சனி, 19 மார்ச், 2022

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு

 Hemavandhana -  Oneindia Tamil : மதுரை: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு தந்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பற்றி அவதூறாக பேசியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்ற அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது..
அதாவது, ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய கடமையல்ல, எனவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தனர்.


இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் சில இடங்களில் போராட்டங்கள் நடந்தன.. கர்நாடகத்தில் இஸ்லாமியர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பும் கடந்த மார்ச் 17-ம் தேதி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.. இதில், மதுரையில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்ப்பை வழங்கிய கர்நாடக ஹைகோர்ட் நீதிபதிகளுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.. அதுவும், அந்த ஆர்ப்பாட்ட மேடையிலேயே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் ஒருவர் பேசும்போது, "ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் வாக்கிங் போய் கொண்டிருந்த நீதிபதியை, ஆட்டோவை ஏற்றி கொலை செய்தது எல்லாருக்குமே தெரியும்.. எல்லா இடத்திலும் உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இருக்கதான் செய்கிறார்கள்.. எனவே, கர்நாடக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விபத்து, கொலை என்று ஏதாவது ஒரு அசம்பாவிதத்திற்கு உள்ளானார்களேயானால், அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் பொறுப்பு" என்றார்.

அதுமட்டுமல்ல, "இப்போ என்ன? என் மீது கொலை மிரட்டல் கேஸ் போட போகிறீர்களா?.. முடிந்தால் போட்டுப் பாருங்கள்" என்று போலீஸாருக்கே மிரட்டல் விடுத்து ஒருவர் பேசியிருந்தார்.. இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஹைகோர்ட் நீதிபதிகளுக்கே கொலை மிரட்டலா? என்று மிரண்டனர்.. மத உணர்வை தூண்டும் வகையில் பேசிய, அந்த நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்

மிரட்டல் பேச்சு மேலும், இந்த கூட்டத்தில் பேசிய கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா உள்பட பலர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், நீதிபதிகளை மிரட்டும் வகையிலும் பேசினர்... எல்லாவற்றிற்கும் மேலாக, உயர்நீதிமன்றம் குறித்து எச்.ராஜா ஏற்கனவே பேசியிருந்த ஆடியோ ஒன்றையும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் கூட்டத்தில் பதிவிட்டு காட்டினார்..

எச்.ராஜா ஆடியோவை போட்டு விமர்சித்ததற்குதான், வானதி சீனிவாசன் கொந்தளித்தார். இந்த கூட்டத்தில் பேசிய அந்த நபரின் வீடியோவை ட்விட் செய்ததுடன், "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக பாஜக சார்பில் தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டது.. 3 பேர்மீது வழக்கு 3 பேர்மீது வழக்கு அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, நீதிபதி குறித்து அவதூறாக பேசிய, மாநிலதணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் இப்போது எங்கே என்று தெரியவில்லை.. தலைமறைவாக உள்ளதால், தல்லாகுளம் போலீசார் அவர்களை தேடி வருவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: