வெள்ளி, 18 மார்ச், 2022

கேரளா நம்பூதிரி நாயர்களின் கொடூர ஆட்சி.. மார்பகங்களை அறுப்பது வாடிக்கை


 Shahul Hameed 
:  அப்போதைய மலபார்/கொச்சி/திருவாங்கூர் பகுதிகளில் நீதியும், தண்டனைகளும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை...
பிராமணர்களின் அறிவுரைகள் படி மட்டுமே நீதி/தண்டனை வழங்கப்பட்டது. பிராமணர்கள் எவ்வளவு கொடிய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு சாதி/சமூக விலக்கு மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த தண்டனை கூட சாதாரண பிராமணர்கள் வழங்க முடியாது; அதற்காகவே உயர்ந்த பிராமண நம்பூதிரிகள் இருந்தார்கள். இந்த உயர்ந்த ரக நம்பூதிரி பிராமணர்கள் யார் என்பதைப் பின்னர் பார்ப்போம்.
மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர், தன்னை விட தாழ்த்தப்பட்ட சாதி என்று கருதப்படும் ஒரு மனிதனைக் கொன்று விட்டால் கூட அதற்கு அபராதம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது.
இது போன்ற நீதி நூல்கள் என்னென்ன? அவை, யாரால், எப்போது எழுதப்பட்டது?
அந்த நீதி நூலின் பெயர், 'வியவகார மாலா'.
இந்த நூல், ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, திருவாங்கூர்/கொச்சி சமஸ்தானங்களில் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மனு ஸ்மிருதி என்ற மனு தர்மத்திலிருந்தும், வேறு சில 'சாஸ்திரங்களிலிருந்தும் எடுத்துத்
தொகுக்கப்பட்ட நீதி நூல் தான் 'வியவகார மாலா'.
மேற்கண்ட நீதி நூலைத் தொகுத்து எழுதியவர் கொச்சி, பெருமானம் என்ற ஊரைச் சேர்ந்த மகேஸ்வர மங்கலம் நம்பூதிரி என்பவர்.
1496 ஆம் ஆண்டு இந்த நூலை இவர் எழுதியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'வியவகார மாலா' என்ற நீதி நூலின் தண்டனை முறைகள் சில கீழே:
1. பிராமணர்களைக் கடுமையான சொற்களால், கடிந்து கொண்டால், அவர்களின் நாக்கை அறுத்து விட வேண்டும்.
2. பிராமணர்களுக்கு 'சூத்திரன்' அறிவுரை வழங்க முயற்சி செய்தால், அவனது வாயிலும் காதுகளிலும் கொதிக்க வைத்த எண்ணெயை ஊற்ற வேண்டும்.
3. பிராமணர்களின் அருகில் அமர்ந்தால், சூத்திரனின் இடுப்பில் சூடு வைக்கவோ அல்லது பின் பக்கத்தை (பிருஷ்டத்தை)
அறுத்தோ வீச வேண்டும்.
4. பிராமணர்களைப் பார்த்துக் காறித் துப்பினால், சூத்திரனின் உதடுகளை அறுத்து வீச வேண்டும்.
5. பிராமணர்கள் காணும் வகையில் சிறுநீர் கழித்தால், சூத்திரனின் ஆண் குறியை அறுத்து வீச வேண்டும் என்று போகின்றன தண்டனைகள்.
1810 - 1815 காலகட்டத்தில், திருவாங்கூர் சமஸ்தான மகாராணி கௌரி லட்சுமி பாய் ஆட்சிக் காலத்தில், நீதித்துறையில் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று அப்போதைய Resident/திவான், கர்னல் மன்ரோ திட்டமிட்டார். ஆனால், 'வியவகார மாலா' சட்டத்தின்படி, நீதி வழங்கும் 'மாமூல்' அப்படியே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார் மகாராணி கௌரி லட்சுமி பாய்.
ஆனாலும், தொடர்ந்து, வியவகார மாலா/மனு சாஸ்திரங்கள்/அப்போது நிலவி வந்த ஆசாரங்கள்/கிழக்கிந்தியக் கம்பெனியின் சட்டங்கள் போன்றவற்றை இணைத்து ஒரு சட்டத் தொகுப்பை, 'சட்ட வரி ஓலைகள்' என்ற பெயரில் அறிவித்தார் கர்னல் மன்ரோ.
அதன்படி, திருவனந்தபுரம், பத்மநாபபுரம், மாவேலிக்கரை, வைக்கம், ஆலுவா போன்ற இடங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் ஒரு அப்பீல் நீதிமன்றமும் நிறுவப்பட்டது.
நீதிமன்றங்களில் பிராமணர்களும், நாயர்களும் மட்டுமே நீதிபதிகளாக இருப்பார்கள். அப்பீல் நீதி மன்றங்களில் திவானும் இரு பிராமண நீதிபதிகளும் இரு நாயர் நீதிபதிகளும் அடங்கிய ஐந்து நீதிபதிகளும்; கீழ் நீதிமன்றங்களில், இரு பிராமண நீதிபதிகளும் ஒரு நாயர் நீதிபதியும் பதவியில் இருப்பார்கள்.
'வியவகார மாலா' உட்பட தர்ம சாஸ்திரங்களையும், சமஸ்தானத்தில் நிலவி வந்த, ஆசாரங்களையும் (ஆசார மரியாதை), கிழக்கிந்தியக் கம்பெனியின் சட்டங்களையும்
இணைத்து ஒரு சட்டத் தொகுப்பை உருவாக்கி, 'சட்ட வரி ஓலைகள்' என்ற பெயரில் 1811ஆம் ஆண்டு திவான்  கர்னல் மன்ரோ அறிவித்தார்.
இனி....
பிராமணர்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்பதையும், பிராமணர்களுக்கு தண்டனை
வழங்கும் உரிமை/அதிகாரம் யாருக்கு இருந்தது என்பதையும் அடுத்த பதிவுகளில் காண்போம்.
#ShahulHameed..
* P.பாஸ்கரன் உண்ணி அவர்கள் எழுதிய 'பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கேரளம்'
பக்கம் 728-729.
* வால்டர் ஹாமில்டன் அவர்கள் எழுதிய 'Description of Hindustan' Volume 2ல், பக்கம் 313.
* ஶ்ரீதர மேனன் அவர்கள் எழுதிய 'கேரள சரித்திரம்'; பக்கம் 262.
* முனைவர் டார்வின் எழுதிய 'நாடுணர்த்திய நாடார் போராட்டங்கள்' ; பக்கம் 38.
8 -7-2021
வியவகார #மாலா என்ற சனாதன சட்ட நூல், யாரால்? எப்போது எழுதப்பட்டது?  என்ற தகவல்கள் வேண்டும் என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க..

கருத்துகள் இல்லை: