திங்கள், 13 மார்ச், 2023

CM சார் தேங்க்ஸ் .. பிரஷாந்த் கிஷோர் சொன்னதுமே.. பின்னாடியே வந்துட்டாரு ராஜீவ் காந்தி.. அடடே சீமான்

tamil.oneindia.com  -  Hemavandhana : ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியதையடுத்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. இதற்கு பிரசாந்த் கிஷோர் முதல்வருக்கு நன்றி சொல்லியுள்ள நிலையில், திமுக தரப்பு அதை வரவேற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.. அதில் வடமாநில தொழிலாளர்களை சீமான் மிரட்டுவதாக சர்ச்சைகள் கிளம்பின.
இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்தார் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, அதை சுட்டிக்காட்டியும் இருந்தார்.
ஹஹாஹா..வட இந்தியர்கள் 20,000 பேர் எனக்கு ஓட்டு போட்டார்களா?
சீமான் கருத்துக்கு வானதி சீனிவாசன் பதில் ஹஹாஹா..வட இந்தியர்கள் 20,000 பேர் எனக்கு ஓட்டு போட்டார்களா?சீமான் கருத்துக்கு வானதி சீனிவாசன் பதில்

ரேப் கேஸ்
அந்த வீடியோவில் சீமான் பேசும்போது, "இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான்.. நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான்... எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒரே வாரத்தில் மொத்த பேரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்... கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் எல்லாரையும் தூக்கி போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன்... அவனுக்கு சோறு போட மாட்டேன்.,. அவங்களை விடவும் மாட்டேன். ஒரு வாரத்துக்குள்ளே எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் பாருங்க" என்று பேசியிருந்தார்.

சீமான் பேச்சு
இந்த வீடியோவை பிரஷாந்த் கிஷோர் பகிர்ந்ததுடன், "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா?" என்று காட்டமாக கேட்டிருந்தார்...

வதந்திகள்
பிரசாந்த் கிஷோரின் இந்த கேள்வி, அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. காரணம், சமீபகாலமாகவே, தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. எனவே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்திகளை பரப்புபவர்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் சற்று கடுமையாகவே கூறியிருந்தார்..

அருந்ததியர்
அதுமட்டுமல்லாமல், தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்த பீகார் அரசுக் குழுவும் "தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்" என்று உறுதி செய்தது. இந்தப் பின்னணியில், சீமான் குறித்து பிரசாந்த் கிஷோர், வைத்திருந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. அதுமட்டுமல்ல, பிரச்சாரக் கூட்டத்தில், பட்டியலின அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர்.

ட்வீட் கணக்கு
இது தொடர்பாக விளக்கமளிக்க நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.. இதற்கு பிறகுதான், திருப்பூர் மாவட்ட போலீஸ் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டு, அதில் பிரசாந்த் கிஷோர் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உடனடியாக சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

பிகே கறார்
இதையடுத்து, சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரஷாந்த் கிஷோர், "உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.. இதனை திமுக தரப்பு வரவேற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ட்வீட்டிற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''குடிதேஷ் கோமாளி சீமான், வாயில் வந்ததை எல்லாம் பேசும் வாய் சொல்வீரன்!. பிரசாந்த் கிஷோர் அவர்களே! அந்த பிழைப்புவாதி போல் இல்லை தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசும்!. எங்கள் மீது திணிக்கப்படும் இந்தியை தான் நாங்கள் என்றும் எதிர்க்கிறோம்! இந்தி பேசும் மக்களை அல்ல!'' என்று பதிவிட்டுள்ளார்.

ஹாட் ட்வீட்
இதையெல்லாம் பார்த்து நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்து போயுள்ளனர்.. 10 வருடம் கழித்து ஆட்சி அமைய, உறுதுணையாக நின்று, தேர்தல் பணியாற்றியிருந்தது பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்.. இந்நிலையில், ஒரே ஒரு ட்வீட் போட்டு பிரசாந்த் கிஷோர், கோரிக்கை வைத்ததுமே, திமுக அரசு உடனே நாம் தமிழர் கட்சி மீது வழக்கு பதிவு செய்வதா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அத்துடன் ராஜீவ் காந்தி ட்விட்டருக்குள்ளும் நுழைந்து, கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Seeman news and prashant kishore thanked chief minister stalin for filing a case against seeman

கருத்துகள் இல்லை: