மனைவிக்கு கடுமையான கோபம் இருக்கிறது. தனியாக ஒரு சார்ட்டட் பிளைட் எடுத்துக் கொண்டு கீர்த்தி சுரேஷின் கல்யாணத்திற்கு திரிஷாவுடன் சென்றதிலிருந்து அவர் கோபமாகத்தான் இருக்கிறார். இது போன்ற விஷயங்கள் அவரை இன்னும் கோபம் ஆக்கி வைத்திருக்கிறது. அவர் சமாதானம் அவர் போல இல்லை. விஜய் மேலும் மேலும் இதே போன்று செய்து கொண்டிருந்தால் அவர் வெடித்துக் கிளம்பி விஜய்க்கு எதிராகவே திரும்புவார். என்பது தான் எனக்கு கிடைத்த தகவல்" என கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக