ராதா மனோகர் : ரணில் விக்கிரமசிங்கவை லண்டன் வாழ் மெஹ்தி ஹசன் என்ற ஊடக வியாபாரி வறுத்தெடுத்தார் என்று,
ஒட்டு மொத்த புலி ரசிகர்களும் அவர்களின் லேட்டஸ்ட் கூட்டாளிகளான ஜேவிபி ஆதரவாளர்களும் ஏக ஆர்கஸத்தில் திளைத்துள்ளார்கள்.
ஜேவிபியை கண்டு அஞ்சும் புலி ரசிகர்களின் ஜேவிபி காதல் புரிந்து கொள்ள முடிகிறது
இது ஒரு நாள்பட்ட ஸ்டார்க்ஹோம் சின்ரோம் நோய் .
இவர்களின் லண்டன் அடியாள் ராஜபக்ஸவிடமும் புலிகளிடமும் கேட்கவேண்டிய எக்கச்சக்கமான கேள்விகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டு அதற்கு கூட அவரை பதில் சொல்ல விடாமல் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கிய விதம் அப்படியே ஊடக நாய் அர்னாப் கொசுவாமியை நினைவு படுகிறது
புலிகளின் இஸ்லாமிய இனச்சுத்திகரிப்பு பற்றி Al jazeeraa மெஹ்தி ஹசன் என்றாவது வாயை திறந்திருக்கிறார்ரா? நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று விட்டதாகதான் நேற்று வரை நான் கருதி இருந்தேன்.
அவர் மீதான லண்டன் தாக்குதல் வேறு ஒரு முக்கிய செய்தியை கூறுகிறது
அதாவது ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து அவரின் எதிரிகள் இப்போதும் பயப்படுகிறார்கள்!
அத்தனை புலி வியாபாரிகளையும் சுற்றி வர இருத்தி விட்டு ரணில் விக்கிரமசிங்கா மீது அபாண்டமான பொய்யான ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்கி அடுக்கி அவற்றில் எதற்கும் பதில் சொல்லவும் விடாமல் சுயஇன்பம் கண்டுள்ளார்கள்.
தங்களுக்கு இன்னும் விக்டிம் சின்றோம் இருப்பதாக காட்டி லண்டன் டொரோண்டோ சிட்னிகளின் நிரந்தர வசிப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சியாகதான் இது தெரிகிறது .. ம்ம் வாழ்த்துக்கள்!
வழமை போல இவர்கள் எல்லோரும் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை ரொம்பவே அண்டர் எஸ்டிமேட் பண்ணுகிறார்கள் .
அவரை சரியாக எஸ்டிமேட் பண்ணுவதற்கு ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக