வெள்ளி, 7 மார்ச், 2025

Madagascar மின்சார வசதியில்லாத மடகாஸ்கர் கிராமத்திற்கு வெளிச்சம் தந்த சோலார் பாட்டிகள்

 bbc.com : மின்சார வசதியில்லாத மடகாஸ்கர் கிராமத்திற்கு வெளிச்சம் தந்த சோலார் பாட்டிகள்
மடகாஸ்கரின் மின்சார விநியோக கட்டமைப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ளது கிவாலோ எனும் கிராமம். ஆனால் இப்போது அந்தி சாயும்போது, இந்தக் கிராமமும் வெளிச்சத்தைப் பெறுகிறது.
இதற்கு காரணம் இந்த கிராமத்தின் பாட்டிகள். இவர்களை 'சோலார் பாட்டிகள்' என அழைக்கிறார்கள். இவர்கள் கிராமத்தின் பல வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளார்கள்.
இவர்கள் சோலார் பொறியாளர்களாக மாற பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். பேர்ஃபுட் காலேஜ் என்ற தொண்டு நிறுவனம் இந்த பயிற்சியை அளித்தது.



இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், கிராமத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்குவதும். இது ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பேட்டரிகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் தேவையை குறைக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2030க்குள் 700 பாட்டிகளுக்கு சோலார் பயிற்சி அளிப்பதும், மடகாஸ்கரின் 5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதும் அவர்களது இலக்காக உள்ளது.

இந்தப் பகுதியில் வருடம் முழுவதும் சூரியன் பிரகாசிக்கிறது. மழைக் காலத்திலும் கூட. எனவே, சோலார் பேனல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என கிவாலோ கிராம மக்கள் கூறுகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கருத்துகள் இல்லை: