நக்கீரன் : பட்டாசு வெடித்தால் கார் கண்ணாடி உடையுமா என்று கேட்டால் “அதான் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்துவிட்டதே...” என்று டென்ஷனாகச் சொல்கிறார்கள் ஆளும்கட்சியினர்.
விருதுநகர் – சூலக்கரையில் பகுதி நேர நியாய விலைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்தார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் நியாய விலைக்கடை கிடையாது.
2 கி.மீ தள்ளியிருந்த ரேசன் கடையில்தான் மக்கள் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
Minister's car window broken due to firecracker explosion virudhunagar
நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அந்தப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தனர்.
அது சற்று கடினமாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசு போலும். அது வெடித்துச் சிதறியபோது அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது.
அதனால் அங்கிருந்த வேறு காரில் ஏறி அமைச்சர் கிளம்ப வேண்டியதாயிற்று என்கின்றனர் அங்கு கூடியிருந்தவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக