திங்கள், 13 மார்ச், 2023

13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- மல்லிகார்ஜுன கார்கே அதிரடி திட்டம்

 மாலைமலர் : புதுடெல்லி: பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.
புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார்.


அதுபோல 9 பொதுச் செயலாளர்களையும் மாற்ற ராகுலிடம் அவர் அனுமதி கேட்டுள்ளார்.
இவை தவிர மாநில பொறுப்பாளர்களையும் கூண்டோடு மாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
சோனியா, ராகுல் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகே புதிய மாநில தலைவர்கள் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: