தேசம் அருள்மொழிவர்மன் : யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில் !
மார்ச் முதலாம் திகதி லண்டன் மெய்வழி ஊடகத்தின் சாம் பிரதீபனுக்கு வழங்கிய நேர்காணலில் பாலியல் குற்றவாளியான பெண்களை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானின் வழிநின்று பெரியாரை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகின்றார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறவழி கூடத் தெரியாதவர் போல் நேர்காணலில் பதிலளிக்கும் சட்டத்தரணி வைஷ்ணவி பெயரளவில் தமிழ் தேசியம் பற்றி கதைத்த போதும் சாதிய ஒடுக்குமுறைக்கு பெண் அடிமைத்தனத்தை மேற்கொள்பவர்களோடு தன்னை இனம்காட்டி வருகின்றார்.
சட்டத்தரணி வைஷ்ணவிக்கு ஒருபடி மேலே சென்று சீமானுக்கு கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று கருக்கலைப்பைப் பற்றியல்ல, புளகாங்கிதம் அடைபவர் சட்டத்தரணி உமாகரன்
பெரியாரைப் பற்றி 2009க்கு முன்பு ஈழத்தமிழர்கள் பேசியிருக்கிறார்களா என்று படுமுட்டாள்தனமாகக் கேள்விகட்கும் அளவுக்குதான் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற சட்டத்தரணி வைஷ்ணவியின் அறிவு இருக்கின்றது. இந்தப் பட்டம்பெறாத சாதராணர்கள் பலருக்கே மிகத் தெரிந்த விடயங்கள் கூட சட்டத்தரணி வைஷ்ணவிக்கு விளங்கவில்லை. 1989 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான கிட்டு ஆரம்பக் கல்வியைத் தாண்டாதவர், ஆனால் சட்டத்தரணி வைஷ்ணவி சட்டத்தரணி உமாகரன் போல் கவர்ச்சிக்காக தமிழ் தேசியத்தை போர்த்திக்கொள்ளாதவர், பெரியாரைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதைக் கேட்கலாம்:
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ரகுராமிற்கு ஆதரவாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு எதிராகவும் ஐபிசி யில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தன்னுடைய சொந்த நலன்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் என கலைப்பீடாதிபதி ரகுராம் சித்தரித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் பாணியில் ஒரு ஒலிப்பதிவையும் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இல்லாமல் ஒடுக்குபவர்களின் பக்கம் நிற்கும் இந்த வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியத்தின் புற்றுநோயாகப் பரவி வருகின்றனர்.
ஒரு பெண்ணை ஏழு தடவை கருக்கலைப்புச் செய்ய வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் சிமானின் கருத்துக்களை தலையில் தூக்கிகொண்டாடுகின்றார் சட்டத்தரணி வைஷ்ணவி. மாறாக யாழ் தாவடியில் பெரியாருக்கும் அம்பேக்காருக்கும் சிலை எழுப்பப் போவதாகச் சபதம் போட்டுள்ளார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்.
வைஷ்ணவி தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் 2010இற்குப் பின் சீமானிடம் மேய்ந்துவிட்டு பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி உண்ணும் என்பது போல் கருத்துக்களை கக்கி வருகின்றார். மிக மோசமான இனவாதத்தை கக்குகின்றார். பெரியாரை தெலுங்கர் என்கின்றார். பெரியார் தமிழர்களைக் காடையர் என்று கூறிவிட்டார் என்று கதறுகின்றார்.
பிரானிஸில் சுஜூகூல் என்பவரை சிலர் தாக்கியதும் அதனை புலம்பெயர் ஈழத்தமிழ் காடையர்கள் தாக்கினார்கள் என்று எழுதுகின்றோம். குனடா தெருத்திருவிழாவை சிலர் குழப்பிய போது கனடிய ஈழத்தமிழ் காடையர்கள் தெருத் திருவிழாவை குழப்பியதாக எழுதுகின்றோம். 1983ல் நடந்த இனக்கலவரத்தை சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர் என்று எழுதுகின்றோம்.
அதே போல் பெரியார் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள காடைத்தனங்களைக் கண்டு பொங்கியெழுந்தை, பாலியல் லஞ்சம் கேட்கும் கலாநிதிகளுக்கு வக்காளத்து வாங்கும் வைஷ்ணவி கொதிப்பது ஆச்சரியமல்ல.
சட்டத்தரணி வைஷ்ணவியினதும் அவர் போன்ற குறையறிவுடைய சீமானின் கருத்துக்களால் சீக்குப் பிடித்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேர்ணல் கிட்டு மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். கேர்ணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட ஏனைய இயக்கங்களை அழித்ததில் முன்நின்றவர். ஆனால் பிரித்தானியாவிற்கு வந்த பின் அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டதுடன் ஏனைய அமைப்புக்களையும் சந்தித்து உரையாடி நல்லுறவை ஏற்படுத்த முற்பட்டவர். இந்த மாற்றங்களை அவர் தமிழ் நெற்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக