இந்த யாழ்ப்பாண பெண் வழக்கறிஞர் ஹிட்லரின் மனித குல விரோத கொலைகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார்
இவருக்கு anti semitic laws ஆன்டி செமிட்டிக் சட்டம் பற்றி தெரியவில்லை.
இவர் ஏதாவது ஒரு மேற்கு நாட்டிற்கு பயணமானால் இந்த ஹிட்லர் புகழ் பாடும் காணொளி அந்த மேற்கு நாட்டவர்களின் கண்களில் படாமல் இருக்க வேண்டுமே பிள்ளையாரப்பா!
" காணொளியில் இவர் பேசிய பாசிச காதல் வசனங்கள் இதுதான்:
நாங்கள் ஏற்கனவே கதைச்சிருக்கிறம் ஹிட்லரை பற்றி.
தன்னுடைய சொந்த இனத்திற்காக போராட்டம் என்ற ஒரு விடயத்திற்காக,
அந்த போராட்டத்தில் பல கொலைகள் நடைபெறும்
பல உயிர்ச்சாவுகள் இடம்பெறும்
அதெல்லாவற்ரையும் வைத்து நாங்கள் ஒரு தலைமைத்துவத்தை பிழையாக கூற முடியாது"
Arulanandam Arun : பெரியாரை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் குறுக்கு வெட்டு முகம் இதுவே!
தோழர் Rooban Sivarajah எழுதிய நீண்ட விளக்கத்தை வாசித்ததனால் மகனுக்கு பாடசாலை பாடங்கள் படிப்பதில் உதவி செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பேட்டியைப் சும்மா பார்ப்போம் என்று தட்டித் தட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.
நிறுத்த முடியவில்லை. எழுத்தாளர் சாரு நிவேதிதா அடிக்கடி மலத்தை மிதித்தது போல் உணர்ந்தேன் என்று எழுதுவார். நானோ மலக்கிடங்கில் விழுந்தது போல் உணர்ந்தேன்.
முக்கியமாக தென்னிந்திய உறவுகளே!
பெரியாரை எதிர்க்கும் ஈழத்துப் பண்டிதர்களின் யதார்த்த நிலை இதுவே!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இந்த ஈழத்துப் புத்திஜீவியின் பேட்டியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு பேசும் இந்தச் சட்டத்தரணியின் மனப்பாங்குதான் நாம் தொடர்ச்சியாகக் கூறி வரும் மேட்டுக்குடி சைவ வெள்ளாளிய ஆதிக்கசாதி பாசிச மனநிலை.
சைவ சித்தாந்த தமிழ் கோட்பாடு என்றால் கொலைகள் செய்வது என்னும் மாபெரும் ஆன்மீக உண்மையை இந்தப் பேட்டியைப் பார்த்து அறிந்து கொண்டேன்.
பேட்டி காண்பவர்- உலக தமிழ் தேசியம் என்கின்ற பொது நிலைக்குள் வருபவர்கள் ஈழத்தமிழ் தேசியத்தை குறுந்தேசியவாதம் என்று சொல்கின்ற ஒரு பார்வை இருக்கின்றது. இது பற்றி உங்கள் பார்வை என்ன?
சட்டத்தரணியும் தமிழ் தேசிய வாதியுமெனத் தன்னை அடையாளப்படுத்தும் பெண்மனியின் பதில் - “நாங்கள் ஜேர்மனியர்களை எடுத்துப் பார்த்தோம் என்று சொன்னால் ஜேர்மனியர்களுக்காக ஹிட்லர் போராடி இருக்கின்றார். “
“ஆனால் அந்த ஜேர்மனியர்களுடைய வரலாறு அழிக்கப்பட்டிருக்கின்றது. எவ்வாறு அழிக்கப்பட்டிருக்கின்றது என்றால் ஹிட்லர் ஒரு கொடூரவாதி, ஹிட்லர் ஒரு கொலைகாரன், ஹிட்லர் ஒரு கெட்டவன் என்று சொல்லி அந்த வரலாறு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. “
“அது போல எங்களுடைய ஈழத்தமிழர் தேசியத்தையும் மழுங்கடிப்பதற்கான சில செயற்பாடுகள் தான் இன்று உலகளாவிய அளவில் நடந்து கொண்டு வருகின்றது. ஈழத்தமிழ் தேசியம் என்பது எல்லாத் தமிழ் தேசியத்தையும் விட விசேடமானது.”
சகோதரப்படுகொலைகள் குறித்த மற்றொரு கேள்விக்கு இப்புத்திஜீவி உதிர்த்த கருத்து கீழே தொடர்கிறது……….
“நாங்கள் ஏற்கனவே ஹிட்லரைப் பற்றி கதைத்திருக்கின்றோம்.”
“தன்னுடைய இனத்துக்காக ஒரு போராட்டம் என்று வந்தால் அந்தப் போராட்டத்தில பல கொலைகள் நடைபெறும். பல உயிர்ச்சாவுகள் இடம்பெறும். அது எல்லாவற்றையும் வைத்து நாங்கள் தலைமைத்துவத்தை பிழையாக கூற முடியாது.”
“இப்ப பிரிட்டிஷ்காரன் படை எடுத்து வரும் போது அந்தந்த காலனித்துவ நாடுகளில இருந்தவர்களைக் கொலை செய்யாமலா விட்டிருந்தார்கள். மகாபாரத யுத்தத்தில் ராமாயணத்தில் அண்ணன் தம்பிகள் எதிர் எதிராக நின்று போர் புரிந்தார்கள். அப்படி இருக்கும் போது இவ்வாறான விடயங்களை வைத்து நாங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற முடியுமா..”
“ மகாபாரத யுத்தத்தில் கெளரவர்களும் பாண்டவர்களும் எதிர் எதிர் அணியில் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் சகோதரர்கள், இரத்த உறவுகள். இப்படியான விடயங்கள் எங்களுடைய சைவ சித்தாந்த கோட்பாடுகள். தமிழ் கோட்பாடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக