வியாழன், 16 மார்ச், 2023

நடிகை மீனாவை தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? கொளுத்திப் போட்ட பயில்வான் ரங்கநாதன்!

 tamil.filmibeat.com  Mari S  : சென்னை: சினிமா நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி தொடர்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான இவர் தற்போது கொளுத்திப் போட்டிருப்பது ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கணவரை இழந்து வாடி வரும் நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் தனுஷ் என்கிற வெடி குண்டை தூக்கிப் போட்டு ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷ் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன என்று புதிய யூடியூப் வீடியோவில் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் பயில்வான் ரங்கநாதன். நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில், இப்படியொரு வதந்தி தீயாக கிளம்பி கோடம்பாக்கத்தையே உலுக்கி உள்ளது.

கணவரை இழந்த மீனா
நடிகை மீனா குழந்தையாக இருந்ததில் இருந்தே சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது அன்பையும் அள்ளி உள்ளார். கடந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக மீனாவின் கணவர் வித்தியாசாகர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த திரைத்துறையும் மீனாவுக்காக ஓடி வந்தது. சமீபத்தில் கூட ரஜினிகாந்தின் தலைமையில் மீனா 40 நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி தலைமையில்
மீனா 40 நிகழ்ச்சி சூப்பர்ஸ்டார் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு நடிகை மீனாவை பாராட்டினர். அந்த அளவுக்கு சினிமாவில் செல்வ செழிப்பும் நல்ல மதிப்பும் கொண்டுள்ள நடிகை மீனா பற்றி இப்படியொரு அவதூறு ஏன் சொல்றீங்க என பலரும் பயில்வான் ரங்கநாதன் வீடியோவுக்கு கீழ் விளாசி வருகின்றனர்.

தனுஷ் உடன் திருமணம்
மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கணவரை இழந்து மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வரும் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன என பயில்வான் ரங்கநாதன் தனது புதிய யூடியூப் வீடியோவில் பெரிய குண்டை தூக்கிப் போட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

ரஜினி மகள் போல
ரஜினியுடன் ஜோடிப் போட்டு நடித்தாலும் நடிகை மீனா அவருக்கு மகள் போலத்தான் இத்தனை வருடங்களாக பழகி வருகிறார். அதனால், கண்டிப்பாக தனுஷை மீனா திருமணம் செய்து கொண்டு தனது பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அனிருத்துடன் நெருக்கம்
அதே நேரத்தில் தனுஷை பற்றி மட்டுமின்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த வயதிலும் ஹாட்டாக வொர்க்கவுட் வீடியோ போட்டு வருகிறார் என்றும் அனிருத்தின் ஆபிசுக்கு அடிக்கடி சென்று வருவதை அவரது அப்பா ரஜினிகாந்தே அழைத்து கண்டித்துள்ளார் என்றும் அனிருத்துடன் மிகவும் நெருக்கமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழகி வருகிறார் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகளை பேசி தனுஷ், ரஜினிகாந்த் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். பயில்வான் ரங்கநாதன் வீடியோவுக்கு கீழ் பலரும் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: