tamil.oneindia.com - Vigneshkumar : ஹைதராபாத்: பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி இவர் பல பல பாடங்களைப் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார்.
இதற்கிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
இப்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக