ராதா மனோகர் : இந்தியாவின் உண்மையான தாய் மொழிகள்!
இன்றும் போஜ்புரி மைதிலி சந்தாலி ஹரியான்வி போன்ற மொழிகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் பேசுகிறார்கள்
தங்களின் தாய் இந்த மொழிகளை பேசினால் தங்களை படிப்பறிவு அற்றவர்கள் என்று பிறர் கருதி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்
இவர்களின் மனதில் இந்த பழமையான மொழிகளை பற்றிய தாழ்வு மனப்பான்மையை விதைப்பதில் இந்தி பிரச்சாரகர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்
நம் தலைவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் தமிழ் தமிழ் என்று தமிழின் பெருமையை பேசினார்கள் என்று இப்போது புரிகிறது!
தாய்மொழி பற்றிய பெருமை ஒவ்வொருவருக்கும் இல்லையெனில் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதையே ஒரு கண்ணிய குறைவாக கருதி விடுவார்கள்.
இதனால்தான் போலும் பார்ப்பனர்கள் பேசும் போது அதிகமான ஆங்கில சொற்களையும் வசனங்களையும் தமிழோடு கலந்து பேசுகிறார்கள்.
எந்த பார்ப்பானும் ஆங்கில வசனங்களை இடையே செருகாமல் பேசுவதே இல்லை.
முன்பு சமஸ்கிருதத்தை திணித்து பேசினார்கள்
அதை திராவிட இயக்கம் அடித்து நொறுக்கியது.
சமஸ்கிருதம் ஆங்கிலம் கலந்த பேசுவது தந்திரமாக தமிழை சிறுமை படுத்தும் கேவல முயற்சி.
பார்ப்பனர்கள் தமிழோடு சமஸ்கிருதத்தை கலந்து பேசி மலையாளம் என்ற மொழியை தயாரித்தார்கள்,
.
போஜ்புரி மைதிலி சந்தாலி ஹரியான்வி போன்ற வடஇந்திய மண்ணின் மொழிகள் இன்றும் அவர்களின் குடும்ப மொழிகளாகத்தான் இருக்கின்றன.
இப்போதும் காலம் கடந்து விடவில்லை
மீளுருவாக்க முடியும்!
அவை திராவிட மொழிகள்தான்!
நாம் முயல வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக