புதன், 15 மார்ச், 2023

சவுக்கு சங்கர் எம்.எம்.அப்துல்லா இடையே நடந்த மோதல்! முழு விவரம்!

Abdulla , soniya arunkumar

abdulla affair . 'கைக்கு அஞ்சு! வாய்க்கு பத்து!' அர்த்தராத்திரியில் தன்னிலை மறந்த ஆபாச  எம்.பி அப்துல்லா
 Mohan Raj kathir.news :  அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பொதுவெளியில்  ராஜ்யசபா  எம்.பி அப்துல்லா தரை லோக்கலாக இறங்கி பேசிய விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில அரசியல்வாதிகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதையே பெருமையாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள்,
அதனையும் பெருமையாக வேறு சட்டை காலரை தூக்கி ‘எப்படி பேசிட்டோம் பார்த்தியா, நாமெல்லாம் யாரு?’ என பெருமையாக கூறுவார்கள்,
அதனை கேட்டுகொண்டு  தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்,  தொண்டர்கள் குஷியாகி விசிலடிப்பார்கள்.

 பேச்சாளர் சைதை சாதிக்  நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பா.ஜ.கவில் உள்ள பெண்களை குறிப்பாக நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதால் டெல்லி சென்ற தேசிய மகளிர் ஆணையத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு சமீபத்திய சாதனை,

பொதுவெளியில் பேசுகிறோமே! மக்கள் பிரதிநிதியாக பேசுகிறோமே மக்களிடத்தில் ஓட்டு கேட்க செல்ல வேண்டுமே! ஏற்கனவே கையெடுத்து கும்பிட்டு ஓட்டு வாங்கினோமே! அந்த கையெடுத்து கும்பிட்டதற்கு தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்ற கொஞ்சம் கூட நினைப்பும் இல்லாமல் தன் வாயில் வந்ததை அப்படியே பேசி விடுகிறார்கள் சிலர்

அப்படி  எம்பி அப்துல்லா பேசியது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது,
மூத்த பத்திரிகையாளராக தொடர்ந்து பரபரப்பாக இயங்கக்கூடியவர் சவுக்கு சங்கர், இவர் அனைத்து கட்சிகளையும் விமர்சித்து அரசியல் விமர்சகராக தனது சமூக வலைதள பதிவுகள் மூலமும், யூடியூப் சேனல் நேர்காணல்கள் மூலமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இதெற்கெல்லாம் மேலாக ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை மறந்த  அப்துல்லா  MP தானே போய் ஆபாசமாக பேசிய விவகாரம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
சவுக்கு சங்கரின் சமூக வலைதள திமுக விமர்சன பதிவை குறிப்பிட்டு திமுக எம்.பி அப்துல்லா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், தன்னை பிம்ப் போல சின்னமலை ஐ.டி டீம் ஃபோட்டோஷாப் செய்ததாக சவுக்கு சொல்கிறாரே?

சின்னமலை டீம் செய்து இருந்தால் மெரினா பீச் பின்ணணியில் ‘கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து’ என போட்டு இருப்பார்கள். இவ்வளவு டீசண்டா பண்ணிருக்க மாட்டாங்க!! எனவே அவர்கள் அல்ல என மிகவும் கேவலமாக எம்.எம்.அப்துல்லா பதிவிட்டார்.

அதனை குறிப்பிட்ட சவுக்கு சங்கர், 'இவனெல்லாம் எம்பி. நல்ல ஆளை எம்.பி ஆக்கிருக்கீங்க' முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு சவுக்கு சங்கர் பதில் ட்வீட் போட்டார்.

இப்படியே தொடர்ந்த சமூக வலைதள பதிவுகள் இரண்டு மணி நேரம் நீடித்தது.
குடியரசு தின அரசு நிகழ்ச்சியில் 30 நிமிடம் உட்கார முடியாமல் பாதியில் அலட்சியமாக நிகழ்ச்சியை புறக்கணித்து சென்ற எம்.பி தொடர்ந்து இரண்டு மணிநேரம் சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கருடன் நேரத்தை சவுண்டுவிட்டு செலவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரவு 11 மணிவரை இணையத்தில் சண்டை போட்ட எம்.பி உங்களுக்கு எம்.பி சீட் எப்படி கிடைத்தது தெரியுமா என சவுக்கு சங்கர் கேள்வி கேட்கும் வரை தொடர்ந்தது.

இப்படி மக்கள் உலாவும் சமூகவலைத்தளத்தில் தான் ஒரு எம்.பி என்பதை மறந்து சுயநினைவின்றி   ஆபாசமாக பேசியது தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, மக்களும் இதெல்லாம் என்ன கூத்து என தலையில் அடித்து கொள்கின்றனர்.
kathir.news

1 கருத்து:

Mjfb சொன்னது…

என்ன சவுக்கு சங்கர் மூத்த பத்திரிக்கையாளரா ? எந்த பத்திரிக்கையில் எத்தனை வருடம் பணியாற்றினார் ? இதிலிருந்தே kathir.news - ன் ஒரு சார்புத்தன்மை வெட்ட வெளிச்சமாகிறது. Blogger has to sensor these kind of biased news, attempting to underrate the M.P. is visible