![]() |
ராதா மனோகர் : உலக மகளிர் நாளுக்கு வாழ்த்து கூறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.
இந்த கேள்விக்கு நான் கண்டுகொண்ட பதில்தான் பாக்கியத்தம்மாள்!
வரலாற்று இலக்கியங்களில் உண்மையான பெண்களை,
அதாவது சாதாரண மனித இயல்புகளை வெளிக்காட்டும் பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு தூரம் உலாவ விட்டுள்ளார்கள்?
பெண்களை உயர்வாக காட்டுவதாக படைக்கப்படும் பெண் கதாபாத்திரங்களில் கூட ஆணாதிக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும் செயல்களைதான் பெரிதும் காண்கிறோம்.
ஒரு பெண் ஆண்களை விட அறிவுள்ளவளாக மேன்மையான தகுதிகள் உள்ளவளாக தப்பி தவறியும் காட்டினால் எங்கே ஆண்களின் மனம் புண்படுமோ என்று ஏராளமான இலக்கிய மூர்த்திகள் பயப்பட்டு இருக்கிறார்கள் போலும்?
இந்நிலையில்தான் எனக்குள் உறைந்திருந்த பாக்கியத்தம்மாளுக்கு வெளிச்சம் பாய்ச்சவேண்டும்
என்று கருதினேன்!
அந்த நோக்கத்தில் நான் கிறுக்கிய கோபுரம் கழுவ போன தீவட்டிகள் அந்த பணியை ஓரளவு செய்திருக்கிறது என்ற நம்பிக்கை எனக்குண்டு!
ஒட்டு மொத்த மக்கள் கூட்டமும் இதை ஒரு கேலிப்பொருளாக கருதினாலும்,
ஒட்டு மொத்த இலக்கிய கூட்டமும் இதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டோம் என்று அடம்பிடித்தாலும்,
எனக்கு எள்ளளவும் கவலை இல்லை!
இலக்கிய உலகில் .. குறிப்பாக வரலாற்று புனைகதைகளின் நீரோட்டத்தில் பயணிக்கும் கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் மெதுவாக ஆனால் நிச்சயமான வெற்றியை பெறுவார்கள்!
பெண் இலக்கிய உலகில் பாக்கியத்தம்மாள் ஒரு நட்சத்திரம்!
உலக மகளிர் நாள் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக