மாலை மலர் : மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.
திருச்சியில் இன்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி சிவா வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தினர்.
அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி காவல் நிலையத்திலும் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக வட்டச்செயலாளர் மூவேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில் எம்.பி. ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சிவா ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமைச்சர் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக