வியாழன், 16 மார்ச், 2023

நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

 tamil.oneindia.com - Shyamsundar  : அன்காரா; நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்
இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பின்னர் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர் சம்பவங்கள்
டாங்கோவில் 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் சிறிய அளவில் அங்கங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

துருக்கி நிலநடுக்கம்
துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர். துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மாயபண்டர் பகுதியில் இருந்து 67 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .

நியூசிலாந்து
இந்த நிலையில்தான் தற்போது நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு முன் வெல்லிங்டன் அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: