ஜே. ஆர் ஜெயவத்தனா, ஆர். பிரேமதாசா, சந்திரிக்கா அம்மையார் ,மகிந்த ராஜபட்ச , மைத்திரிபால, கோட்டாபாய ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை.... ரணிலிடம் கேட்கலாமா என்ற Home work கூட சரியாக செய்யாத நிருபர்.... ஏன் தற்போதைய ஜனாதிபதி அநூரா குமாரவிடம் கூட இந்த கேள்விகளை தாராளமாக கேட்டு பதிலை பெறலாம். ... யாரிடம் எதை கேட்க வேண்டும் என்ற Home work சரியாக செய்யவில்லையே...
Selvarajah Kalmunai : அன்மையில் முன்னால் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அல்ஜசீரா நிருபர் மெஹந்தி ஹசனுக்கும் இடையிலான சர்வதேச நேர்காணல் பற்றி பலரும் பேசுகிறார்கள்.
பலரும் பேசலாம். இலங்கை அரசியல் அறிவு.... யதார்த்தம் தெரிந்தவர்களாகிய நாம் என்ன பேசலாம்....
Computer என்ற இயந்திரத்திற்கு கொடுக்க படும் தரவுகளை உள்வாங்கி கொண்டு செயற்படும்.
பிழையான தரவுகள் கொடுக்கபட்டால் , முழுமையான தரவுகள் கொடுக்க படா விட்டால் , பக்க சார்பான தரவுகள் கொடுக்க பட்டால் , முடிவுகளும் அதற்க்கு ஏற்ப தான் வரும்.
இங்கு , கேட்க பட்ட கேள்விகள் சரியானவை. அவை நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியிடம் கேட்க பட வேண்டிய கேள்விகள் தான் . ஆனால் அவை எல்லாம் ரணிலின் கேட்க பட வேண்டிய கேள்வியாக என்பது நிருபருக்கு தெரியவில்லை.
இதில் சில கேள்விகளுக்கு ரணில் நேரடியாக பதில் சொல்ல வேண்டுமே தவிர எல்லாவற்றுக்கும் அல்ல.. இத்தகைய அடிப்படை விடயம், அதாவது இலங்கையிலுள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை , பாராளுமன்ற 2/3 பெரும்பான்மை பலம் இவை பற்றிய சரியான அறிவு ,புரிதலை பெறாத ஒருவரின் செவ்வி... Home work சரியாக செய்யாத நிருபர்.
ரணில் விக்கிரமசிங்க அமைச்சரா , பிரதமராக , ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது உண்மை. இதில் முழுமையான பலமுள்ள நிறைவேற்று ஜனாதிபதியாக அவரால் எப்ப செயற்பட முடிந்தது....
கிடைத்த ஜனாதிபதி பதவி கூட ,பின் கதவு , ராஜபக்ஷகளின் தயவில் தான் கிடைத்ததே தவிர அது மக்கள் வழங்கிய பதவி இல்லை. அந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க , ரணில் ராஜபட்ச என்று தான் அழைக்க பட்டார்.. பாராளுமன்றத்தில் எந்தவிதமான ஆதரவும் அவருக்கு, அவர் கட்சிக்கு இருக்கவில்லை... கைகள் கட்டப்பட்ட பட்ட ஜனாதிபதி...
இதை பற்றி நிருபர் அறிந்து இருந்தாரா...???
நல்லாட்சி அரசில் அதிகாரம் ஜனாதிபதி மைதிரியிடம் இருந்தது... தமது பிரதமர் என்ற அதிகாரத்தை , ரணில் பயன்படுத்த நினைத்த போது .... பதவி மகிந்தவிடம்... மைதிரியால் மாற்ற பட்டது.
இதை நிருபர் அறிந்து இருந்தாரா..???
இறுதியாக பாராளுமன்றமே ஜனாதிபதி மைதிரியால் கலைக்க பட்டது..
இதை நிருபர் அறிந்து இருந்தாரா...???
விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கூட அதிகாரம் சந்திரிக்கா அம்மையாரிடம் தான் இருந்தது என்பதை நிருபர் அறிந்து இருந்தாரா....???
ஆக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்க , மக்கள் பலத்துடன் கூடிய நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி பதவியையோ... பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியையோ வைத்து இருக்கவில்லை...மிக முக்கிய தீர்மானங்களை சுயமாக எடுக்க முடியாதவராக தான் ரணில் விக்கிரமசிங்க இருந்தார்.
இதை நிருபர் அறிந்து இருந்தாரா....???
முழுமையான மக்கள் பலம் , பாராளுமன்ற பலம் இருந்த நிறைவேற்று ஜனாதிபதிகளான... ஜே. ஆர் ஜெயவத்தனா, ஆர். பிரேமதாசா, சந்திரிக்கா அம்மையார் ,மகிந்த ராஜபட்ச , மைத்திரிபால, கோட்டாபாய ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை.... ரணிலிடம் கேட்கலாமா என்ற Home work கூட சரியாக செய்யாத நிருபர்.... ஏன் தற்போதைய ஜனாதிபதி அநூரா குமாரவிடம் கூட இந்த கேள்விகளை தாராளமாக கேட்டு பதிலை பெறலாம்.
அதிகமான அறிவு , தகுதி , ஆளுமை இருந்தாலும்.... யாரிடம் எதை கேட்க வேண்டும் என்ற Home work சரியாக செய்யவில்லையே...
இந்த பதிவு ... இலங்கை அரசியல் யாப்பு... ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்.... பாராளுமன்ற 2/3 பெரும்பான்மை பலம்.. மக்களின் வாக்களிப்பு மூலமான தெரிவுகள்... ஆகிய அடிப்படையிலான அறிவு உடையவர்களுக்கு மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக